For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  ரியல் லைஃபில் உயிருக்கு போராடும் திரை நட்சத்திரம்!

  |

  திரைப்பிரபலங்கள் பற்றிய அபிப்ராயங்கள் எல்லாருக்கும் உண்டு. தங்களை திரையில் இளமையாக காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காக அவர்கள் படும் பிரயத்தனங்கள் சில சமயங்களில் பெரும் அவஸ்தையினை கொடுக்க கூடியதாக மாறிடுகிறது.

  ரசிகர்களின் கைதட்டல் மூலமாக ஒவ்வொரு முறையும் தங்களின் வலியை மறந்து மேலும் செல்ல ஊந்தப்படுகிறார்கள். திரையில் பார்க்கும் நபருக்கும் நேரில் பார்க்கும் நபருக்கும் நிறைய வித்யாசங்கள் இருக்கும். வெவ்வேறு வாழ்க்கை சூழலில் வாழ்பவர்கள் நாம் பார்ப்பதை விட மிகவும் சிரமமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் தெரியுமா?

  சிலர் தங்களக்கு தாக்கியிருக்கும் நோயினைக் கூட பொருட்படுத்தாமல் சினிமாவின் மீதுள்ள காதலால் நோயுடன் போராடிக் கொண்டே ரசிகர்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பற்றிய சிறு அறிமுகம்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  அமிதாப் பச்சன் :

  அமிதாப் பச்சன் :

  பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார். சினிமாவில் பல சாதனைகளை புரிந்திருக்கிறார். கூலி (coolie) திரைப்பட படப்பிடிப்பின் போது மரணத்தின் விளிம்பிற்கே சென்று வந்தார். கூலி திரைப்பட ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும் போது 1982 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அமிதாபுக்கு விபத்து ஏற்ப்பட்டது .

  அப்போது அதிகளவு ரத்தம் வெளியேறியது அதே சமயம்.மண்ணீரல் கிழிந்து பயங்கர சேதமானது. மருத்துவ ரீதியாக அவர் இறந்துவிட்டார் என்றே சொல்லப்பட்டது. ரசிகர்கள் பலரும் கவலையில் இருக்கும் போது அதிலிருந்து மீண்டு வந்தார். வந்தது மட்டுமல்லாமல் மீண்டும் கூலி திரைப்படத்தில் வெற்றிகரமாக நடித்துக் கொடுத்தார்.

  1984 ஆம் ஆண்டு சமயத்தில் அமிதாபுக்கு myasthenia gravis என்ற நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

  இது ஒரு நரம்பியல் வியாதி. இவர்களுக்கு பார்வையில் கோளாறு இருக்கும் ஒவ்வொரு பொருளும் இரண்டு இரண்டாக தெரிந்திடும். நிலையாக உறுதியான நடை இருக்காது, தள்ளாடிக் கொண்டேயிருப்பர். இது உடல் ரீதியாக மட்டுமல்ல மனரீதியாகவும் பாதிக்க கூடும்.

  அமிதாபும் இதனால் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டார்.

  மனீஷா கொய்ராலா :

  மனீஷா கொய்ராலா :

  தொண்ணூறுகளில் மிகவும் புகழ்ப்பெற்ற நடிகை. திரையில் நடித்து பேர் வாங்கியதைப் போலவே பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கினார். 2012 ஆம் ஆண்டு இவருக்கு கர்பப்பை புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதற்கான சிகிச்சையினை மேற்கொண்டார். தற்போது நோயுடன் போராடி வென்றுள்ளர்.

  சையஃப் அலி கான் :

  சையஃப் அலி கான் :

  2007 ஆம் ஆண்டு பிப்ரவது மாதம் பாலிவுட் நடிகர் சையத் அலிகான் லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து நெஞ்சு வலிக்கிறது என்று சொன்னதையடுத்தே அவர் அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையின் முடிவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பப்ட்டிருப்பது தெரிந்தது.

  அதிலிருந்து மீண்டு வந்தவர் தற்போது எண்ணற்ற படங்களை நடித்துக் கொண்டிருக்கிறார். இவருக்கு மாரடைப்பு பரம்பரை காரணமாக வந்திருக்கிறது.

  ஹிருத்திக் ரோஷன் :

  ஹிருத்திக் ரோஷன் :

  திரைப்படங்களில் சூப்பர் ஹீரோவாக நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளைக் கொண்ட ஹிருத்திக் ரோஷன் மூளையில் ரத்த உறைவு ஏற்ப்பட்டு அதற்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

  2013 ஜூலை ஏழாம் தேதி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.மூளையில் ரத்தம் உறைந்து போனாலும் என்னுடைய தன்னம்பிக்கை உறையவில்லை அப்படியே இருக்கிறது மீண்டு வருவேன் என்றார். சொன்னது போலவே மீண்டு வந்துவிட்டார் ஹிருத்திக்.

  ரஜினி காந்த் :

  ரஜினி காந்த் :

  தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் 2011 ஆம் ஆண்டு சிங்கப்பூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு ஆறு வாரங்கள் சிகிச்சைப் பெற்றார்.

  பின்னர் உடல் பரிசோதனைக்காவும் சிகிச்சைக்காகவும் மலேசியா சென்று வந்தார். மூன்றாவது முறையாக சமீபத்தில் உடல் நலக்குறைவினால் அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றார்.

  ஷாருக்கான் :

  ஷாருக்கான் :

  செல்லமாக இவரை கிங் கான் என்றே அழைக்கிறார்கள். இவர் நடிப்பில் மட்டும் கிங் அல்ல அறுவை சிகிச்ச மேற்கொண்டதிலும் ஷாருக் தான் கிங். கிட்டதட்ட அவருக்கு 25 அறுவை சிகிச்சை வரை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

  கை,கைமணிக்கட்டு,கால் முட்டி,தோல்பட்டை,கண்கள், விலா எலும்பு என பல இடங்களில் அடிப்பட்டு அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

   சல்மான் கான் :

  சல்மான் கான் :

  2011 ஆம் ஆண்டு சல்மான் கானுக்கு trigeminal neuralgia என்ற நோய் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இது நரம்பு சம்பந்தப்பட்ட ஓர் நோய் . இந்நோய் பாதிப்புக்கு உள்ளானால் முகம் மற்றும் தாடைப் பகுதிகளில் தாங்க முடியாத வலி ஏற்ப்படும்.

  மனிதர்களால் தாங்க முடியாத வலியாக அது இருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள் . இந்த வலியினால் தன்னுடைய அன்றாட வேலைகளைச் செய்யக்கூட மிகவும் சிரமப்பட்டார்.

  தீபிகா படுகோனே :

  தீபிகா படுகோனே :

  பாலிவுட்டின் நடிகையான இவர் நீண்ட காலம் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். அதனால் அதான் எத்தகைய பாதிப்புகளை சந்தித்தேன்,என்னென்ன பிரச்சனைகள் எல்லாம் ஏற்ப்பட்டத்து அதிலிருந்து எப்படி மீண்டு வந்தேன் ஆகியவற்றை வெளிப்படையாக தன் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

  அதோடு இது போன்ற பிரச்சனைகளில் பாதிக்கப்படுபவர்களை மீட்ப்பதற்காகவே மனநல அமைப்பு ஒன்றையும் நிறுவியிருக்கிறார் தீபிகா.

  ஹக் ஜேக் மேன் :

  ஹக் ஜேக் மேன் :

  ஆஸ்திரேலிய நடிகரான இவருக்கு 2013 ஆம் ஆண்டு சருமப் புற்று நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக மூன்று முறை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

  இவர் வெளிப்படையாகவே தனக்கு புற்றுநோய் தாக்கியிருப்பதாகவும் அதற்கான சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

  நோய் பாதித்தால் சிகிச்சை எடுத்துக் கொள்ளவேண்டும். அதனை ரகசியம் காப்பதால் எந்த பயனும் இல்லை என்று சொல்லி புற்றுநோய் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தினார்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  celebrities with chronic diseases

  celebrities with chronic diseases
  Story first published: Monday, October 23, 2017, 18:12 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more