உங்களுக்கு அடிக்கடி இடது பக்கம் தலைவலிக்கிறதா? அப்போ இதைப்படிங்க...

Posted By:
Subscribe to Boldsky

தலை வலி என்பது இன்றைக்கு மிகவும் பழகி விட்ட ஒன்றாக இருக்கிறது. இன்றைய அவசர உலகில் ஒரு மாத்திரையை விழுங்கி விட்டு கணினி முன்னால் உட்கார்ந்து வேலையைத் தொடரும் இளைஞர்கள் பலருக்கும் அதனுடைய வீரியம் தெரிவதில்லை.

தாங்களாகவே ஒரு காரணத்தை நினைத்துக் கொண்டு அசட்டையாக விடுவது தான் உங்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக வருகிறது. தலைவலியில் பல வகைகள் இருக்கின்றன. அவை எல்லாவற்றையும் ஒரே மாதிரி பார்ப்பது, வெறும் தலை வலி மாத்திரை மற்றும் ஆண்ட்டி பயாட்டிக் சாப்பிடுவது, பெறும் பின் விளைவுகளை உங்களுக்கு ஏற்படுத்தக்கூடும்.

சிலருக்கு விட்டு விட்டு வருவது, அல்லது குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் வருவது என ஒவ்வொருவருக்கும் தலை வலி வேறுபடும். எப்போதும் தலைவலியை மட்டும் அசட்டையாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.

Causes for headache on left side

தற்போது உங்களுக்கு திடீரென்றோ அல்லது ஏதேனும் ஒரு வேலையில் ஈடுப்பட்டுக் கொண்டிருக்கும் போது இடது பக்கம் தலை வலித்தால் என்ன காரணம் என்று தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காரணங்கள் :

காரணங்கள் :

தலைவலிக்கு ஏரளமான காரணங்கள் இருக்கின்றன. வாழ்க்கை முறை மாற்றம்,இன்ஃபெக்‌ஷன்,அலர்ஜி, நரம்பு தொடர்பான பிரச்சனை அவற்றில் முதலாவதாக நாம் பார்க்க இருப்பது வாழ்க்கை முறை மாற்றங்கள். அதாவது நம்முடைய அன்றாட நாளில் நாம் செய்திடும் சின்ன சின்ன தவறுகளால் கூட இடது பக்கம் தலை வலி ஏற்படலாம்.

மதுப்பழக்கம் :

மதுப்பழக்கம் :

பீர்,வைன் உட்பட எல்லா வகையான மது குடிப்பதும் தலைவலியை ஏற்படுத்தும். குறிப்பாக எத்தனால் அதிகமிருக்கும் பானங்கள் யாவும் இப்பிரச்சனையை ஏற்படுத்தக்கூடியது. இது நம் ரத்தநாளங்களை தூண்டிவிட்டு கெமிக்கல் ரியாக்‌ஷன் ஏற்படுத்துகிறது. இதனால் தான் தலை வலி ஏற்படுகிறது.

உணவைத் தவிர்த்தல் :

உணவைத் தவிர்த்தல் :

இது நம்மில் பெரும்பாலானோர் செய்கிற வேலை. வேலையில் மும்முரமாக இருக்கிறேன் என்று சொல்லி நேரம் காலம் தவறிச் சாப்பிடுவது, இன்னும் சிறப்பாக உணவையே சாப்பிடாமல் தவிர்ப்பது ஆகியவற்றை செய்து கொண்டிருக்கிறோம். அவர்களுக்கு இப்பிரச்சனை கண்டிப்பாக ஏற்படும்.

நம்முடை மூளை சிறப்பாக இயங்க அதற்கு குளுக்கோஸ் தேவை. அது நீங்கள் சாப்பிடும் உணவின் மூலமாக மூளை பெற்றுக் கொள்கிறது. நீங்கள் உணவு எடுத்துக் கொள்ளவில்லை எனில் மூளைக்குத் தேவையான குளுக்கோஸ் கிடைக்காது. அதை விட உங்கள் உடலில் சர்க்கரை அளவு குறைந்தால் உங்களுக்கு ஹைப்போக்ளைசீமியா ஏற்படும். அதற்கான அறிகுறியாக கூட இந்த தலை வலி இருக்கலாம்.

மன அழுத்தம் :

மன அழுத்தம் :

இன்றைய இளைஞர்களுக்கு நினைத்தது நடந்து விட வேண்டும். அதுவும் உடனேயே நடந்து விட வேண்டும். அப்படியில்லை அவர்கள் முயற்சித்தது நடக்கவில்லை எனில் வேறு எப்படி முயற்சிக்கலாம். இன்னும் தீவிரமாக முயற்சிக்க வேண்டும் என்று யோசிக்காமல் உடனேயே சோர்ந்து விடுவார்கள்.

அந்த சோர்வு சில நேரங்களில் அவர்களை தாழ்வு மனப்பான்மையிலும், மன அழுத்தத்திலும் அழைத்துச் சென்று விடுகிறது. மிகத் தீவிரமான மன அழுத்தம் இருந்தாலும் இப்படியான இடது பக்க தலைவலிப் பிரச்சனை உண்டாகும்.

மன அழுத்தம் ஏற்பட்டால் அப்போது உருவாகும் சில கெமிக்கல்கள் ரத்த ஓட்டத்தை சீர்குலைத்து தலைவலியை ஏற்படுத்துகிறது.

உணவு :

உணவு :

உங்களுக்கு ஒவ்வாத சில உணவுகளைச் சாப்பிட்டால் அவை உங்களுக்கு தலைவலியை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக பதப்படுத்தப்பட்ட உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது இப்பிரச்சனை உண்டாகும்.

இன்றைக்குத் தான் ஹோட்டலில் உட்கார்ந்து துரித உணவுகளை சாப்பிடுவது தான் ஃபேஷனாக இருக்கிறதே.

தூக்கமின்மை :

தூக்கமின்மை :

இரவு வெகு நேரம் தூங்காமல், காலையில் சீக்கிரம் எழுவது என ஒரு நாளைக்கு உங்களுக்குத் தேவையான தூக்கம் கிடைக்கவில்லை என்றால் கூட இப்படியான தலைவலி ஏற்படும். மூளைக்கு நீங்கள் கண்டிப்பாக ஓய்வு கொடுத்தாக வேண்டியது அவசியம். அது கிடைக்கவில்லை என்றால் இப்படியான தொந்தரவுகளை கொடுக்கும்.

 இன்ஃபெக்‌ஷன் மற்றும் அலர்ஜி :

இன்ஃபெக்‌ஷன் மற்றும் அலர்ஜி :

நோய்த் தொற்றினால் ஏற்படக்கூடிய காய்ச்சலுக்கு தலைவலி ஏற்படும். இதைத் தவிர சைனஸ் பிரச்சனை, ஏற்பட்டால் இந்த தலைவலி ஏற்படும். இதைத் தவிர தீவிரமான அலர்ஜி ஏற்பட்டால் கூட தலை வலி ஏற்படும்.

மாத்திரைகள் :

மாத்திரைகள் :

சில வகை மாத்திரைகளை தொடர்ந்து எடுக்கும் பட்சத்தில் அவை தலைவலியை உண்டாக்கிடும். குறிப்பாக ஆஸ்ப்ரின், டைலினால், அட்வில், நேப்ரோசின்,எக்ஸிட்ரின் ஆகியவை.

 நரம்பு பிரச்சனைகள் :

நரம்பு பிரச்சனைகள் :

உங்களின் ஸ்பைனால் கார்டுக்கு மேலே இருக்கும் ஆக்டிபல் நரம்பில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் கூட உங்களுகு தலைவலி உண்டாகும். சில நேரங்களில் தலையில் இடது பக்கம் இருக்கும் நரம்பு மற்றும் ரத்த ஓட்டத்தில் மாற்றங்கள் நிகழ்வது, ஆகியவை முக்கிய காரணங்களாக இருக்கின்றன.

மற்றவை :

மற்றவை :

இதைத் தவிர அழுக்கான அல்லது உங்கள் தலைக்கு பொருந்தாத ஹெல்மெட் அணிவது, க்ளூக்கோமா எனப்படுகிற கண்களுக்கு பிரசர் ஏற்படும் பிரச்சனை, பார்வைக்குறைபாடு, அதிகமான ரத்த அழுத்தம்,பக்கவாதம், மூளையில் கட்டி ஆகியவையும் இடது பக்க தலைவலிக்கு ஓர் காரணமாக இருக்கலாம்.

எப்போது மருத்துவரை சந்திக்கலாம் ? :

எப்போது மருத்துவரை சந்திக்கலாம் ? :

நீங்கள் ஒரு வேலை செய்து கொண்டிருக்கும் போது திடீரென தலைவலி ஏற்பட்டால் உடனடியாக அந்த இடத்தை நகர்ந்து விடுங்கள். அல்லது செய்யும் வேலையை நிறுத்தி விட்டு உங்கள் கவனத்தை திசை திருப்புங்கள். சூடாக காபி ,டீ ஏதாவது குடியுங்கள்.

இது நீண்ட நேரம் தொடர்ந்தால் மருத்துவரை சந்திக்க வேண்டும். தூக்கத்தில் தலை வலி ஏற்பட்டு முழிப்பு வருவது, தாங்கமுடியாத வலி, கண்பார்வை மங்குதல், சோர்வாக இருப்பது, முடிவெடுப்பதில், சட்டென ஒரு விஷயத்தை நினைவுக்கு கொண்டு வர முடியாமல் இருப்பது, தொடர்ந்து கூர்ந்து கவனிக்க முடியாமை, ஆகியவை இருந்தால் நீங்கள் உடனடியாக மருத்துவரை சந்திக்க வேண்டியது அவசியம்.

தண்ணீர் :

தண்ணீர் :

நீரை கொஞ்சம், கொஞ்சமாக சிப் செய்து பருகினால், உங்கள் தலை வலி மெல்ல குறையும். உங்கள் உடலில் நீரின் அளவு அதிகரிக்கும் போது, தலைவலி மெதுவாக குறையும் என கூறப்படுகிறது.

கிராம்பு :

கிராம்பு :

சூடு செய்த கிராம்பை கைக்குட்டையில் மடித்து, அதை மூச்சினால் உள்ளிழுத்தால், ஒரு நிமிடத்தில் தலைவலி குறைந்துவிடும்.

துளசி டீ :

துளசி டீ :

டீ, ப்ளாக் காபியை விட, விரைவில் தலைவலியை போக்க கூடிய திறன் கொண்டது துளசி டீ. தலை வலிக்கான ஓர் சிறந்த வீட்டு நிவாரணியாக துளசி டீ கருதப்படுகிறது.

உப்பு ஆப்பிள் :

உப்பு ஆப்பிள் :

அடுத்த முறை உங்களுக்கு தலைவலி ஏற்பட்டால், இந்த எளிய வீட்டு நிவாரண முறையை பின்பற்றி பாருங்கள். ஆப்பிளை வெறுமென மென்று சாப்பிடாமல், அறுத்த ஆப்பிளில் அதன் மேல் உப்பு கொஞ்சமாக தூவி சாப்பிட்டால் தலைவலி குறையும்.

பெப்பர் புதினா :

பெப்பர் புதினா :

தலைவலியை போக்க உதவும் மற்றுமொரு சிறந்த டீ பெப்பர் புதினா டீ.ப்ளாக் டீயில் ஓரிரு புதினா இலைகளை சேர்த்து பருகினால் தலைவலி ஒரு நிமிடத்தில் குறைந்துவிடும்.

சிலர் ப்ளாக் டீயில் பால் சேர்த்து பருகுவார்கள். ஆனால், அவ்வாறு பால் சேர்ப்பதை தவிர்த்துவிடவும்.

 இஞ்சி :

இஞ்சி :

இளசான ஓர் சிறு துண்டு இஞ்சியை வாயில் போட்டு மெல்லுங்கள். இவ்வாறு மெல்லுவதால் ஒரு நிமிடத்தில் உங்கள் தலைவலி குறைய ஆரம்பித்துவிடும். இல்லையெனில் இஞ்சிச்சாறு எடுத்தும் குடிக்கலாம். இது, தலைவலியில் இருந்து விரைவாக குணமடைய உதவும் சிறந்த வீட்டு நிவாரண முறையாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Causes for headache on left side

Causes for headache on left side
Story first published: Thursday, November 30, 2017, 9:53 [IST]