நீங்கள் தினசரி தெரிந்தும் தெரியாமலும் செய்யும் இவை உங்கள் மூளையை பாதிக்கும் தெரியுமா?

Written By: Lakshmi
Subscribe to Boldsky

நமது உடலில் உள்ள மிகவும் முக்கியமான உறுப்புகளில் மூளையும் ஒன்று. இந்த மூளை தினசரி நீங்கள் தெரிந்தும் தெரியாமலும் செய்யும் சில பழக்கங்கள் மற்றும் உங்களது வாழ்க்கை முறையால் பாதிக்கப்படும் என்பது பற்றி தெரியுமா? இது உங்களது உடல் செயல்பாடுகளை பாதிக்கும் அறிகுறிகள் தெரியாவிட்டாலும், மூளை உள்ளே பாதிப்படைகிறது. இதோ நீங்கள் மூளைக்கு செய்யும் கெடுதல்கள் என்னவென்று காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அதிகமான சக்கரை

அதிகமான சக்கரை

நீங்கள் தினசரி அதிகமான சக்கரையை எடுத்துக்கொண்டால் மூளை பாதிப்படையும். பாட்டிலில் அடைக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட குளிர்பானங்களை குடிப்பது இரத்ததில் அதிகமான சக்கரையை சேர்க்கும். இதனால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் உடலில் தங்குவது இல்லை.

காற்று மாசுபாடு

காற்று மாசுபாடு

முளைக்கு போதுமான அளவு ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. தொடர்ச்சியாக மாசடைந்த காற்றை சுவாசிப்பது மூளையை பாதிக்கும்.

அதிகமாக சாப்பிடுதல்

அதிகமாக சாப்பிடுதல்

உணவை அதிகமாக சாப்பிடுவது உடல் எடையை மட்டுமல்லாது மூளைக்கும் கெடுதல் விளைவிக்கும்.

குறைவாக பேசுதல்

குறைவாக பேசுதல்

நமது மூளை சதைகளை போன்றது இதனை வலிமையாக்க பயிற்சிகள் தேவை. இதற்கு பேசுதல் ஒரு சிறந்த பயிற்சியாக இருக்கும். பிறருடன் பேசும் போது உங்களது மூளை சிறப்பாக செயல்படும்.

குறைவான தூக்கம்

குறைவான தூக்கம்

ஒரு நாளைக்கு ஆறு மணி நேரத்திற்கு குறைவாக தூங்குபவர்களுக்கு மூளையில் உள்ள செல்கள் பாதிப்படையும். மேலும் மூளை களைப்பாக இருக்கும். இது சுவாசித்தல் மற்றும் கண் பார்வை குறைப்பாட்டை உண்டாக்கும்.

காலை உணவை தவிர்ப்பது

காலை உணவை தவிர்ப்பது

தொடர்ந்து காலை உணவை தவிர்ப்பது உடலுக்கு சத்து பற்றாக்குறையை உண்டாக்கும். காலை உணவை தவிர்ப்பது இரத்த சக்கரை அளவு மற்றும் ஊட்டசத்தை உடலின் மற்ற இடங்களுக்கு கடத்துவதில் சிக்கல்களை உண்டாக்கும்.

செல்போன்

செல்போன்

செல்போனில் இருந்து வரும் ரேடியேசன் உங்கள் உடல்நலனை பாதிக்கும். தூங்கும் போது செல்போனை அருகில் வைத்துக்கொண்டு தூங்குவதும் கூடாது.

யோசிக்காமல் இருப்பது

யோசிக்காமல் இருப்பது

தினசரி ஏதாவது நல்ல விஷயங்களை யோசிப்பது. புதிய விஷயங்களை செய்வது பற்றிய சிந்தனைகள் மூளைக்கு பயிற்சியாக அமையும். மூளை எந்த நேரமும் ஓய்வாகவே இருப்பதும் தவறு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Brain Damaging Everyday Habits

Brain Damaging Everyday Habits
Subscribe Newsletter