For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பல் வலி உடனடியா குணமாக இந்த 5 வைத்தியங்களை ட்ரை பண்ணுங்க

பல் பிரச்சனைகளுக்கு வீட்டிலிருந்தபடியே நிவாரணம் கிடைக்க சில எளிய டிப்ஸ்

|

இளம் பருவத்தினர் பலரும் சந்திக்கும் மிக முக்கிய பிரச்சனைகளில் ஒன்று பல் வலி. உணவு சாப்பிடுவதற்கு கூட சிரமமளிக்கும் அதனை தவிர்க்க சில யோசனைகள்

Best Remedies For tooth ache

முறையாக பல் விளக்காமல் இருப்பது, தவறான பிரஷ்ஷிங் முறை, எக்கச்சக்கமான சர்க்கரை பொருட்களை சாப்பிடுவது போன்றவை பல்லுக்கு பிரச்சனையை உண்டாக்கிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உப்புத்தண்ணீர் :

உப்புத்தண்ணீர் :

ஈறு பகுதி வீங்கியிருந்தாலோ அல்லது வாயில் பாக்டீரியா தொற்று வந்திருந்தால் இதனை மேற்க்கொள்ளலாம். தண்ணீரில் இரண்டு டேபிள் ஸ்பூன் உப்பு போட்டு நன்றாக கலந்து விடுங்கள். பின்னர் அந்த தண்ணீரைக் கொண்டு வாயை கொப்பளிக்க வேண்டும்.

இப்படிச் செய்தால் பாக்டீரியா தொற்று இருந்தால் சரியாகும்.

மிளகு :

மிளகு :

இதனை நேச்சுரல் தெரபி என்று கூட சொல்லலாம். இதனைச் செய்வதால் பற்கூச்சம், வீக்கம், வாய்ப்புண், சொத்தைப்பல் , போன்றவை நிவர்த்தியாகும். இது மதமதப்பு தன்மையை கொடுக்கும்.

ஐந்து மிளகு மற்றும் இரண்டு கிராம்பு எடுத்து அப்படியே மென்று சாப்பிடலாம் அல்லது இரண்டு பொடியாக்கி, அந்த பொடியை நோய்த்தொற்று ஏற்பட்ட இடத்தில் தடவிக்கொள்ளலாம்.

ஆலிவ் வேரா ஜெல் :

ஆலிவ் வேரா ஜெல் :

இதில் ஆன்ட்டி செப்ட்டிக் ப்ராப்பர்டீஸ் நிறையவே இருக்கிறது. இவை பற்களில் தடவுவதால் பாக்டீரியா பரவாமல் தடுக்கப்படும். ஈறு வீங்கியிருந்தால் இந்த ஜெல்லைக் கொண்டு லேசான அழுத்தம் கொடுத்து வர வேண்டும். தினமும் இப்படிச் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

எலுமிச்சை :

எலுமிச்சை :

ஒரு கிளாஸ் சூடான தண்ணீருடன் இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து கொள்ளுங்கள். பின்னர் அதனைக் கொண்டு நன்றாக வாயை கொப்பளிக்க வேண்டும். இப்படிச் செய்தால் பாக்டீரியா அழிவதோடு, பாக்டீரியாவால் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்திட முடியும்.

இஞ்சி :

இஞ்சி :

இஞ்சியை அரைத்து விழுதாக்கிக் கொள்ளுங்கள் அத்துடன் இரண்டு பூண்டு பற்களை சேர்த்து நன்றாக நுணுக்கி பற்களில் தடவி ஐந்து நிமிடம் அப்படியே வைத்திருங்கள். இப்படி வைத்திருக்கும் போது இஞ்சி விழுதை முழுங்கிடாமல் கவனமாக இருக்க வேண்டும். ஐந்து நிமிடம் கழித்து அதனை கழுவிவிடலாம்.

இது அதீத வலிக்கு ஒரு ப்ரேக் கொடுப்பது போல சில நாட்களுக்கு நிவாரணம் வழங்குமே தவிர முற்றிலும் தீர்வாக அமையாது. பற்கள் பாதிக்கப்படுவதற்கு முன்னதாக முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Best Remedies For tooth ache

Best Home Remedies for swollen gums
Story first published: Monday, July 31, 2017, 15:08 [IST]
Desktop Bottom Promotion