For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மௌன விரதம் இருப்பதால் உங்கள் வாழ்வில் நிகழும் மாற்றங்கள் என்ன தெரியுமா?

மௌன விரதம் இருப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை இந்த கட்டுரையில் காணலாம்.

By Gnaana
|

விரதங்களில் உயர்ந்ததாக கூறப்படுவது, மௌன விரதம். உடலின் அனைத்துவகை இயக்கங்களை கட்டுப்படுத்துவதே, மௌனவிரதம். பேச்சு, எண்ணம், செயல் இவற்றை நிறுத்தி, மனதை இறை சிந்தனையில் செலுத்தி இருப்பதே, மௌன விரதமாகும்.

என்னை பட்டினி வேண்டுமானாலும் போடுங்கள் இருந்து விடுகிறேன், ஆனால், பேசாமல் இரு என்றால், என்னால் முடியாது, என்று நம்மில் அனைவரும் ஏகோபித்த குரலில் எதிர்ப்பு தெரிவிக்கும் இந்த மௌன விரதம், உண்மையில் அத்தனை கடினமா? அவ்வளவு சிரமப்பட்டு இருக்கும் அளவுக்கு அதில் என்ன, சிறப்பு இருக்கிறது என்று அனைவரும் யோசிக்கலாம், அப்படி என்ன சிறப்பு என்பதை பார்ப்போம், வாருங்கள்.

Benefits of taking a vow of silence

உண்ணாவிரதம், உடலை பட்டினி போட்டு, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது,
மௌன விரதம், மனதை பட்டினி போட்டு, மன எண்ணங்களை மேம்படுத்துவது!

மௌன விரதம், ஞானிகளாலும், பல்வேறு சமய பெரியோர்களாலும், மோன நிலையில் இறை நிலையை அடைய, அனுஷ்டிக்கப்பட்டது.

மௌன விரதம் என்றால் பேசாமல் இருப்பது, எப்படி பேசாமல் இருப்பது? வாயாலும், மனதாலும், செயலாலும் பேசாமல், ஓரிடத்தில் அமைதியாக இருப்பதே ஆகும்.
ஆழ்நிலையில் மௌனமாக இருப்பதே, மௌன விரதம்!. பேசிப் பயனிலா சூழலில், மௌனமாக இருப்பது, சிறந்த தீர்வாகும்.

மௌன விரதம் என்பது, தவ ஞானிகளுக்கு சிறந்த ஆன்மீக அரணாக விளங்கியது, பகவான் இரமணரும், காஞ்சி பெரியவரும் அவ்வப்போது மௌன விரதம் இருந்து மோன நிலையில் இறையுடன் கலந்திருப்பர். 1899ல் குடந்தையில் சித்தியடைந்த மகான் மௌன குரு சுவாமிகள் என்ற மகாதவஞானி, மௌனமாக இருந்தே, அடியார்களுக்கு அருள் பாலித்தவர்.

சில நாட்களுக்கு முன்னர் நிறைவுற்ற திருச்செந்தூர் திருமுருகனின் கந்த ஷஷ்டி விழாவின் கடைசி நாளில், முருகனடியார்கள், ஒரு வார காலம் அனுஷ்டித்த விரதத்தை, மௌன விரதம் இருந்தே நிறைவு செய்வர். இதன் மூலம், தங்கள் கோரிக்கைகளை சீரிய முறையில் முருகப்பெருமான் நடத்தித் தருவார் என்பது, முருகனடியார்களின் நம்பிக்கை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Benefits of taking a vow of silence

Benefits of taking a vow of silence
Story first published: Tuesday, October 31, 2017, 16:55 [IST]
Desktop Bottom Promotion