For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அல்சர், அஜீரணக் கோளாறுகளை சரிப்படுத்தும் அற்புத ரைஸ் டீ!!

உங்கள் அஜீரணக் கோளாறுகளை போக்க இயற்கை முறை சிறந்தது. அதிலும் அரிசி தண்ணீர் முறை மிகவும் பயன் அளிக்க கூடியது

By Suganthii Rajalingam
|

உதாரணமாக நீங்கள் உங்கள் ஃப்ரண்ட் மேரேஜ்க்கு போறீங்க. உங்க கண்ணு முன்னாடி நாக்குக்கு விருந்தளிக்கும் வகையில் நிறைய உணவு வகைகள் இருந்தா என்ன செய்வீங்க. ஒரு புடி புடிச்சிட மாட்டீங்க.

ஆனா காலையில் எழுந்திருக்கும் போது தான் தெரியும் வயிறு பயங்கரமாக வலிக்கிறது. இந்த அஜீரணக் கோளாறால் ரொம்ப அவதிப்பட நேரிடும். இந்த பிரச்சினை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாரையும் விட்டு வைப்பதில்லை. இதனால் தொடர்ந்து பல வித உடல் பிரச்சினைகள் வருவதோடு கடுமையான தாங்க முடியாத வலி, அசெளகரியத்தையும் ஏற்படுத்துகிறது.

ரைஸ் டீ குடித்தால் என்ன நடக்கும் எனத் தெரியுமா

சில உடல் பிரச்சினைகளான சளி, இருமல், காய்ச்சல், தலைவலி, அஜீரணம் போன்றவற்றை கண்டு கொள்ளலாமல் விட்டால் தீவிர உடல் நல பிரச்சினைகளை ஏற்படுத்தி விடுகிறது. எனவே இதை உடனே சரி செய்வது மிகவும் முக்கியம்.

இந்த அஜீரணக் கோளாறுகள் என்பது உணவை சரியாக சீரணிக்க முடியாததால் வருகிறது. சில சமயங்களில் இந்த அஜீரணக் கோளாறுகள் எதனால் ஏற்பட்டது என்ற காரணத்தை கூட அறிய முடிவதில்லை. இது ஏற்படுவதற்கான சில அறிகுறிகள் அசிடிட்டி, எதுக்களித்தல், நெஞ்செரிச்சல், வயிற்றுவலி, பேதி, வாந்தி, குமட்டல் போன்றவை ஆகும்.

இந்த 1/2 டம்ளர் ஜூஸ் இரத்த அழுத்தம், இதய நோய், உடல் பருமன் பிரச்சனைகளைப் போக்கும் தெரியுமா?

இந்த அஜீரணக் கோளாறுகள் ஆரோக்கியமற்ற உணவுகளான ஆயில், காரசாரமான உணவுகளை சாப்பிடுவதாலும், அல்சர், மருந்துகளினால் பக்க விளைவுகள், ஹார்மோன் சமநிலையின்மை, மன அழுத்தம் போன்றவற்றால் ஏற்படுகின்றன. நீண்ட காலமாக இருக்கும் அஜீரணக் கோளாறுகள், வயிறு அல்சர் மற்றும் குடல் புற்று நோய்க்கு வழிவகுக்கின்றன.

எனவே இதை உடனே ஆரம்ப நிலையிலேயே சரி செய்ய வேண்டும். இதற்கு இயற்கை முறை மிகவும் சிறந்தது. வீட்டிலேயே தயாரிக்கும் ரைஸ் டீ இந்த பிரச்சினையை எளிதாக சரி செய்கிறது. சரி வாங்க அதை எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையான பொருட்கள் :

தேவையான பொருட்கள் :

அரிசி - 1 கப்

தண்ணீர் - 3 கப்

தேன் - 1 டேபிள் ஸ்பூன்

 செய்முறை :

செய்முறை :

அரிசியை கொடுத்துள்ள அளவு தண்ணீரில் கலந்து கொதிக்க வைக்க வேண்டும். எப்பொழுது கொதிக்க ஆரம்பிக்கிறதோ அப்பொழுது அந்த அரிசி தண்ணீரை வடிகட்டி கொள்ளவும்.

இதனுடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்க்க வேண்டும்.

உங்கள் ரைஸ் டீ இப்பொழுது ரெடி

எப்போது சாப்பிடலாம்?

எப்போது சாப்பிடலாம்?

உங்கள் இரவு சாப்பாட்டுக்கு பின்னர் இதை தினமும் பருக வேண்டும். இதனால் உங்கள் அஜீரணக் கோளாறுகளிலிருந்து விடுபடலாம்.

நன்மைகள் :

நன்மைகள் :

இந்த டீயை தொடர்ந்து பருகி வந்தால் அஜீரணக் கோளாறுகளிலிருந்து எளிதில் விடுபடலாம். இதனுடன் ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கங்கள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேற்கொண்டால் நல்ல பயன்கள் கிடைக்கும்.

வாழ்க்கை முறை :

வாழ்க்கை முறை :

நேரத்திற்கு சாப்பிடுதல், சத்தான சமமான உணவுகள், ஜங்க் ஃபுட் தவிர்த்தல், உடற்பயிற்சி, மன அழுத்தத்தை தவிர்த்தல் போன்றவற்றையும் மேற்கொண்டால் விரைவிலேயே நல்ல பலனை காணலாம். ஆரோக்கியமற்ற உணவு முறைகளை பின்பற்றி கொண்டே இருந்தால் இந்த ரைஸ் டீ உங்களுக்கு சிறந்த பலனை தராது.

அஜீரணக் கோளாறு :

அஜீரணக் கோளாறு :

இந்த ரைஸ் டீ யில் அதிகமான ஊட்டச்சத்துக்களான ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், விட்டமின்கள் போன்றவை உள்ளன. இந்த சத்துக்கள் உங்கள் வயிற்றில் சுரக்கும் அமிலத்தன்மையை நடுநிலையாக்கி அஜீரணக் கோளாறுகளை சரி செய்கிறது. மேலும் இந்த டீ உங்கள் நெஞ்செரிச்சல் மற்றும் அமிலத்தன்மையை சரி செய்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Try This Homemade Rice Tea Remedy For An Upset Stomach!

Try This Homemade Rice Tea Remedy For An Upset Stomach!
Story first published: Thursday, August 3, 2017, 18:06 [IST]
Desktop Bottom Promotion