உங்களுக்கு குறிப்பிட்ட இந்த பேக்டீரியாவின் தாக்கம் அதிகம் என்பதன் அறிகுறிகள்!!

Written By:
Subscribe to Boldsky

இப்போது இந்த நொடியில், 30% ஸ்டெஃபைலோ கோக்கஸ் பாக்டீரியா உங்கல் மூக்கில் குடியிருக்கலாம் என்றால் நம்ப முடிகிறதா?

ஸ்டெபைலோ கோக்கஸ் என்னும் பேக்டீரியாவிற்கு சாதகமாக நமது உடலில் வெப்ப நிலை அதற்கு ஃப்ரெண்ட்லியாக இருப்பதால், இங்கே வசிக்கிறது.

4 signs that you have a Staph infection

நமது சருமத்தில், மூக்கில் மற்றும் ஆசன வாய்ப்பகுதியில் அது அதிகம் வசிக்கிறது. ஆனால் இந்த பேக்டீரியக்கள் இந்த பகுதிகளில் இருந்தால் நமக்கு எந்த விதமான தீங்கும் தருவதில்லை. ஆனால் அவை இந்த பகுதியையும் தாண்டி மற்ற இடங்களுக்கு ஊடுருவும்போது நோய்கள் உருவாகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கொப்புளங்கள் :

கொப்புளங்கள் :

உங்களை கொசு கடித்ததாக வைத்துக் கொள்வோம். உங்கள் கைகளால் மூக்கையோ சருமத்தையோ சொறிந்திருப்பீர்கள். அதே விரல்களினால் கொசு கடித்த இடத்தில் சொறியும்போது அங்கே சருமம் பிளவுபட்டி விரல்களிலிருக்கும் ஸ்டெஃபைலோகோக்கஸ் பாக்டீரியா உள்ளே சென்று வீக்கத்தை உண்டாக்கி கொப்புளமாக மாற்றுகிறது.

ஃபுட் பாய்ஸன் :

ஃபுட் பாய்ஸன் :

நீங்கள் சாப்பிட்ட உணவுகளின் மூலம் ஸ்டெஃபைலோகோக்கஸ் பரவினால் அவை நச்சாக மாறி வாந்தி, பேதி, வயிற்று வலி ஆகிய்வற்றை உண்டாக்கும். இந்த பாதிப்பு, பேக்டீரியா வயிற்றில் சென்ற 6 மணி நேரத்திற்குள் உண்டாகும்.

காய்ச்சல் :

காய்ச்சல் :

உங்கள் ரத்தத்தின் மூலமாக இந்த பேக்டீரியா பரவினால் உடனடியாக காய்ச்சல் ஏற்படும். இதற்கு பேக்டிரீமியா என்று பெயர். இவை படிப்படியாக ரத்த குழாயிலிருந்து இதயம், எலும்பு என மற்ற உறுப்புகளுக்கும் பரௌம் அபாயம் உள்லது. இந்த வகையான காய்ச்சலில் ஒன்றுதான் நிமோனியா.

டாக்ஸிக் ஷாக் சிண்ட்ரோம் :

டாக்ஸிக் ஷாக் சிண்ட்ரோம் :

எப்போது ஸ்டெஃபைலோ கோக்கஸின் நச்சு அதிகம் ஏற்படுகிறதோ அவை இந்த வகையான டாக்ஸிக் ஷாக் சிண்ட்ரோமை வரவழைக்கும். இதனால் திடீரென காய்ச்சல், வாந்தி, தலைவலி, உடல் வலி, தசை பிடிப்பு, சரும அலர்ஜி ஆகியவை உண்டாகும்.

 இதனை எப்படி தடுக்கலாம்?

இதனை எப்படி தடுக்கலாம்?

கைகளை சுத்தமாக கழுவுதல் முக்கியம். குறிப்பாக உணவு சாப்பிடும்போது காயங்களை தொடுவதற்கு முன்னாலும் கைகளை கழுவிக் கொள்ளுங்கள். முக்கியமாக காயங்கள் இருக்கும்போது ஜிம்மில் இருக்கும் சாதனங்களை கையாளும்போது எச்சரிக்கை அவசியம் என்று மருத்துவர்கல் கூறுகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

4 signs that you have a Staph infection

4 signs that you have a Staph infection
Story first published: Monday, January 16, 2017, 12:45 [IST]