உங்கள் உடலில் ஏதேனும் ஒரு வழியில் ரத்தக் கசிவு ஏற்படுகிறதா? நீங்கள் செய்ய வேண்டியவை

Posted By: Staff
Subscribe to Boldsky

உங்களுடைய சிறுநீர் அல்லது மலத்தில் எப்பொழுதாவது ரத்தம் வருவது பிரச்சனைக்குரிய விஷயமல்ல; எனினும், இந்த பிரச்சினை திரும்ப திரும்ப ஏற்படுகின்றது எனில் அதை சோதித்து அதற்கான காரணத்தை தெரிந்து கொள்வது மிகவும் முக்கியமானது.

சில நேரங்களில், உடலில் ஏற்படும் தொற்று அல்லது உடலில் உள்ள தீமை தரும் பாக்டீரியாக்கள் இந்த உடல் திரவங்கள் வழியே இரத்ததை வெளியேற்ற காரணமாகின்றன.

மருத்துவ நிபுணர்களின் கூற்றுப் படி, சிறுநீரில் வெளிவரும் இரத்தம் சிறுநீர் பாதை நோய் தொற்று (யுடிஐ) அல்லது சிறுநீர்ப்பை தொற்றுக்கான அறிகுறியை குறிக்கும். இதன் காரணமாக அதிக காய்ச்சல் மற்றும் தாங்க முடியாத வலி உண்டாகலாம்.

மறுபுறம், மலத்தில் இரத்தம் கண்டறியப்பட்டால் அது டைவெர்டிகுலார்' நோய்க்கான அடையாளமாக இருக்க முடியும். எனவே இதற்கான காரணத்தை விரைவாக கண்டறிய வேண்டும். இவ்வாறு உடல் திரவங்களில் காணப்படும் இரத்தமானது புற்றுநோய் மற்றும் பல்வேறு அபாயமான நோய்களின் அறிகுறிகளாக இருக்கலாம். எனவே இதற்கான காரணத்தை பரிசோதித்து அறிவது மிகவும் அவசியமானது.

சிலநேரங்களில், வெளியே நிழவும் அதிக வெளியே வெப்பநிலை காரணமாக உங்களுடைய உடல் நீர் வெளியேறி அல்லது உங்களுக்கு நீர் பற்றாக்குறை அதிகரித்து அதன் காரணமாக உங்களூடைய உடல் திரவங்களின் வழியே சிறிதளவு இரத்தம் வெளியேறலாம். எனவே, நீங்கள் இந்த உடல் திரவங்களில் இரத்தத்தை கண்டறிந்தால் என்ன செய்ய வேண்டும் என தெரிந்து கொள்ள மேலே தொடர்ந்து படியுங்கள்.

what do you do if you find blood in any of thses body fluid

சிறுநீரில் இரத்தம்

நீங்கள் சிறுநீர் கழிக்கும் போது உங்கள் சிறுநீரில் இரத்தத்தை பார்த்ததுண்டா? நீங்கள் சிறுநீர் கழிக்கும் போது உங்களுக்கு எரிச்சல் உணர்வு ஏற்படுகின்றதா? மேல் கூறிய கேள்விகளுக்கு உங்களுடைய பதில் ஆம் என்றால், நீங்கள் சிறுநீர் பாதை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்க அதிக சாத்தியங்கள் உள்ளது.

இந்த அறிகுறிகளுடன் சேர்த்து கீழ் முதுகில் அதிக வலி மற்றும் காய்ச்சல் இருந்தால், அது சிறுநீரக நோய்க்கான அறிகுறியாகும். அவ்வாறு இருந்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சையை தொடங்கி நுண்ணுயிர் எதிர்ப்பு மாத்திரைகளை எடுத்துக் கொள்ளத் தொடங்குங்கள்.

what do you do if you find blood in any of thses body fluid

வாந்தியில் இரத்தம்

நீங்கள் வாந்தி எடுக்கும் பொழுது அதில் இரத்தம் கலந்து வருவதை ஆபத்தான அறிகுறியாக மட்டுமே நாம் கருத முடியும். மருத்துவ நிபுணர்களின் கூற்றுப் படி, உங்களூடைய வயிறு அல்லது உணவுக்குழாயில் ஏற்படும் இரத்தப்போக்கானது உங்களூடைய வாழ்க்கைக்கான அச்சுறுத்தலாக இருக்க முடியும்.

வாந்தியில் இரத்தம் வருவதற்கு வயிற்று புற்றுநோய், அல்சர் காரணமாக குடலின் சுவற்றில் தோன்றியுள்ள புண்கள், ஈரல் பிரச்சனைகள், மது போன்ற தீய நச்சுக்களின் காரணமாக கல்லீரலின் முறையற்ற செயல்பாடு போன்ற பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.

what do you do if you find blood in any of thses body fluid

தாய்ப்பாலில் இரத்தம்

தாய்ப்பாலில் இரத்தம் வருவதை நீங்கள் உதாசீனப்படுத்தக் கூடாது. ஏனெனில் பாலுடன் சேர்ந்து வரும் அசுத்த இரத்தம் உங்களூடைய குழந்தைக்கு பல்வேறு வயிற்று தொற்று நோய்களை உருவாக்கலாம்.

நீங்கள் தாய்ப்பாலில் இரத்தத்தை கண்டவுடன் முலைக்காம்புகளை பரிசோதித்துப் பாருங்கள். சில நேரங்களில், முலைக்காம்புகள் சிதைந்து இரத்தம் வரும். பாதிக்கப்பட்ட இடத்தை சுற்றி தேங்காய் எண்ணெய் தடவுங்கள் அல்லது அருகில் உள்ள மருத்துவரை கலந்து ஆலோசித்து பாதிக்கப்பட்ட இடத்தைச் சுற்றி கிரீமை தடவுங்கள். 

what do you do if you find blood in any of thses body fluid

மலத்தில் இரத்தம்

குடலின் நிறம் ஒரு பிரகாசமான சிவப்பிற்கு மாறுவது ஹெமொராய்ட்' பிரச்சனையைக் குறிக்கின்றது. இது எளிதில் குணப்படுத்தக் கூடியது. ஆனால், நீங்கள் உங்களுடைய மலத்தில் இரத்தத்தை கண்டறிந்தால் அதை அலச்சியப்படுத்தாதீர்கள். ஏனெனில் இது புற்றுநோய்க்கான அறிகுறியாகக் கூட இருக்கலாம். எனவே நீங்கள் உங்களுடைய மலத்தில் இரத்தத்தை கண்டால் தாமதிக்காமல், உங்களூடைய மலத்தை பரிசோதனைக்கு அனுப்புங்கள்.

சளியில் இரத்தம்

உங்களுடைய மூக்கின் வழியாக வரும் இரத்தம், கடும் குளிர், உலர்ந்த காற்று, அல்லது அதிர்ச்சியின் காரணமாக உங்களூடைய நாசி காயம் அடைந்திருக்கின்றன என்று குறிப்பிடுகின்றன.

what do you do if you find blood in any of thses body fluid

எனினும் உங்களுக்கு இந்த இரத்தப்போக்கு கோடைகாலத்தில் ஏற்பட்டால், அது உங்களுடைய உடல் வெப்பம் அதிகரித்துள்ளது என்பதைக் குறிக்கின்றது. எனவே கோடை காலத்தில் அதிக அளவில் திரவங்கள் குடிப்பதன் மூலம் இந்தப் பிரச்சனையை சரி செய்யலாம்.

English summary

what do you do if you find blood in any of thses body fluid

what do you do if you find blood in any of thses body fluid
Please Wait while comments are loading...
Subscribe Newsletter