Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
ஒரு மாதம் காபி, டீயை தவிர்த்து, வெறும் தண்ணீரைக் குடிப்பதால் உடலினுள் ஏற்படும் மாற்றங்கள்!
காலையில் எழுந்ததும் காபி அல்லது டீயைக் குடித்து அன்றைய நாளைத் தொடங்குவோம். பின் பகல் நேரத்தில் மிகவும் தாகமாக இருக்கும் போது ஜூஸ் குடித்தால் நன்றாக இருக்குமென்று தோன்றி ஜூஸ் குடிப்போம். அதுவே பகலில் தூக்கம் வந்தால் ஒரு கப் காபி குடிப்போம்.
ஒரு மாதம் தொடர்ந்து சுடுநீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பதன் மூலம் பெறும் நன்மைகள்!!!
உணவு உண்ணும் போது தவிர மற்ற அனைத்து நேரங்களிலும் நீரைத் தவிர மற்ற பானங்களைத் தான் குடிக்கிறோம். ஆனால் இவற்றைத் தவிர்த்து இந்த நேரங்களில் தண்ணீரைக் குடிப்பதால் உடலினுள் என்ன மாற்றம் எல்லாம் ஏற்படுகிறது என்று தெரியுமா?
தினமும் காலையில் ஒரு டம்ளர் கற்றாழை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!
வேண்டுமானால் ஒரு மாதம் காபி, டீ, சோடா பானங்கள் போன்றவற்றைத் தவிர்த்து, தண்ணீரை மட்டும் குடித்து பாருங்கள். நிச்சயம் நீங்கள் நல்ல மாற்றத்தைக் காணலாம். இங்கு நீரைக் குடிப்பதால் உடலினுள் ஏற்படும் மாற்றங்கள் என்னவென்று கொடுக்கப்பட்டுள்ளது.
வெறும் வயிற்றில் வெந்தயத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும்
ஆம், தண்ணீரை அதிகமாக குடிப்பதால், சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரலில் உள்ள டாக்ஸின்கள் முற்றிலும் வெளியேற்றப்படும். இப்படி உடலில் இருந்து டாக்ஸின்கள் வெளியேற்றப்பட்டால், நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைந்து, பல்வேறு நோய்களின் தாக்கங்களில் இருந்து விடுபடலாம்.

கலோரிகள் குறையும்
ஆய்வுகளில் ஒரு நாளைக்கு ஒருவர் குளிர் பானங்கள், காபி, டீ அல்லது இதர பானங்களின் மூலம் 300-500 கலோரிகளை எடுப்பதாக தெரிய வந்துள்ளது. ஆனால் இவற்றையெல்லாம் தவிர்த்து வெறும் தண்ணீரை மட்டும் குடிப்பதால், கலோரிகளின் அளவு குறைந்து உடல் எடை குறைவதைக் காணலாம்.

மூட்டுகள் ஆரோக்கியமடையும்
உடலில் தண்ணீர் மிகவும் முக்கியமானது. அதிலும் மூட்டுகளுக்கு அருகில் உள்ள பாதிக்கப்பட்ட குருத்தெலும்புகளின் உருவாக்கத்திற்கு தண்ணீர் மிகவும் அவசியம். ஆகவே உங்கள் எலும்புகள் மற்றும் மூட்டுகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், தண்ணீரை அதிகம் குடியுங்கள்.

ஆரோக்கியமான இதயம்
தினமும் போதிய அளவில் தண்ணீர் குடிப்பது, இரத்த ஓட்டத்தை சீராக வைத்து, இரத்த அழுத்தத்தையும் கட்டுப்பாட்டுடன் வைக்கும். நிபுணர்களும், தூங்கும் முன் சிறிது தண்ணீர் குடிப்பதால், இதய பிரச்சனைகள் வருவது குறைவதாக சொல்கின்றனர்.

ஆற்றல் நிலையாக இருக்கும்
சோடா அல்லது குளிர் பானங்கள், காப்ஃபைன் போன்றவற்றைக் குடிக்கும் போது, உடலின் ஆற்றல் ஒரே நேரத்தில் வேகமாக அதிகரித்து, வேகமாக குறையும். ஆனால் தண்ணீரை அதிகம் குடித்து வந்தால், உடலுறுப்புக்களின் செயல்பாடு சீராகி, உடலின் ஆற்றல் நிலையாக இருக்கும்.

முதுமை தடுக்கப்படும்
தினமும் போதிய அளவில் தண்ணீரைக் குடித்து, காபி, டீ, ஆல்கஹாலுக்கு 'நோ' சொல்லி இருந்து பாருங்கள். உங்கள் சரும செல்களுக்கு வேண்டிய நீர்ச்சத்து கிடைத்து, சரும பிரச்சனைகள் தடுக்கப்பட்டு, சருமம் ஆரோக்கியமாகவும், இளமையுடனும் நீண்ட நாட்கள் இருக்கும்.

மெட்டபாலிசம் மேம்படும்
உங்கள் டயட்டில் எந்த ஒரு மாற்றத்தையும் கொண்டு வராமல், காபி, டீ மற்றும் இதர பானங்களைத் தவிர்த்து வெறும் நீரை மட்டும் குடித்து வந்தாலே உடலின் மெட்டபாலிசம் மேம்படும்.

எடை குறையும்
தண்ணீரைக் குடிக்கும் போது உடலுறுப்புக்களில் உள்ள டாக்ஸின்கள் மற்றும் அழுக்குகள் வெளியேற்றப்படுவதால், உடல் எடையில் சிறிது மாற்றத்தைக் காண முடியும். அதிலும் உணவு உண்பதற்கு முன் சிறிது தண்ணீர் குடித்துவிட்டு உண்டால், உண்ணும் உணவின் அளவைக் குறைத்து எடையையும் குறைக்கலாம்.



Click it and Unblock the Notifications
