நாள்பட்ட சிறுநீரக நோய் இருந்தால் சந்திக்கும் வேறு பிரச்சனைகள் குறித்து தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

இரத்தத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் முக்கிய பணியை சிறுநீரகங்கள் செய்து வருகின்றன. மேலும் சிறுநீரகங்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியிலும் பெரிதும் ஈடுபடும்.

ஆனால் அந்த சிறுநீரகங்களில் நோய்கள் ஏதேனும் இருந்தால், அதன் செயல்பாடு பாதிக்கப்பட்டு, அதனால் உடலினுள் பல்வேறு செயல்பாடுகளில் தடை ஏற்பட்டு, பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

அதிலும் தற்போது பலரும் நீண்ட நேரம் உட்கார்ந்தவாறே வேலை செய்வதோடு, சரியாக தண்ணீர் பருகாமல் இருப்பதால், சிறுநீரக நோய்கள் மிகவும் வேகமாக ஏற்படுகிறது. மேலும் இவை ஆரம்பத்தில் அமைதியாக சாதாரண அறிகுறிகளை வெளிப்படுத்தி, பின் முற்றிய நிலையில் பலருக்கும் செலவை வைக்கும்.

ஆகவே ஒவ்வொருவரும் உடலில் சிறுநீரக நோய்கள் பல நாட்களாக இருந்தால் தென்படும் அறிகுறிகள் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டும். இங்கு அவை கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இரத்த சோகை

இரத்த சோகை

உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு சாதாரண அளவை விட குறைவாக இருக்கும் நிலை தான் இரத்த சோகை. பொதுவாக சிறுநீரகங்கள் எரித்ரோபொயட்டின் என்னும் ஹார்மோனை சுரக்கும். இந்த ஹார்மோன் தான் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை சீராக வைத்துக் கொள்ள உதவும். ஆனால் சிறுநீரக நோய்கள் இருந்தால், அந்த ஹார்மோன்களின் சுரப்பு குறைந்து, இரத்த சோகை ஏற்படும்.

சீரற்ற இதயத்துடிப்பு

சீரற்ற இதயத்துடிப்பு

சாதாரணமாக சிறுநீரகங்கள் பொட்டாசியம், அமிலங்கள், பாஸ்பேட் போன்ற கெமிக்கல்களை வெளியேற்றும். ஆனால் சிறுநீரக நோய்கள் இருக்கும் போது, அந்த கெமிக்கல்கள் வெளியேற்றப்பட முடியாமல் போய், அதனால் சீரற்ற இதயத் துடிப்பு மற்றும் தசைகள் பலவீனமாக இருக்கும்.

எலும்பு பிரச்சனைகள்

எலும்பு பிரச்சனைகள்

சிறுநீரக நோய்கள் இருந்தால் எலும்புகள் பலவீனமாகும். ஏனெனில் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டிருக்கும் போது, வைட்டமின் டி, கால்சியம், பாஸ்பேட் போன்றவற்றில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு, அதனால் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களும் வர ஆரம்க்கும். மேலும் சிறுநீரக நோய்கள் இருந்தால், இரத்தத்தில் அமிலத்தன்மை அதிகரித்து, நரம்பு பாதிப்புகள், எலும்பு திசுக்கள் போன்றவையும் பாதிக்கப்படும்.

பாலுணர்ச்சி குறையும்

பாலுணர்ச்சி குறையும்

சிறுநீரக நோய்கள் பாலுணர்ச்சியையும் குறைக்கும். எனவே உங்களுக்கு திடீரென்று பாலுறவில் நாட்டம் இல்லாமல் போனால், அதற்கு சிறுநீரக நோய்களும் காரணமாக இருக்கலாம்.

இரைப்பை உணவுக்குழாய் புண்கள்

இரைப்பை உணவுக்குழாய் புண்கள்

சிறுநீரக நோய்கள் முற்றிய நிலையில் இருந்தால், இரைப்பை உணவுக்குழாயில் புண்கள் அதிகரிக்கும். மேலும் இந்த மாதிரியான புண்களை குணப்படுத்துவது என்பது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும்.

பொட்டாசியம் அதிகரிக்கும்

பொட்டாசியம் அதிகரிக்கும்

சிறுநீரக நோய் இருப்பவர்களுக்கு இரத்தத்தில் பொட்டாசியம் அதிகமான அளவில் இருக்கும். பொட்டாசியம் அதிகமானால் இதயத்தின் செயல்பாட்டில் இடையூறு ஏற்பட்டு, அதனால் உயிரையே இழக்கும் அளவில் பிரச்சனையை சந்திக்கக்கூடும்.

இரத்த அழுத்தம்

இரத்த அழுத்தம்

ஆம், சிறுநீரக நோய்கள் இருந்தால் உயர் இரத்த அழுத்த பிரச்சனையை சந்திக்கக்கூடும். அதிலும் சிறுநீரகத்தில் நோய் முற்றி இருந்தால், அதனால் உயர் இரத்த அழுத்தம் அதிகரித்து, அதனால் இதய நோய்களுக்கு உள்ளாகக்கூடும்.

திரவங்கள் தேங்கும்

திரவங்கள் தேங்கும்

திரவங்கள் மற்றும் உப்புக்களை வெளியேற்ற சிறுநீரகங்களால் முடியாத போது, உடலினுள் அவற்றின் அளவு அதிகரிக்க ஆரம்பிக்கும். இப்படி திரவங்கள் உடலினுள் தேங்க ஆரம்பித்தால், இதய செயலிழப்பு, நுரையீரல் வீக்கம் போன்றவை ஏற்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

What Happens If You Have Chronic Kidney Disease

What happens to body when there is a complete kidney failure. There will be several side effects of kidney failure that can lead to other complications.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter