Latest Updates
-
நாக பஞ்சமி 2026: இந்த வருட நாக பஞ்சமி எந்த நாளில் வருகிறது? இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
வெஜ் கோலாப்பூரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு சூப்பரா இருக்கும் -
சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சுதந்திர தின ஸ்பெஷல் மூவர்ண பூரியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டத்தின் சாவி கைக்கு வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்..
தினமும் காலையில் ஒரு துண்டு இஞ்சியை பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!
அக்காலத்தில் இஞ்சி ஓர் மருத்துவப் பொருளாக பல நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்பட்டு வந்தது. அத்தகைய இஞ்சியை பெரும்பாலான உணவுகளிலும் நாம் சேர்த்து வருகிறோம். ஆனால் அந்த இஞ்சியை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சிறிது சாப்பிடுவதால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் என்று தெரியுமா?
ஆம், இஞ்சியை தினமும் காலையில் சிறிது உட்கொண்டு வருவதன் மூலம் அதில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சிப் பொருட்கள் பல்வேறு நோய்களின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பளிக்கும். இங்கு தினமும் இஞ்சியை காலையில் வெறும் வயிற்றில் எடுப்பதால் கிடைக்கும் நன்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

நீரிழிவு
சர்க்கரை நோயாளிகள் காலையில் எழுந்ததும் ஒரு சிறிய துண்டு இஞ்சி அல்லது இஞ்சி சாற்றினை பருகினால், இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடனும், சீராகவும் வைத்துக் கொள்ளலாம்.

இரத்த ஓட்டம்
உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள். காலையில் இஞ்சியை சிறிது உட்கொண்டால், உங்கள் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.

பசியின்மை
உங்களுக்கு சில நாட்களாக சரியாக பசி எடுப்பதில்லையா? அப்படியெனில் காலையில் சிறிது இஞ்சியை வாயில் போட்டு மெல்லுங்கள். இதனால் உங்களுக்கு பசியுணர்வு அதிகரிக்கும்.

தலைவலி
நீங்கள் ஒற்றைத் தலைவலியால் கஷ்டப்படுபவராயின், சிறிது இஞ்சியை அரைத்து பேஸ்ட் செய்து, நீரில் கலந்து நெற்றியில் தடவினால், ஒற்றைத் தலைவலி நீங்கும்.

சளி
சளி இருமலுக்கு இஞ்சி நல்ல நிவாரணம் வழங்கும். அதற்கு நீரில் சிறிது இஞ்சியை தட்டிப் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து குடிக்க, நெஞ்சுப் பகுதியில் தேங்கியுள்ள சளி முறிந்து, விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

பல் வலி
பல் வலி இருக்கும் போது, இஞ்சி துண்டை ஈறுகளில் மசாஜ் செய்தால், நிவாரணம் கிடைக்கும். இல்லாவிட்டால், நீரில் இஞ்சியை தட்டிப் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும்.

குமட்டல்
இஞ்சி குமட்டல் மற்றும் வாந்தி வருவதைத் தடுக்கும். அதுமட்டுமின்றி, காலையில் ஏற்படும் சோர்வையும் இஞ்சி தடுக்கும்.

செரிமானம்
இஞ்சியைத் தட்டி நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, தேன் கலந்து பருக செரிமான பிரச்சனைகள் அகலும். அதிலும் காலையில் பருகினால், உங்கள் செரிமான மண்டலம் சுத்தமாகி, அதன் செயல்பாடு அதிகரிக்கும்.



Click it and Unblock the Notifications