Latest Updates
-
அக்டோபரில் நிகழும் சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கொங்கு ஸ்பெஷல் பீர்க்கங்காய் கடலை சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இட்லி, தோசைக்கு அருமையா இருக்கும் -
உலகின் மிகவும் விலையுயர்ந்த அரிசி எது? அதன் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்..
முட்டைக்கோஸ் ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் பெறும் நன்மைகள்!
முட்டைக்கோஸ் என்றதுமே பலர் தலைதெறிக்க ஓடுவார்கள். அதற்கு அதன் மணம் தான் முக்கிய காரணம். ஆனால் முட்டைக்கோஸில் மற்ற காய்கறிகளை விட அதிக அளவில் சத்துக்களும், நன்மைகளும் அடங்கியுள்ளன. முட்டைக்கோஸ் குறிப்பிட்ட புற்றுநோய்களைத் தடுப்பதோடு, கொலஸ்ட்ராலைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும்.
தினமும் 2 டம்ளர் மிளகுத் தூள் கலந்த நீரைக் குடிப்பதால் பெறும் நன்மைகள்!
முட்டைக்கோஸை சமைத்து சாப்பிடுவதை விட, அதை ஜூஸ் வடிவில் எடுத்தால் இன்னும் சிறப்பான பலனைப் பெறலாம். ஏனெனில் முட்டைக்கோஸை ஜூஸ் வடிவில் எடுக்கும் போது, அதில் உள்ள சத்துக்களை நம் உடல் வேகமாக உறிஞ்சிக் கொள்ளும்.
பாலில் தேன் கலந்து குடிப்பதால் உடலினுள் ஏற்படும் மாற்றங்கள் குறித்து தெரியுமா?
சரி, இப்போது அந்த முட்டைக்கோஸ் ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் சிறிது குடிக்கும் போது நம் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னவென்று பார்ப்போம்.

நன்மை #1
முட்டைக்கோஸில் லாக்டிக் அமிலம் உள்ளது. இது குடலில் உள்ள நோய்த்தொற்றுக்களை அழித்து, குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

நன்மை #2
சில ஆய்வுகள் முட்டைக்கோஸ் ஜூஸ் சுவாசப் பாதையில் உள்ள அழற்சியை சரிசெய்து, மூச்சுக்குழாய் அழற்சி அல்லது ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து சரிசெய்வதாக கூறுகின்றன.

நன்மை #3
முட்டைக்கோஸில் உள்ள க்ளுட்டமைன் என்னும்
அமினோ அமிலம், செரிமான ஆரேக்கியத்தை மேம்படுத்தி நல்ல பாதுகாப்பை வழங்கும்.

நன்மை #4
முட்டைக்கோஸில் சல்ஃபோரபேன் உள்ளது. இது குறிப்பிட்ட புற்றுநோய்களின் தாக்கங்களைத் தடுப்பதாக நிறைய ஆய்வுகள் கூறுகின்றன.

நன்மை #5
இந்த ஜூஸில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி பொருள், ஆர்த்ரிடிஸ் போன்ற உள்காயங்களை சரிசெய்து, மூட்டு அழற்சி பிரச்சனைகளை சரிசெய்யும்.

நன்மை #6
அல்சர் இருப்பவர்கள் முட்டைக்கோஸ் ஜூஸை வெறும் வயிற்றில் பருகி வந்தால், அல்சரை உண்டாக்கிய பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு, அல்சர் விரைவில் குணமாகும்.

நன்மை #7
முக்கியமாக முட்டைக்கோஸ் ஜூஸ் உயர் கொலஸ்ட்ரால் உள்ளவர்களுக்கு மிகவும் சிறப்பான பானம். அதிலும் இந்த ஜூஸ் கல்லீரலை சுத்தம் செய்து, கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும்.

நன்மை #8
முட்டைக்கோஸ் ஜூஸில் க்ளுக்கோஸினோலேட்டுகள் உள்ளது. இது உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையடையச் செய்து, உடலை நோய்க்கிருமிகளின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும்.



Click it and Unblock the Notifications
