காலைக் கடன் கழிப்பதில் பிரச்சனையா? இதுவும் கூட காரணமாக இருக்கலாம்!!!

Posted By:
Subscribe to Boldsky

சிலருக்கு காலை பெட் காபி குடித்தால் தான் வரும். சிலருக்கு இரவே இரண்டு வாழைப்பழத்தை உள்ளே தள்ளினால் தான் வரும். சிலருக்கு பேப்பர் படித்தால் தான் வரும். ஆனால், என்ன பாவம் செய்தார்களோ சிலருக்கு அனுதினமும் காலைக் கடன் கழிப்பதெனில் அப்படியொரு சிரமம் ஏற்படும்.

இதற்கு நமது உணவு பழக்கம் மட்டுமின்றி, நாம் செய்யும் அன்றாடம் செய்யும் வேறுசில தவறுகளும் கூட காரணமாக அமைந்துவிடுகிறது. பெரும்பால்லும் சில மாத்திரைகள் மற்றும் சில அதிகமான ஊட்டச்சத்துக்களும் கூட இதற்கான காரணிகளாக இருக்கிறது.

இனி, மலம் கழிப்பதில் பிரச்சனை ஏற்படுத்தும் சில அன்றாட செயல்பாடுகள் பற்றி காணலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அவசரமாக வரும் போது அடக்குதல்

அவசரமாக வரும் போது அடக்குதல்

வேலை காரணமாக மீட்டிங்கில் இருப்பதினால் அல்லது நால்வர் மத்தியில் உரையாடிக் கொண்டிருக்கும் போது திடீரென அதற்காக எழுந்து செல்ல கூச்சம் போன்ற காரணங்கள் கொண்டு அவசரமாக மலம் வரும் போது அடக்குதல் கூட மலம் கழிப்பதில் பிரச்சனை ஏற்பட காரணமாக இருக்கிறது.

கால்சியம்

கால்சியம்

அளவிற்கு அதிகமாக கால்சியம் உடலில் சேரும் போது, குடலியக்கம் பாதிக்கப்படுகிறது.1000 mg க்கு மேல் கால்சியம் உடலில் சேர்வது மலம் கழிப்பதில் கோளாறு ஏற்பட காரணமாகிறது.

இரும்புச்சத்து

இரும்புச்சத்து

கால்சியம் போலவே இரும்பும் உடலில் அதிகமாக சேரும் போது மலத்தை கடினமாக்கிவிடுகிறது. இதனாலும் மலம் கழிப்பதில் பிரச்சனை ஏற்படலாம்.

இடுப்பு பகுதி இடர்ப்பாடு

இடுப்பு பகுதி இடர்ப்பாடு

குடலியக்கம் மட்டுமின்றி இடுப்பு பகுதி தசை வலிமையும் மலம் கழிக்கும் செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. இடுப்பு தசைகள் இறுக்கமாக அல்லது கடினமாக இருப்பதும் கூட இதற்கு இடையூறாக அமைகிறது.

நீரிழிவு

நீரிழிவு

மூன்றில் ஒரு நீரிழிவு நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு மலம் கழிப்பதில் பிரச்சனை ஏற்படுகிறது. இரத்த சர்க்கரை அளவு அதிகமாவது மற்றும் நீரிழிவு தாக்கத்தால் ஏற்படும் நரம்பியல் பாதிப்புகள் குடலியக்க செயல்திறனையும் குறைக்கிறது.

நிறைய கொழுப்பு, குறைந்த நார்ச்சத்து

நிறைய கொழுப்பு, குறைந்த நார்ச்சத்து

உங்கள் உணவு முறையில் நிறைய கொழுப்பும், குறைவான நார்ச்சத்தும் இருந்தாலும் கூட மலமிழக்க பிரச்சனை ஏற்படலாம்.

மலமிளக்கி மாத்திரைகள்

மலமிளக்கி மாத்திரைகள்

மலம் சரியாக வருவதில்லை என்பதற்காக நீங்கள் தொடர்ந்து மாத்திரைகள் பயனபடுத்துவது கூட நாள்பட மலம் வர சிரமம் ஏற்படுத்தலாம்.

மன அழுத்தம்

மன அழுத்தம்

மலம் வருவதில் சிரமம் எதிர்கொள்கிறோம் என மருத்துவரிடம் செல்லும் நபர்களில் 33% பேருக்கு மன அழுத்தம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மன அழுத்தம் பொதுவாகவே நமது உடல் உறுப்புகளின் செயல்திறனை மெல்ல, மெல்ல குறைக்கிறது என்பது தான இதற்கான காரணமாக இருக்கிறது.

மனத்தளர்ச்சி மருந்துகள்

மனத்தளர்ச்சி மருந்துகள்

மன அழுத்தம், தளர்ச்சி போன்றவைக்காக உட்கொள்ளும் மாத்திரைகளும் கூட மலம் கழிப்பதில் சிரமம் ஏற்பட காரணமாக இருக்கின்றன.

வலிநிவாரணி மாத்திரைகள்

வலிநிவாரணி மாத்திரைகள்

ஏறத்தாழ வலிநிவாரணி மாத்திரை உட்கொள்ளும் 50% பேருக்கு மலம் கழிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. வலிநிவாரணி மாத்திரைகள் குடலியக்கத்தில் சீர்கேடு விளைவிப்பது தான் இதற்கான காரணம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Weird Reasons You Can Not Poop

These weird reasons are behind your bad constipation, take a look.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter