Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
பொதுமக்களிடம் இந்த 9 அபாயமான விஷயங்களை மறைப்பது ஏன்?
நாம் காலை எழுந்ததும் பல் துலக்க பயன்படுத்தும் பேஸ்ட்டில் ஆரம்பித்து, குளிக்கும் சோப்பு, ஷாம்பூ, குடிக்கம் பால், உண்ணும் இறைச்சி என அனைத்திலும் நம் கண்களுக்கு தெரியாத வண்ணம் செயற்கை இரசாயனங்கள், செயற்கை ஹார்மோன், நச்சுப் பொருட்கள் என பலவன கலக்கப்பட்டுள்ள பொருட்களை தான் நாம் பயன்படுத்துகிறோம்.
இதனால் என்ன? என்று கேட்கிறீர்களா... இதனால் தான் உடல் பருமன், நீரிழிவு அதிகரித்தல், ஆண்மை குறைவு, புற்றுநோய் அபாயம் போன்றவை ஏதோ மழைக் காலத்தில் சளி, காய்ச்சல் ஏற்படுவது போல அனைவருக்கும் ஏற்படுகிறது. இதை அறியாமலேயே நாம் தொடர்ந்து இவற்றை பயன்படுத்தி வருகிறோம்.

பால் மற்றும் இறைச்சி
நாம் அன்றாடம் உட்கொள்ளும் பால் மற்றும் இறைச்சியின் மூலமும் புற்றுநோய் உண்டாகலாம். ஆம், பால், மற்றும் தசை வளர்ச்சி, உற்பத்தி அதிகமாக இருக்க வேண்டும் என்பதற்காக செயற்கை ஹார்மோன்கள் விலங்குகளுக்கு செலுத்தப்படுகிறது. இதனால், புற்றுநோய் மற்றும் வேறுபல நோய்களும் உண்டாக வாய்ப்புகள் இருக்கின்றன.

மாமோகிராஃபி, பல் எக்ஸ்ரே கதிர்கள், விமான நிலைய ஸ்கேனர்கள்
மாமோகிராஃபி, பல் எக்ஸ்ரே கதிர்கள், விமான நிலைய ஸ்கேனர்கள் போன்றவற்றில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சுகள் மூலமாக புற்றுநோய் கட்டிகள் உண்டாக வாய்ப்புகள் உள்ளன.

டியோடிரன்ட் மற்றும் ஆண்டிபர்ச்பிரன்ட்ஸ்
அலுமினிய கலப்பு உள்ள டியோடிரன்ட் மற்றும் ஆண்டிபர்ச்பிரன்ட்ஸ் (antiperspirants) பயன்படுத்துவதால் மார்பக புற்றுநோய் உண்டாக வாய்ப்புகள் உள்ளன.

அழகு சாதன பொருட்கள்
தினமும் அழகு சாதன பொருட்களை பயன்படுத்துவதால், சரும புற்றுநோய் உண்டாகலாம். ஏனெனில், பெரும்பாலான அழகு சாதனப் பொருட்களில் பெட்ரோலியம் மற்றும் நச்சுப் பொருட்களின் கலப்பு உள்ளன.

மரபணு மாற்றப்பட்ட உணவுகள்
மரபணு மாற்றப்பட்ட சோளம், சோயா அதிகம் உண்பதால் நாள்பட புற்றுநோய் உண்டாகலாம். மரபணு மாற்றப்பட்ட உணவுகளை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது.

செயற்கை இனிப்பூட்டிகள்
நாம் உண்ணும் இனிப்பு வகைகள், சாக்லேட், குளிர்பானங்கள் என அனைத்திலும் 99% செயற்கை இனிப்பூட்டிகள் சேர்க்கப்படுகின்றன. இனிப்பு மற்றும் வண்ணத்திற்காக சேர்க்கப்படும் இவற்றில் இருக்கும் புற்றுண்டாக்கக்கூடிய மூலப்பொருட்கள் ஆரோக்கியத்திற்கு அபாயமானது.

புளோரைட் நீர்
புளோரைட் நீர் உடலில் இருக்கும் மினரல்களை வெளியேற்றி நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக பதிக்கிறது.

கேன் உணவு / பானம்
பிளாஸ்டிக் பாட்டில், கேன்களில் விற்கப்படும் உணவு பண்டங்கள் மற்றும் பானங்களை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது. பிளாஸ்டிக்கில் இருக்கும் மூலப்பொருளான, பி.பி.எ (bisphenol-A) மரபணுக்களில் தாக்கம் ஏற்படுத்த கூடியவை.

சோப்பு, ஷாம்பூ, பேஸ்ட்
நாம் தலைக்கு, சருமத்திற்கு, பற்களுக்கு பயன்படுத்தும் சோப்பு, ஷாம்பூ, பேஸ்ட் போன்றவற்றில் இருக்கும் மூலப்பொருட்கள் அனைத்துமே மெல்ல, மெல்ல நமது உடலில் எதிர்மறை தாக்கத்தை உண்டாக்க கூடியவை ஆகும். எனவே, இயற்கை பொருட்களை மட்டும் பயன்படுத்த துவங்குங்கள்.



Click it and Unblock the Notifications
