இந்த தீபாவளியை ஆரோக்கியமாகக் கொண்டாட ஐந்து வழிகள்..

Posted By: Staff
Subscribe to Boldsky

தீபாவளி பாட்டாசுகள் மற்றும் தீபங்களின் பண்டிகை மட்டுமல்ல சிறந்த உணவுகளின் பண்டிகையும்தான். குடும்பங்கள் ஒன்று சேர்ந்து அங்கு சுவையான உணவுக்கும் பண்டங்களுக்கும் குறைவிருக்காது. குறிப்பாக இனிப்புகளுக்கும் நொறுக்குத்தீனிக்கும். அதை ஒதுக்கிவிடுவது என்பது அவ்வலவு எளிய காரியம் அல்ல என்றபோதும் இவற்றில் பயன்படுத்தப்படும் அதிக அளவு சர்க்கரை, நெய் மற்றும் மாவுப் பொருட்கள் நம் உடல் நலத்திற்கு சோதனையாக இருக்கும் என்பதை மறுப்பதற்கு இல்லை. நேரம் காலமின்றி இந்த பண்டிகை வேளைகளில் உணவருந்துவது பண்டிகைக்குப் பின்னர் நிலைமையை மோசமடையச் செய்யக் கூடும்.

This Diwali Follow These Steps to Stay Healthy

எனவே முதலில் இருந்தே சற்று எச்சரிக்கையுடன் இருப்பது புத்திசாலித்தனமாக இருக்கும் பண்டிகையும் ஒட்டுமொத்த மகிழ்ச்சியைத் தரும்.

உங்கள் தீபாவளியை எப்போதும் இல்லாத அளவு ஆரோக்கியமாகவும் சிறந்ததாகவும் ஆக்க சில குறிப்புக்களை இங்கே தந்திருக்கிறோம்.

1. இனிப்புகளையும் காரங்களையும் வீட்டிலேயே செய்யலாமே? ஆமாம், வெளியில் கடைகளில் உங்கள் ஆரோக்கியத்திற்கு உலை வைக்கும் பல்வேறு செயற்கை சுவையூட்டிகளையும் அதிக சர்க்கரையையும் கொண்டு செய்யப்படும் இனிப்புகளைக் காட்டிலும் இது மிகவும் பாதுகாப்பான சிறந்த தேர்வாக இருக்கும். இயற்கையான சுவை மற்றும் இனிப்பூட்டிகளைக் கொண்டு ஆரோக்கியமான எண்ணையைக் கொண்டு வீட்டிலேயே இனிப்புகளை செய்யுங்கள். பேரீச்சம்பழம், வெல்லம், அத்திப்பழம், தேன், கடைந்த பால் மற்றும் மூலிகைகள் உங்கள் ஆரோக்கியத்திற்கு உதவும். இந்த பலகாரங்களை செய்வது பலருக்கு மிகவும் நேரம் பிடிக்கும் வேலையாக இருப்பது மறுப்பதற்கில்லை என்றாலும் உங்கள் குடும்ப ஆரோக்கியம் பாதுக்காக்கப்படும்.

2. பரிசுகளும் ஆரோக்கியமாக இருக்கட்டும்: வீட்டில் செய்யப்படும் ஆரோக்கிய இனிப்புப் பலகாரங்களைப் போலவே மற்றவர்களுக்குத் தரும் பரிசுகளும் ஆரோக்கிய உணவுகளாக இருக்கட்டும். குறைந்த சர்க்கரை கொண்ட மற்றும் நெய் இல்லாத இனிப்புகள் மற்றும் பலகாரங்களை தேர்ந்தெடுக்கலாம். உலர் பழங்களும் பொட்டாசியம், மக்னீசியம், ஜிங்க் போன்ற கனிமச் சத்துக்களுடன் வருவதால் இதுவும் ஒரு நல்ல தேர்வாக இருக்கும். இந்த பழக்கத்தை நீங்கள் தொடங்கிவிட்டால், உங்கள் உறவினர் மற்றும் நண்பர்களும் அதைப் பின்பற்றி ஒரு ஆரோக்கியமான தீபாவளிக்கு இது வித்திடும்.

3. உணவுப் பதப்படுத்தும் பொருட்கள் மற்றும் செயற்கை வண்ணங்களைத் தவிர்த்திடுங்கள்: இதற்கு பதிலாக இயற்கையான உட்பொருட்களை பயன்படுத்துவதால் செயற்கை பொருட்களால் செய்யப்பட்ட இனிப்புகள் உங்கள் நலனை பாதிப்பதை தடுக்க முடியும். சில்வர் கோட்டிங் செய்யப்பட்ட இனிப்புகள் அதிலுள்ள அலுமினியத்தின் காரணமாக உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் என்பதால் அதனை தவிர்த்திடுங்கள்.

4. பொறிப்பதை விட சுடுவது நல்லது: பலகாரங்களை எண்ணெயில் பொறிப்பதை விட நெருப்பில் சுட்டு எடுப்பது கொழுப்பு மற்றும் கலோரிகளைக் குறைப்பதால் உடலுக்கு நல்லது. ஏனெனில் வீட்டில் செய்தாலும் பொறித்த பலகாரத்தில் அதிக அளவு எண்ணெய் இருக்கும்.

5. தண்ணீர் அதிகம் பருகுங்கள்: நீங்கள் தீபாவளிக் கொண்டாட்டங்களில் தீபம், பட்டாசுகள், விருந்தாளிகள் என எவ்வளவு நெருக்கடிகளில் இருந்தாலும் தண்ணீர் தேவையான அளவு பருகுவதை கவனத்தில் கொள்ளுங்கள். உடலில் தண்ணீரின் அளவு குறைந்தால் சத்துக்களை உடல் உறிஞ்சிக்கொள்வதில் தடை ஏற்படும். தண்ணீருக்கு பதிலாக சர்க்கரை மிகுந்த குளிர்பானங்கள் அல்லது சோடா/கோலா போன்றவற்றை பருகாமல் தண்ணீரையே பருகுங்கள். எலுமிச்சை ரசம், மோர், சுத்தமான பழ ரசம் ஆகியவை அருந்தலாம். அதையே உங்கள் குடும்பத்தினர் மற்றும் விருந்தினருக்கும் கொடுக்கலாம்.

இந்த குறிப்புகளுடனும் பட்டசுகளை வெடிக்கும்போது கவனத்துடனும் குறிப்பாக குழந்தைகள் செய்கைகளில் கவனத்துடனும் செயல்பட்டால் உங்கள் வாழ்கையின் சிறந்த ஒரு தீபாவளியாக இது இருக்கும் என்பதில் உங்களுக்கு சந்தேகம் வேண்டாம்.. ஹாப்பி தீபாவளி!!

Read more about: diwali
English summary

This Diwali Follow These Steps to Stay Healthy

This Diwali Follow These Steps to Stay Healthy
Please Wait while comments are loading...
Subscribe Newsletter