உங்களின் கவனத்தை அடிக்கடி சிதறடிக்கும் காரணங்கள் இதோ இவைதான்

By: Batri Krishnan
Subscribe to Boldsky

இன்றைய நவீன உலகில் நம்முடைய கவனத்தை திசை திருப்பும் பல்வேறு காரணிகள் உள்ளன. இதன் காரணமாக நாம் கவனச் செறிவு பற்றாக்குறை நோயினால் (ADHD) பாதிக்கப்படுகின்றோம்.

நம்முடைய கவனம் எவ்வாறு சிதறடிக்கப்படுகின்றது. அவ்வாறு சிதறடிக்கும் காரணிகள் எவை? அவற்றை எவ்வாறு எதிர்க்கொள்வது போன்ற பல்வேறு விஷயங்களைப் பற்றி இங்கே விவாதிக்கப்போகின்றோம்.

things that distract us often

நாம் பல்வேறு காரணிகளை பட்டியலிட்டாலும் அதை அடையாளம் கண்டு செயல்முறைப் படுத்துவது உங்களின் கைகளில் உள்ளது. ஏனெனில் நம் நாட்டில் கவனச் சிதறல் மிகப் பெரும் பிரச்சனையாக உருப்பெற்று வருகின்றது. இதற்கான காரணங்கள் எவையென பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சமூக ஊடகங்கள்

சமூக ஊடகங்கள்

சமூக ஊடகங்களில் உலவுவது ஒரு சமூக அந்தஸ்து என்று மாறி விட்டது. நிழல் உலகில் மிக எளிதாக உலவ முடிகின்றது. உங்களின் பல்வேறு பணிகளும் பாதிக்கின்றன.

எவ்வாறு சரி செய்வது: நீங்கள் மிகவும் கவனமாக வேலையில் ஈடு படும் பொழுது சமூக ஊடகங்கள் பக்கம் தலை வைத்து படுக்காதீர்கள்.

கண்டிப்பாக சமூக ஊடகங்களில் உலவ வேண்டும் எனில் அதை உங்களின் ஓய்வு நேரத்திற்கு மாற்றிக் கொள்ளுங்கள். அதுவும் கடினமாக இருந்தால் இன்டெர்நெட் இணைப்பை சில மணி நேரத்திற்கு துண்டித்து விடுங்கள்.

கையடக்க தொலைபேசிகள்:

கையடக்க தொலைபேசிகள்:

மொபைல் போன்களால் அதிக நன்மையா அல்லது தீமையா என சாலமன் பாப்பையா தலைமையில் ஒரு பட்டி மன்றமே நடத்தலாம். எனினும் நம்முடைய வாழ்வை மொபைல் போன் இல்லாமல் கற்பனை செய்து பார்க்க இயலாது.

நீங்கள் மிகவும் கவனமாக ஒரு வேலையில் ஈடுபடும்பொழுது மொபைல் போனில் உங்களுக்கு ஒரு அழைப்பு அல்லது ஒரு குறுங்செய்தி வந்தால் உங்களின் கவனம் கண்டிப்பாக சிதறும்.

அதிலும் லோன் வாங்கச் சொல்லி வங்கியிலிருந்து அழைப்பு வந்தால் நீங்கள் கட்டாயம் எரிச்சலின் உச்சத்திற்கு சென்று விடுவீர்கள். எனவே உங்களை கவனம் சிதற வைப்பதில் மொபைல் போன் ஒரு முக்கிய இடம் வகிக்கின்றது.

எவ்வாறு சரி செய்வது:

எவ்வாறு சரி செய்வது:

நீங்கள் மிகவும் கவனமாக வேலையில் ஈடு படும் பொழுது உங்களின் மொபைல் போன்களை சைலண்ட் மோடில் அல்லது டூ நாட் டிஸ்டர்ப் மோடில் வைத்து விடுங்கள். உங்களை அழைப்பவர் யார் என்று தெரிந்து கொண்டு மொபைல் போனில் பேசுங்கள்.

தேவையற்ற அழைப்புகளை புறந் தள்ளூங்கள். மிகவும் உத்தமமாக உங்களுக்கு வருகின்ற அழைப்புகளை உங்களின் குரலஞ்சலுக்கு அனுப்புங்கள்.

பிறகு உங்களின் வேலை எல்லாம் முடிந்த பிறகு அனைத்து அழைப்புகளையும் ஆராய்ந்து பார்த்து தேவையெனில் திரும்ப நீங்கல்ளே அழைத்திடுங்கன்.

ஒரே சமயத்தில் பல வேலைகள் :

ஒரே சமயத்தில் பல வேலைகள் :

நீங்கள் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட வேலையில் ஈடுபடும்பொழுது உங்களின் கவனம் சிதறி உங்களால் எந்த ஒரு வேலையையும் மிகச் சரியாக மற்றும் கச்சிதமாக முடிக்க இயலாது. உதாரணமாக மொபைல் போனில் பேசிக்கொண்டே வண்டி ஓட்டுவது எவ்வுளவு பெரிய ஆபத்து என்பது நமக்கு நன்றாகத் தெரியும். எனவே ஒரே நேரத்தில் பல்வேறு வேலைகளில் ஈடுபடாதீர்கள். அது மிகவும் ஆபத்தானது.

எவ்வாறு சரி செய்வது: நீங்கள் தவறு இல்லாமல் மிகவும் கச்சிதமாக உங்களின் வேலையை முடிக்க வேண்டும் எனில் உங்களின் பல்வேறு வேலைகளை வரிசைப்படி வகைப்படுத்தி அதில் அதிமுக்கியம் வாய்ந்த வேலைகளை உடனே செய்திடுங்கள். முக்கியம் இல்லாத பணிகளை பிறகு கவனித்துக் கொள்ளலாம்.

பல்வேறு மின் அஞ்சல்கள்:

பல்வேறு மின் அஞ்சல்கள்:

நீங்கள் மிக கவனமாக ஒரு வேளையில் ஈடுபடும் பொழுது அந்த வேலைக்கு சம்பந்தப்பட்ட அல்லது சம்பந்தப்படாத மின் அஞ்சல்கள் உங்களின் கணிணீத் திரையில் திடீர் தீடீர் என வெளிப்படும்.

நீங்கள் அவைகளை திறந்து பார்க்கத் தொடங்கினால் உங்களின் வேலை பாதியில் நின்று விடும். ஏனெனில் உங்களின் கவனம் மின் அஞ்சல் செய்திகளுக்கு சென்று விடும். அப்புறம் எவ்வாறு வேலையைத் தொடர்வது.

 மன அழுத்தம்:

மன அழுத்தம்:

நீங்கள் தொடர்ந்து வேலை ஈடுபட்டால் கண்டிப்பாக அழுத்தத்திற்கு ஆட்படுவீர்கள். அதன் காரணமாக உங்களின் கவனம் கண்டிப்பாக் சிதறும். அதோடு மட்டுமல்லாமல் அழுத்தத்துடன் சேர்ந்த தலைவலி, உடல் வலி போன்றவை உங்களின் கவனத்தை சிதறடித்து உங்களின் திறமையை பாதிக்கும்.

எவ்வாறு சரி செய்வது: யோகா அல்லது உடற்பயிற்சி போன்ற அழுத்தத்திலிருந்து விடுவிக்கும் நடைமுறைகளைப் பயிலுங்கள். தியானம் உங்களின் மன அழுத்தத்தை போக்கி உங்களின் கவனத்தை அதிகப்படுத்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

things that distract us often

These five things may cause for your distraction,
Story first published: Monday, November 21, 2016, 19:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter