Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
கோடைக்காலத்தில் முட்டை சாப்பிடலாமா கூடாதா?
கோடைக்காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில், உண்ணும் உணவுகளில் கவனமாக இருக்க வேண்டும். அதிலும் கோடையில் சாப்பிட வேண்டிய உணவுகள் மற்றும் சாப்பிடக்கூடாத உணவுகள் என்ற பட்டியலே உள்ளது. இதற்கு கோடையில் நாம் அவஸ்தைப்படும் உடல்நல பிரச்சனைகள் தான் காரணம்.
அதில் சிலர் கோடையில் மட்டும் முட்டையை சாப்பிடுவதைத் தவிர்ப்பார்கள். இதற்கு முட்டை இயற்கையாக உடல் வெப்பத்தை அதிகரிக்கும் என்பதால். ஆனால் உணவுப் பொருட்களிலேயே முட்டை ஏராளமான சத்துக்களை தன்னுள் கொண்டுள்ளது.
உண்மையில் கோடையில் முட்டையை சாப்பிடலாமா? கூடாதா? இதுக்குறித்து உணவியல் நிபுணரான டாக்டர் நேஹா சன்வால்கா கூறுவதைத் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

உணவியல் நிபுணரின் கருத்து
உணவியல் நிபுணரான டாக்டர் நேஹா சன்வால்கா, இது ஒரு தவறான கருத்து என்று கூறுகிறார். மேலும் முட்டை இயற்கையாகவே உடல் வெப்பத்தை அதிகரிக்கும் தான், ஆனால் அது ஒரு முழுமையான உணவுப்பொருள் என்றும் சொல்கிறார்.

முட்டையின் சத்துக்கள்
முட்டையில் பல்வேறு வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்களான கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பாஸ்பரஸ் உள்ளது. கோடையில் முட்டையை சாப்பிடுவதால் செரிமான பிரச்சனை ஏற்படும் என்பது தவறான கருத்து.

உண்மை
உண்மையில் முட்டையை கோடையில் சாப்பிட்டால் உடல் வெப்பத்தை குறைக்கலாம். இதில் உள்ள ஏராளமான ஊட்டச்சத்துக்கள், கோடையில் உடலின் நீர்ச்சத்தை சீராக பராமரிக்க உதவும். மேலும் முட்டை உடலின் ஆற்றலை நீண்ட நேரம் தக்க வைத்து, கோடையில் சோர்வு மற்றும் பலவீனம் அடைவதைத் தடுக்கும்.

ஒரு நாளைக்கு எத்தனை முட்டை சாப்பிடலாம்?
கோடையில் ஒரு நாளைக்கு 1-2 முட்டையை சாப்பிடலாம் என்றும், அதற்கு அதிகமாக சாப்பிடக்கூடாது என்றும் டாக்டர் நேஹா கூறுகிறார்.

ஜிம் செல்வோர் எத்தனை சாப்பிடலாம்?
பொதுவாக ஜிம் சென்று தசைகளின் வளர்ச்சியை அதிகரிக்க நினைப்போர், ஒரு நாளைக்கு 4-6 முட்டைகளை சாப்பிடுவார்கள். ஆனால் கோடையில் 2-3 முட்டைகளை மட்டும் தான் சாப்பிட வேண்டும் என்று டாக்டர் நேஹா கூறுகிறார்.

ஏன் அதிகம் சாப்பிடக்கூடாது?
முட்டை இயற்கையாக உடலின் வெப்பத்தை அதிகரிக்கும் என்பதால், கோடையில் அளவுக்கும் அதிகமாக உட்கொண்டால், எவ்வளவு தான் சத்துமிக்கதாக இருந்தாலும், அதனால் அசௌகரியத்தையும், வயிற்று கோளாறுகளையும் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் உணவியல் நிபுணர் டாக்டர் நேஹா கூறுகிறார்.

முட்டையை எப்படி சாப்பிடுவது சிறந்தது?
முட்டையை கோடையில் எந்த வடிவிலும் எடுத்து வரலாம். இருப்பினும் வேக வைத்து சாப்பிடுவது தான் சிறந்தது என்று டாக்டர் நேஹா சொல்கிறார்.



Click it and Unblock the Notifications
