Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க
இரவில் படுக்கும் முன் பற்களைத் துலக்கினால் பெறும் நன்மை பற்றி தெரியுமா?
காலையில் எழுந்ததும் பற்களைத் துலக்குவோம். ஆனால் எத்தனை பேர் இரவில் படுக்கும் முன் பற்களைத் துலக்குவார்கள்? இரவில் பற்களைத் துலக்குவோரின் எண்ணிக்கையைப் பார்த்தால் மிகவும் குறைவாகவே இருக்கும்.
ஏனெனில் இரவில் சோம்பேறித்தனத்தால், பிரஷ் கொண்டு பற்களைத் துலக்காமல், சூயிங் கம் மெல்லுவது, மௌத் வாஷ் பயன்படுத்துவது என்று இருப்பார்கள்.
இந்த மாதிரியான பழக்கம் வாயின் ஆரோக்கியத்தை மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும் என்பது தெரியுமா? இங்கு இரவில் படுக்கும் முன் பற்களைத் துலக்குவதால் பெறும் நன்மைகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

சொத்தைப் பற்கள் தடுக்கப்படும்
இரவில் படுக்கும் முன் பற்களைத் துலக்குவதால், வாயில் பாக்டீரியாக்களின் பெருக்கம் தடுக்கப்படுவதோடு, பற்கள் சொத்தையாகும் அபாயமும் குறையும். ஆகவே உங்கள் பற்கள் சொத்தையாகாமல் இருக்க வேண்டுமானால், இரவிலும் பற்களைத் துலக்குங்கள்.

ஈறு நோய்கள் குறையும்
தினமும் காலையிலும், இரவிலும் பற்களைத் துலக்குவதால், வாய் ஆரோக்கியம் மேம்படுவதோடு, ஈறு சம்பந்தமான நோய்கள் வரும் அபாயமும் குறையும். ஏனெனில் இரவில் பற்களைத் துலக்கும் போது, பற்காறைகள் அகன்று, ஈறுகளின் ஆரோக்கியம் பாதுகாக்கப்பட்டு, ஈறு நோய்களில் இருந்து விடுபடலாம்.

வாய் துர்நாற்றம்
இரவில் பற்களைத் துலக்காமல் இருந்தால், காலையில் வாய் மிகுந் துர்நாற்றத்துடன் இருக்கும். இவை அனைத்திற்கும் உண்ட உணவுகள் பற்களின் இடுக்குகளில் தங்கி, பாக்டீரியாக்களின் பெருக்கம் அதிகரித்திருப்பது தான். எனவே தவறாமல் பற்களைத் துலக்குங்கள்.

உடல் எடை குறையும்
படுக்கும் முன் பற்களைத் துலக்குவதால், வாய் புத்துணர்ச்சியுடன் இருப்பதோடு, நடு ராத்திரியில் கண்டதை சாப்பிடும் பழக்கம் தடுக்கப்பட்டு, அதன் காரணமாக உடல் எடையும் குறையும்.

இதயம் பாதுகாக்கப்படும்
வாய் ஆரோக்கியம் இதய ஆரோக்கியத்துடன் தொடர்பு கொண்டது. ஒருவரது வாய் ஆரோக்கியமாக இல்லாவிட்டால், ப்ளேக் உருவாக்கத்திற்கு காரணமான பாக்டீரியாக்கள் இரத்த நாளங்களில் நுழைந்து, தமனிகளை பாதிக்கும். இதன் முடிவாக இதய நோயின் அபாயமும் அதிகரிக்கும்.



Click it and Unblock the Notifications
