Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
இளம் வயதில் உங்கள் பார்வை திறன் குறைவதற்கான 6 முக்கிய காரணங்கள் என்ன என்று தெரியுமா?
கண் இந்த உலகத்தை பார்க்க எவ்வளவு முக்கியம் என்பதை பார்வை இழந்தவர்கள் உணர்வார்கள். எதுவும் இருக்கும்போது அதன் அருமை தெரிவதில்லை.
இப்போதெல்லாம் 4 வயது குழந்தையும் கண்ணாடி போடும் நிலைக்கு தள்ள்ப்படுகிறார்கள். 35 வயதிற்கு மேல் 60 % மேலான மக்கள் கண்பார்வை குறைப்பாட்டிற்கு ஆளாகிறார்கள்.
இதற்கு வெறும் மரபணு காரணமட்டுமில்லை. நமது பழக்க வழக்கங்களும் வாழ்க்கை முறையுமே குற்றவாளிகள். சிறு வயதிலேயே கண்பார்வை குறைவதற்கு என்ன காரணங்களை கூறலாம்? தொடந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

எப்போதும் திரையை பார்க்கறீர்களா?
கம்ப்யூட்டர், மொபைல், லேப்டாப், டிவி என எல்லாம் மாறி மாறி நாம் தொடர்ந்து அவற்றின் சக்தி வாய்ந்த திரையை உற்று பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
இப்படி தொடர்ந்து 400 நிமிடங்கள் இந்த திரைகளை பார்ப்பதால் கண் பார்வை சிரமத்திற்கு ( digital eye strain- DES) ஆளாகிறோம்.
இதனால் கண் வலி, கண் மங்கலாக தெரிவது ஆகிய பிரச்சனைகளை உருவாக்குகிறது.
அதிர்ஷடவசமாக இந்த பிரச்சனையை நீங்களே சுலபமாக தீர்த்துக் கொள்ளலாம். 20-20- 20 என்ற கொள்கையை பின்பற்றுங்கள்.
20 நிமிடம் திரையை பார்த்தால் 20 அடி நடந்துவிட்டு வரவும் அல்லது 20 நொடிகள் கண்களை மூடுங்கள். இதனால் ரெட்டினா சிரமத்திற்குள்ளாவதை தடுக்கலாம்.

காண்டாக்ட் லென்ஸ் அதிக நேரம் போடுகிறீர்களா?
நாள் முழுவதும் காண்டாக்ட் லென்ஸ் போடுகிறீர்களென்றால் உங்கள் கண் அதிக வறட்சியாகும். அழுக்கு தூசிகள் எளிதில் கான்டாக்ட் லென்சில் படியும்.
இது கார்னியாவை பாதித்து பார்வை மங்கலாகிப் போக் வாய்ப்புகள் அதிகம். காண்டாக்ட் லென்ஸ் எப்போதும் ஆபத்தை உண்டாக்குபவை. ஆகவே லென்ஸை எடுத்துவிட்டு கண்ணாடி போடுவது நல்லது.

கார்னியாவில் பிரச்சனை :
உங்கள் கார்னியாவில் கீறல் விழுந்தால் அது உங்கள் பார்வை திறனை பாதிக்கும்.
தெரியாமல் நகத்தினால் கீறல் அல்லது காயம் பட்டிருந்தால் கண்ணில் வலி, உறுத்தல் தொடர்ந்து இருக்கும். கண் சிவந்து எரிச்சலோடு இருக்கும்.
மண் விழுந்தது போல் உணர்வு இருக்கும். இதனை கவனிக்காமல் விடும்போது கண்பார்வை குறைய வாய்ப்புகள் அதிகம் . உடனடியாக மருத்துவரை சென்று பார்க்க வேண்டும்.

கர்ப்பிணிகள் கவனிக்க :
கர்ப்பத்தின்போது சிலருக்கு இரண்டிரண்டு காட்சிகளாக தெரியும். மங்கலாக பார்வை தெரியும்.
இதற்கு காரணம் கர்ப்பத்தின்போது ஹார்மோன் மாற்றத்தால் கண்ணின் பின்பகுதியில் சுரக்கும் திரவத்தில் மாறுபாடு உண்டாகும்போது இந்த பிரச்சனை உண்டாகும்.
குழந்தை பிறந்ததும் இந்த பாதிப்பு நீங்கினாலும், அடிக்கடி கண்கள் வறண்டு போகும்.

அதிக மாத்திரைகளை எடுத்துக் கொள்கிறீர்களா?
அலர்ஜி, மன அழுத்தம் மற்றும் ரத்த அழுத்த அழுத்தத்திற்காக மாத்திரை எடுத்துக் கொண்டிருந்தால் உங்கள் கண்ணீர் சுரப்பை தடுத்துவிடும்.
இதனால் கண்கள் அதிக வறட்சி அடைந்து பாதிப்பை உண்டாக்கும். கண் பார்வை மங்குதல், வலி, சிவந்து போதல் , ஆகிய பிரச்சனைகள் உண்டாகும்.

க்ளாகோமா :
இந்த பாதிப்பில் அதிக திரவம் சுரந்து அது கண் நரம்புகளை பாதிக்கும். இதனால் கண் பார்வை இழக்க நேரிடும். க்ளகோமா குணப்படுத்தக் கூடியதல்ல.
ஆனால் ஆரம்பத்திலேயே அதனை கண்டறிந்தால் அதற்கு தகுந்த சிகிச்சை கொடுக்கும்போது கண்பார்வை இழக்காமல் காக்க முடியும்.



Click it and Unblock the Notifications