For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அன்றாட வீட்டு வேலைகளை செய்தால் உண்டாகும் நன்மைகள் தெரியுமா?

|

முன்னாடி பெண்கள் எல்லா வேலைகளையும் இழுத்து போட்டு செய்து வந்தார்கள். அம்மியில், ஆட்டுக்கல்லில் அரைப்பது, குனிந்து வீட்டை பெருக்குவது, துவைப்பது என உடலின் எல்லா பாகங்களுக்கு போதிய உடற்பயிற்சிகள் கிடைத்தன.

ஆனால் காலப்போக்கில் நவீன கருவிகளாலும், வீட்டு வேலைக்கு ஆள் வைத்தும், வேலைகளை செய்வதை மறந்தே போய்விட்டார்கள். அதோடு இந்த வேலைகள் எல்லாம் பெண்ணடிமைத்தனம் என்று வேறு சொல்லி செய்யாமல் தட்டிக் கழித்து வருகிறோம்.

Physical Activities may reduce Lower risk of Chronic Diseases

பெண்களும் அலுவலக வேலைக்கு போவது ஒரு காரணமாக சொல்வது ஏற்றுக் கொள்வதே. ஆனால் யோசித்து பாருங்கள். அப்போதிருக்கும் காலத்தை விட இப்போது நோய்கள் ஏன் பெண்களுக்கு அதிகரித்து வருகிறது. இதில் யாருக்கு நட்டம்?

பெண்களின் உடல் உறுப்புகளின் அமைப்பிற்கும் ஹார்மோன் சுரப்பிற்கும் மிகவும் ஏற்றது நாம் செய்யும் வீட்டு வேலைகள் என்பது தெரியுமா? பெண்ணடிமைத்தனம் என்பது எல்லாம் மூட்டைக் கட்டிவிட்டு,உடலுக்கு நல்லது என நினைத்தால் செய்வீர்கள்தானே?

ஏன் ஜிம், யோகாவிற்கு செல்வோமே என்று சொன்னால், பணத்தை விரயமாக்கி, நேரத்தை செலவிட்டு அங்கு செல்வதை விட நம் வீட்டு வேலை செய்வது ஒன்றும் அவமானமல்ல.

பொதுவாகவே உடற்பயிற்சியை பற்றி காலங்காலமாக சொல்லி வருகிறார்கள். நாம் சோம்பேறித்தனமாக விட்டு விடுகிறோம். நல்லது நடக்காவிட்டாலும் பரவாயில்லை. நல்லாதானே இருக்கிறோம் என்ற நம்முடைய எண்ணம்தான் நம்மை செய்ய விடாமல் செய்கிறது.

ஆனால் அதிக உடல் உழைப்பை தரும் அன்றாட வேலைகள், உடலுக்கு பாதகம் தரும் சில முக்கிய நோய்களை வரவிடாமல் தடுக்கிறது. அவை என்னென்ன தெரியுமா? மார்பக புற்று நோய், சர்க்கரை வியாதி,குடல் புற்று நோய், இதய நோய்கள்மற்றும் பக்க வாதம்.

எப்படிபட்ட பயிற்சிகள் ?

நீங்கள் தனியாக இதற்கென்று செய்யப்படும் உடற்ப்யிற்சிகளை இங்கு சொல்லவில்லை. அன்றாடம் வீட்டில் செய்யப்படும் வேலைகள்தான். மாடிப்படிக்கட்டு ஏறுவது, தோட்டத்தை சுத்தப்படுத்துவது, வீட்டை பெருக்கி துடைப்பது, நடப்பது, ஓடுவது, சைக்கிள் பயணம் இவற்றிற்கெல்லாம் தனியாக நாம் நேரம் ஒதுக்க தேவையில்லை.

ஒரு வாரத்திற்கு சுமார் 600 நிமிடங்கள்(metabolic equivalent ) உடற்பயிற்சிகள் இருந்தால் போதும் எந்த வித நோய்களும் அண்டாது என உலக சுகாதார நிறுவனம் கூறுகின்றது. ஆனால் நாம் செய்யும் அன்றாட வேலைகள் வாரத்தில் 3000- 4000 நிமிடங்களுக்கும் அதிகமாகவே உள்ளது.

நாம் அன்றாடம் செய்யும் வேலைகளால் எவ்வாறு நோய்கள் வரவிடாமல் தடுக்கப்படும் என சுமார் 174 ஆராய்ச்சிகள் தனித்தனியாக நடத்தப்பட்டன. இதில் இந்த அதிக உடற்பயிற்சிகளால் மார்பக, குடல் புற்று நோய்கள், பக்க வாதம் இதய நோய்கள் வரவிடாமல் தடுக்கும் என தெரிய வந்துள்ளது.

இந்த காலத்தில் புற்று நோய்கள், சர்க்கரை வியாதி, இதய நோய்கள் வருடா வருடம் அதிகரித்து வருகின்றன. இதற்கு நாம் வாழும் வாழ்க்கை முறைதான்காரணம். எந்த வித உடல் உழைப்பும் இல்லை. ஆனால் அதிக அளவு மசாலா, கெமிக்கல் கலந்த உணவு, உடல் பருமன் ஆகியவைதான் இவற்றிற்கு காரணம்.

முடிந்த வரையில் வீட்டு வேலைகளை நமக்கு நாமே செய்வதும், நல்ல ஆரோக்கியமான உணவுகளை சபபிடுவதும், உங்களுக்கு மகிழ்ச்சியான மற்றும் மன அமைதியான வாழ்க்கையை தரும் என்பதில் சந்தேகமில்லை.

English summary

Physical Activities may reduce Lower risk of Chronic Diseases

Physical Activities may reduce Lower risk of Chronic Diseases
Desktop Bottom Promotion