For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தூக்கத்தில் ஆளை அமுக்கும் "அமுக்குவான் பேய்" பற்றிய 9 உண்மைகள்!

|

நன்கு உறங்கிக் கொண்டிருக்கும் போது திடீரென நெஞ்சின் மீது யாரோ அமர்ந்துக் கொண்டு அமுத்துவது போல ஓர் உணர்வு வரும். இதை தான் அமுக்குவான் பேய் என நம் ஆட்கள் கூறுகின்றனர். ஆனால், உண்மையில் இதன் பெயர் தூக்க பக்கவாதம்.

நாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது உறக்கத்தில் பல நிலைகளை கடப்பது உண்டு. இந்த நிலை கடப்பதில் ஏற்படும் தொந்தரவு அல்லது அழுத்தம் / பிரச்சனைகளின் போது தான் தூக்க பக்கவாதம் ஏற்படுகிறது.

இது பேய், ஏலியன் அது, இது என பல கட்டுக்கதைகள் இருக்கின்றன. ஆனால், உண்மையில் தூக்க பக்கவாதம் என்றால் என்ன என்பது பற்றி நாம் அறிந்துக்கொள்ள வேண்டிய உண்மைகளும் சிலவன இருக்கின்றன...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உண்மை #1

உண்மை #1

தூக்க பக்கவாதம் ஏற்படும் போது நீங்கள் விழித்த போதிலும், உங்கள் உடல் அசையாத தன்மை பெற்றிருக்கும். இதனால் நீங்கள் உங்களை யாரோ கட்டி வைத்தது போல, அசையவிடாமல் தடுப்பது போல உணர்வீர்கள். சிலர் இந்த நிலையில் தாங்கள் இறந்தது போன்று உணர்வதும் உண்டு.

உண்மை #2

உண்மை #2

நாம் உறங்கும் போது பல நிலைகளை கடப்பது உண்டு. அதில் ஒன்று தான் ஆர்.ஈ.எம் (R.E.M) எனப்படும் ரேபிட் ஐ மூவ்மென்ட் (Rapid Eye Movement). இந்த நிலையில் தான் கனவுகள் தோன்றும். இந்த நிலைமாற்றதில் தொந்தரவு அல்லது பிரச்சனைகள் உண்டாகும் போது தூக்க பக்கவாதம் உண்டாகலாம்.

உண்மை #3

உண்மை #3

தூக்க பக்கவாதம் ஏற்படும் நபர்கள் அதை கெட்ட கனவாக உணர்வதும் உண்டு. கண்கள் திறந்த நிலையில், அசைய முடியாமல் இருப்பதால், சிலர் இதை பிரமை என்றும் எண்ணுகின்றனர். நமது ஊர்களில் இதனால் இதை சிலர் அமுக்குவான் பேய் எனவும் குறிப்பிடுவதுண்டு.

உண்மை #4

உண்மை #4

இந்த அசைய முடியாத நிலையில் இருந்து வெளிவர நீங்கள் காத்திருக்க தான் வேண்டும். ஒருசில நொடிகள் அல்லது ஒருசில நிமிடங்கள் வரை இந்த தூக்க பக்கவாதம் நீடிக்கலாம்.

உண்மை #5

உண்மை #5

தூக்க பக்கவாதம் என்பது ஓர் பெரிய உடல்நல குறைபாடு அல்ல. இது அனைவருக்கும் ஏற்படலாம். இது மிகவும் இயல்பான ஒன்று. சில சமயங்களில் நீங்கள் ஓயாது வேலை செய்து உறக்கமின்றி இருந்து, அயர்ந்து உறங்கும் போது உரக்க நிலைகளில் தொந்தரவு ஏற்பட்டு இந்த தூக்க பக்கவாதம் ஏற்படலாம்.

உண்மை #6

உண்மை #6

நீங்கள் போதியளவு தினமும் சரியாக உறங்காமல் இருந்தால் இந்த தூக்க பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன.

உண்மை #7

உண்மை #7

பெர்சியன் மருத்துவ நிபுணர்கள் 10-ம் நூற்றாண்டிலேயே இந்த தூக்க பக்கவாதத்தை பற்றி எழுதியுள்ளனர். ஆனால், அவர்கள் இதை தீய சக்தி, ஏலியன் செயல்பாடு, தூக்க வாதம் என பலவாறு குறிப்பிட்டுள்ளனர்.

உண்மை #8

உண்மை #8

இந்த தூக்க பக்கவாதம் என்பது உங்கள் நெஞ்சில் யாரோ அமர்ந்து அமுக்குவது போன்று இருக்கும். அதனால் தான் தூக்க பக்கவாதத்தை அமுக்குவான் பேய் என கூறுகிறார்கள்.

உண்மை #9

உண்மை #9

தூக்க பக்கவாதம் காரணமாக உங்களுக்கு அதிக அச்சம் ஏற்படலாமே தவிர, இதனால் யாரும் உயிரிழக்க வாய்ப்புகள் இல்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Nine Facts About Sleep Paralysis

Here we have revealed 9 Facts About Waking Up And Being Unable To Move.
Desktop Bottom Promotion