Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
பாலியல் வாழ்க்கை சிறப்பாக இருக்க வீட்டிலேயே சக்தி வாய்ந்த நேச்சுரல் வயாகரா தயாரிப்பது எப்படி?
பாலியல் வாழ்க்கை சிறப்பாக அமைய வயாகராவை பலர் உட்கொள்வார்கள். ஆனால் அந்த வயாகராவை வீட்டிலேயே தயாரிக்கலாம். இங்கு அந்த நேச்சுரல் வயாகராவை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது.
ஆண்களுக்கு ஏற்படும் விறைப்புத்தன்மை பிரச்சனைக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுவது தான் வயாகரா. இது இரத்த நாள சுவர்களை விரிவடையச் செய்து, குறிப்பிட்ட இடத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். அதற்காக கடைகளில் விற்கப்படும் வயாகரா மருந்து மாத்திரைகளை சாப்பிடாமல், இயற்கை வழிகளை நாடினால் பாலியல் பிரச்சனைகளில் இருந்து நிரந்தர தீர்வு கிடைக்கும்.

அதிலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள பானத்தைப் பருகினால், அது வயாகரா போன்று செயல்படுவதோடு, பாலியல் வாழ்க்கையை சிறப்பாக வைத்துக் கொள்ளும். இப்போது அந்த நேச்சுரல் வயாகரா பானத்தை எப்படி செய்வதென்று காண்போம்.

தர்பூசணி
தர்பூசணியில் சிட்ருலின் என்னும் அமினோ அமிலம் ஏராளமாக உள்ளது. இது ஆண் குறியில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, ஆண்களுக்கு ஏற்படும் பாலியல் பிரச்சனைகளைத் தடுக்கும்.

தேவையான பொருட்கள்:
தர்பூசணி - 1
எலுமிச்சை - 3

தயாரிக்கும் முறை:
* தர்பூசணியை துண்டுகளாக்கி, மிக்ஸியில் போட வேண்டும். குறிப்பாக தர்பூசணியில் உள்ள வெள்ளைப் பகுதியை தவறாமல் சேர்க்க வேண்டும்.
* பின் அதை நன்கு அரைத்து 1 லிட்டர் அளவு ஜூஸ் எடுத்து, ஒரு பாத்திரத்தில் ஊற்றி, சிறிது நேரம் கொதிக்க வைத்து, அத்துடன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து நன்கு கிளறி, கலவை பாதியானதும் இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு அதனை ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வைத்து, குளிர்ச்சியான மற்றும் ஈரப்பதமில்லாத இடத்தில் வைத்துப் பராமரிக்க வேண்டும்.

எடுக்கும் முறை:
சக்தி வாய்ந்த இந்த வயாகராவை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் 2 டேபிள் ஸ்பூனையும், இரவில் படுக்கும் முன் 2 டேபிள் ஸ்பூனையும் சாப்பிட வேண்டும்.

குறிப்பு
இந்த நேச்சுரல் வயாகராவில் இனிப்பு இல்லை என்பதற்காக, அதில் சர்க்கரையோ அல்லது தேனையோ தப்பித்தவறியும் சேர்க்காதீர்கள். இல்லாவிட்டால், இதன் முழு பலனையும் பெற முடியாது.

நல்ல செய்தி
இந்த நேச்சுரல் வயாகரா பானத்தை இதய பிரச்சனைகள், உயர் அல்லது தாழ் இரத்த அழுத்தம், பக்கவாதம், கண் பிரச்சனைகள், கல்லீரல் நோய்கள் மற்றும் சிறுநீரக நோய்கள் உள்ளோர் எவ்வித அச்சமும் இல்லாமல் உட்கொள்ளலாம்.



Click it and Unblock the Notifications