For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆஸ்துமாவை குணமாக்கும் ஜானு சிரஸாசனா - தினம் ஒரு யோகா

By Hemalatha
|

ஆஸ்துமா நாள்பட்ட நுரையீரல் பிரச்சனை. குளிர்காலங்களிலும் மழைக்காழங்களிலும், இந்த பிரச்சனை படுத்தி எடுக்கும்.

மூச்சிரைப்பு, சரியாக சுவாசிக்க முடியாத நிலை, நெஞ்சில் கபம் கட்டி, சில சமயம் நிலமை மோசமாவதுண்டு.

இதற்கு மருத்துவரிடம் சென்று இன்ஹேலர் உபயோகிப்பதை காட்டிலும் இயற்கையான யோகா அற்புத பலனைத் தரும்.

Janu sirasasana for asthma

வந்த பின் உபயோகிக்கும் இன் ஹேலரை விட, வராது காக்கும் யோகாவின் உன்னதத்தை புரிந்து கொள்ளுங்கள். ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் இந்த யோகாவினை தினமும் செய்தால், சுவாசப் பிரச்சனையின்றி, ஆஸ்துமாவிலிருந்து விடுபடலாம். இப்போது ஜானு சிரஸாசனா வைப் பற்றி காண்போம்.

ஜானு சிரஸாசனா :

ஜானு என்றால சமஸ்கிருதத்தில் முட்டி, சிரஸ் என்றால் தலை. மொட்டை தலைக்கும் முழங்காலிற்கும் முடிச்சு போடுவதை ஏதோ ஒரு வகையில் இங்கு சம்பந்தப்படுத்திக் கொள்ளலாம். தலையை முழங்காலோடு முட்டி செய்யும் இந்த ஆசனத்திற்கு ஜானு சிரஸாசனா என்று பெயர் வந்துள்ளது.

செய்முறை :

முதலில் தரையில் ஒரு விரிப்பின் மீது அமர்ந்து இரு கால்களையும் நீட்டிக் கொள்ளுங்கள். ஆழ்ந்து மூச்சை இழுத்தவாறு வலது காலைமடக்கி, இடது தொடையில் படுமாறு வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் மெதுவாய் மூச்சை விட்டபடி, குனிந்து இருகைகளாலும் இடது பாதத்தினை பிடித்துக் கொள்ளவேண்டும். மெல்ல தலையை தாழ்த்தி, முட்டி மீது படுமாறு செய்யுங்கள். இந்த நிலையில் 2-3 நிமிடங்கள் இருக்க வேண்டும்.

இதனை நிதானமாக செய்யுங்கள். அவசரமில்லை. தலை முட்டி மீது படவில்லையென்றால் சிரமப் பட வேண்டாம். தினமும் செய்யும்போது, தலையை முட்டி மீது படும் வரை முயற்சி செய்து கொண்டிருங்கள். பின்னர் நாளடைவில் எளிதாகிவிடும்.

பின்னர் இயல்பு நிலைக்கு வாருங்கள். இப்போது வலது காலை நீட்டி, இடது காலை மடக்கி இதேபோல் செய்யவேண்டும்.

பலன்கள் :

அடிவயிற்றில் இருக்கும் கொழுப்பு, முழுவதும் கரைகிறது. முதுவலி குறைந்துவிடும். ரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தும். ரத்ததை சுத்தப்படுத்தும்.

இன்சோம்னியா என்கின்ற தூக்கமின்மை வியாதியை குணப்படுத்தும். ஜீரணத்தை அதிகப்படுத்தும். சிறு நீரகம், கல்லீரல் செயல் புரியும். நுரையீரலை சுத்தப்படுத்தும் அதிக ஆக்ஸிஜனை நுரையீரலுக்கு அனுப்பச் செய்கிறது.

குறிப்பு : கர்ப்பிணிகள் இந்த யோகாவை செய்ய வேண்டாம்

இவ்வளவு நல்ல பலன்களை தரும் இந்த யோகாவினால் பலன் உண்டாகிறது என தெரிந்தும் செய்யாமல் இருந்தால் எப்படி? இன்றே தொடங்குங்கள். சுவாசப் பிரச்சனைகள் சரியாகட்டும்.

English summary

Janu sirasasana for asthma

Janu sirasasana for asthma
Desktop Bottom Promotion