For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கண் பார்வை குறைபாடா? இந்த 8 எளிய பயிற்சிகள் மூலம் எளிதாக முன்னேற்றம் காணலாம்!

By Hemi Krish
|

இந்தியாவில் கண்குறைபாடில்லாதோர் எண்ணிக்கை மிக குறைவு.அதுவும் 24/7 என கணிணி,மற்றும் மொபைலும் நம் உடலில் ஓர் அங்கமாக போய்விட்டது. ஆரம்ப நிலையிலுள்ள கிட்டபார்வைக்கும் தூரப் பார்வைக்கும் கண்ணாடியும்,கான்டாக்ட் லென்ஸும் மட்டும் தீர்வல்ல. கண்களுக்கு சில பயிற்சிகள் கொடுப்பதினாலும் அதனை நார்மலுக்கு கொண்டுவரலாம்.

இதோ கண்களை காப்பாற்ற 8 சுலபமான வழிகள்!

Improve Your Eyesight With This Easy Tricks

கண்களுக்கு ஓய்வு:

நீங்கள் கணிணியில் வேலை செய்பவர்களாக இருந்தால், அவ்வப்போது வெளிச்சம் குறைந்த அறைக்கு சில நிமிடங்கள் சென்று வாருங்கள். கணினியின் ஒளியை சற்று குறைத்து வேலை செய்யலாம்.

கண்ணாடி ஆபத்து:

நீங்கள் கண்ணாடி அணிபவராக இருந்தால், சில நிமிடங்களுக்கு கண்ணாடி அணிவதை தவிர்க்க வேண்டும். "கானா மருத்துவ இதழில்" எடுக்கப்பட்ட ஆய்விலும், ப்ரேஸில் மருத்துவ மாணவர்கள் எடுத்த ஆய்விலும் கண்ணாடி அணிவதால் கண்பார்வைக்கு தீங்கு விளைவிக்கும் என கண்டறிந்துள்ளார்கள்.

கண் மசாஜ்:

கட்டை மற்றும் ஆட்காட்டி விரல்களால் கண்களை சுற்றியும் மெதுவாய் மசாஜ் செய்ய வேண்டும்.அதேபோல் பின்னந்தலையில் மசாஜ் செய்வதனால் கண்களுக்கும் ரத்த ஓட்டம் அதிகம் பாய்ந்து கண்கள் சுறுசுறுப்படைகிறது.

20-20-20:

நீங்கள் தொடர்ச்சியாக கணிணி பார்ப்பவராக இருந்தால், ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு ஒருமுறை 20 அடி தள்ளிபோய் நின்று 20 நொடிகளாவது இடைவேளை தர வேண்டும். அதனை மனதில் வைத்துக் கொள்ளத்தான் 20-20-20.

இயற்கையோடு உறவாடு:

அலுவலகம் வீடு என ஒரே இடத்தில் அடைபட்டு கிடக்காமல், அவ்வப்போது மரம் பசுமை சூழ்ந்த இடங்களுக்கு செல்வது கண்களுக்கும் மனதிற்கும் அமைதி தரும்.

கண்களுக்கு ஒத்தடம்:

கண்களுக்கு இளஞ்சூட்டில் பருத்தி துணியில் ஒத்தடம் கொடுப்பதால், கண்கள் வறண்டு போகாமல்.ஈரப்பதத்துடன் இருக்கும்.

கேரட் மற்றும் சக்கரைவள்ளிக் கிழங்கு உணவில் அடிக்கடி எடுத்துக் கொள்ளவேண்டும். இதிலிருக்கும் உயர்ரக வைட்டமின் எ சத்து கண் பார்வைக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்து ஆகும்.

Desktop Bottom Promotion