For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஏன் அந்த காலங்களில் வீடுகளை கிழக்கு பார்த்து கட்டினார்கள்?

|

விட்டமின் டி கொழுப்பில் கரையும் விட்டமின். விட்டமின் டி நமது எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான தேவை.

அதோடு விட்டமின் டி நமது உடலில் கால்ஸிட்ரையால் என்ற ஹார்மோனாக மாறி கால்சியம் சத்தை எலும்புகளில் அதிகரிக்கச் செய்கின்றன. இதனால் எலும்புகள் பலமாக உருவாகிறது. விட்டமின் டி குறையும் போது, கால்சியம் எலும்புகளில் உறிவதும் குறைகிறது. ஆக கால்சியம் சத்து அதிகரிக்க விட்டமின் டி இன்றியமையாதது.

Impacts of vitamin D Deficiency

இந்த விட்டமின் டி யை கடல்வகை உணவுகள், பருப்பு, தானிய வகைகள், பால், முட்டை, சூரிய காந்தி எண்ணெய் ஆகியவற்றில் உள்ளது. இவற்றை எல்லாம் விட சூரிய புற ஊதாக் கதிர்களில்தான் மிக அதிக அளவில் இருக்கின்றன.

விட்டமின் டி குறைபாடு :

விட்டமின் டி குறைப்பாட்டினால், கால்சியம் அளவும் குறைகிறது. இதனால் எலும்பு தேய்மானம், பற்கள் பலவீனம் ஆகியவைகள் உண்டாகிறது. குழந்தைகளை ரிக்கெட்ஸ், பெரியவர்களுக்கு ஆஸ்டியோஃபோரோஸிஸ் மற்றும் ஆஸ்டியோ மலேஸியா ஆகியவை தீவிர விட்டமின் டி குறைபாட்டினால் ஏற்படுகிறது. இந்த நோய்களால் எலும்புகள் மிகவும் மென்மையாகும். வலிமை இழக்கும். நடக்க இயலாமல் போய்விடும்.

சமீபத்திய புதிய ஆய்வில், விட்டமின் டி பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாக்கிறது என கண்டுபிடித்துள்ளனர். ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதிக்கு எதிராக செயல்படுகிறது. அதேபோல், புற்றுநோய், மன அழுத்தத்திலிருந்தும் பாதுகாக்கிறது. நோயெதிர்ப்பு சக்தியை தூண்டுகிறது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

அதேபோல் புற்றுநோயாளிகளுக்கு, இதய நோயாளிகளுக்கு மற்றும் ஆஸ்துமா நோயாளிகளுக்கு விட்டமின் டி உட்கிரகிக்கும் தன்மையும் குறைந்துவிடும். இதனால் இவர்களின் உடலில் விட்டமின் டி குறைவாகவே இருக்கும் என கண்டுபிடித்துள்ளனர்.

சமீப காலமாக பெரும்பாலோனோர் விட்டமின் டி குறைப்பாட்டினால் பாதிக்கப்படுகிறார்கள். காரணம் பெரும்பாலும் வெளியில் வராமல் அடங்கி இருப்பது.பழைய காலத்தில் ஒவ்வொரு வீட்டையும் கிழக்கு பார்த்துதான் கட்டினார்கள். காரணம் சூரிய ஒளி வீட்டில் படவேண்டுமென்பதுதான்.

இதனால் நாலாப்புறமும் காற்றோட்டமாக வெளிச்சம் வரும் வகையில்தான் கட்டினார்கள். ஆனால் இப்போது, அடுக்குமாடி குடியிருப்புகளில் இரவு பகல் தெரியாமல் உள்ளேயே முடங்கி இருப்பதால்தான் போதிய சூரிய வெளிச்சமில்லாமல் விட்டமின் டி குறைப்பட்டால் பாதிக்க நேரிடுகிறது.

உடலுக்கு ஆதரமான எலும்புகள் தேய்ந்து மூட்டுவலி, முதுகுவலி, ஆஸ்டியோஃபோரோஸிஸ் ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறோம்.

English summary

Impacts of Vitamin D Deficiency

Impacts of vitamin D Deficiency
Story first published: Tuesday, August 9, 2016, 18:11 [IST]
Desktop Bottom Promotion