ஆண்களே! உச்சா போகும் போது ரொம்ப எரியுதா? இப்படி செய்யுங்க சரியாகும்...!

சிறுநீர் பாதை தொற்றானது பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும் ஏற்படும். இதன் ஆரம்ப அறிகுறி, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சலை சந்திப்பது தான்.

நம் உடலின் ஆரோக்கியத்திற்கு சத்தான மற்றும் சமச்சீரான உணவு மிகவும் அவசியம். அதை விட அந்த உணவு செரித்து அதன் மூலம் உருவாகும் கழிவுப் பொருட்கள் உடலை விட்டு வெளியேறுவது மிகவும் முக்கியம். ஒரு நாள் நமக்கு மலம், ஜலம் பிரியவில்லை எனில், நாம் படும் பாடு சொல்லி மாளாது.

Homemade Recipes To Treat Urinary Tract Infection

அத்தகைய மிக முக்கியம் வாய்ந்த உறுப்பான சிறுநீர் பாதையில் ஏற்படும் நோய் தொற்றானது நம்மை அதிக பாதிப்பிற்கு உள்ளாக்குகின்றது. சிறுநீர் பாதையில் ஏற்படும் நோய் தொற்றை குணப்படுத்த ஏராளமான மருந்துகள் இருந்த பொழுதிலும், அதை வீட்டில் உள்ள சில உணவுப் பொருட்களைக் கொண்டே சரி செய்து விடலாம்.

சிறுநீர் பாதை தொற்றானது பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும் ஏற்படும். இதன் ஆரம்ப அறிகுறி, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சலை சந்திப்பது தான். உணவுகள் மற்றும் பழச்சாறுகள் சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்களை தீர்க்கும் இயற்கையான மருந்துகளாக உள்ளன. அதோடு வேறு சில எளிய செயல்களைப் பின்பற்றுவதன் மூலமும், சிறுநீர் பாதையில் ஏற்பட்டுள்ள தொற்றினைப் போக்கலாம். இப்போது அவை என்னவென்று பார்ப்போம் வாருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அதிக நீரைப் பருகவும்

அதிக நீரைப் பருகவும்

சிறுநீரக தொற்று இருப்பவர்கள், தினமும் அதிக தண்ணீரை குடிக்க வேண்டும். இதனால் சிறுநீர்ப்பையில் உள்ள பாக்டீரியாக்கள் வேகமாக சிறுநீரின் வழியே வெளியேறும். மேலும் நீர் அதிகம் குடிப்பதன் மூலம், சிறுநீரின் அமிலத்தன்மை நீர்க்கப்பட்டு, சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் வலி சற்று குறையும்.

சிறுநீரானது உடலில் உள்ள கழிவுகளால் ஆனது. சிறுநீர்ப்பையில் தொற்றுகள் ஏற்பட்டிருக்கும் போது, சிறுநீரின் அடர்த்தி அதிகம் இருந்தால், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சலுடன், வலியையும் உணரக்கூடும். ஆகவே சிறுநீரின் அடர்த்தியைக் குறைப்பதற்கு நீரை அதிகம் குடிக்க வேண்டும்.

காப்ஃபைன் பானங்களைத் தவிர்க்கவும்

காப்ஃபைன் பானங்களைத் தவிர்க்கவும்

ஒருவருக்கு சிறுநீர்ப்பையில் தொற்றுகள் ஏற்பட்டிருந்தால், காப்ஃபைன் நிறைந்த பானங்களான காபி, டீ மற்றும் சோடா பானங்களைத் தவிர்க்க வேண்டும். பொதுவாக காப்ஃபைனானது சிறுநீர்ப்பையில் எரிச்சலை உண்டாக்கும். அதிலும் தொற்று ஏற்பட்டிருக்கும் போது குடித்தால், இன்னும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகக்கூடும்.

அடிக்கடி சிறுநீர் கழிக்கவும்

அடிக்கடி சிறுநீர் கழிக்கவும்

சிறுநீர்ப்பையில் தொற்றுகள் ஏற்பட்டிருக்கும் போது, அடிக்கடி சிறுநீர் கழிப்பதன் மூலம் பாக்டீரியாக்கள் வேகமாக வெளியேற்றப்படும். சிறுநீரை அடக்குவதன் மூலம், சிறுநீர்ப்பையில் உள்ள பாக்டீரியாக்கள் பெருகி நிலைமையை மேலும் மோசமாக்கும்.

அதிலும் உடலுறவில் ஈடுபட்ட பின் சிறுநீர் கழிப்பது மிகவும் நல்லது. ஏனென்றால், உடலுறவு செயல்பாட்டில் ஈடுபடும் போது, பாக்டீரியாக்கள் வேகமாக சிறுநீர் பாதையில் தள்ளப்பட்டு, சிறுநீரகத் தொற்றுக்களை எளிதில் உண்டாக்கி, அவஸ்தைப்படச் செய்யும். ஆகவே அடிக்கடி சிறுநீர் கழியுங்கள்.

ஆன்டி-பயாடிக்ஸ் எடுக்கவும்

ஆன்டி-பயாடிக்ஸ் எடுக்கவும்

ஆன்டி-பயாடிக்ஸ் சிறுநீர்ப்பைத் தொற்றுக்களை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும். எனவே சிறுநீர்ப்பை தொற்றுக்களால் அவஸ்தைப்படுபவர்கள், மருத்துவர்களை அணுகி, அவர்கள் பரிந்துரைக்கும் ஆன்டி-பயாடிக்குகளை தவறாமல் எடுக்க வேண்டும். அதுவும் இயற்கையாக சரிசெய்ய முயற்சித்தும் இரண்டு நாட்களில் சரியாகாவிட்டால், உடனே மருத்துவரை அணுகுவதே நல்லது.

வலி நிவாரணிகள்

வலி நிவாரணிகள்

தீவிர சிறுநீர்ப்பை தொற்றுக்கள் அடிவயிற்றுப் பகுதியில் கடுமையான வலியை உண்டாக்கும். அதுவும் சிறுநீர் கழிக்க முடியாத அளவில் வலியை உண்டாக்கும். ஆன்டி-பயாடிக்குகள் தொற்றுக்களுக்கு சிகிச்சை அளிக்கும். ஆனால் ஆன்டி-பயாடிக்குகள் பாக்டீரியாக்களை மெதுவாகத் தான் அழிக்குமே தவிர, வலியைக் குறைக்காது. எனவே வலியில் இருந்து விடுபட, மருத்துவரிடம் வலி நிவாரணிகளை கேட்டறிந்து பயன்படுத்துங்கள்.

வெப்பமூட்டும் பைகள்

வெப்பமூட்டும் பைகள்

முதுகு அல்லது அடிவயிற்றுப் பகுதியில் வெப்பமூட்டும் பைகளில் சுடுநீரை நிரப்பி ஒத்தடம் கொடுப்பதன் மூலம், சிறுநீர்ப்பை தொற்றுக்களால் ஏற்படும் வலியில் இருந்து சற்று நிவாரணம் அளிக்கும். முக்கியமாக இவற்றை மருந்து மாத்திரைகளை எடுக்கும் போது பயன்படுத்துவது மிகவும் உபயோகமாக இருக்கும்.

சரியான உடைகளை அணியவும்

சரியான உடைகளை அணியவும்

பொதுவாக பாக்டீரியாக்கள் வெதுவெதுப்பான மற்றும் ஈரமான பகுதிகளில் செழித்து வளரும். எனவே இறுக்கமான ஜீன்ஸ் மற்றும் இதர இறுக்கமான ஆடைகளை அணிவதைத் தவிர்ப்பது நல்லது. இதனால் அந்தரங்க பகுதியில் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கலாம்.

இப்போது சிறுநீர்ப்பை தொற்றுக்களை சரிசெய்ய உதவும் பானங்கள் எவையென்று பார்ப்போம்.

க்ரான்பெர்ரி மற்றும் ப்ளூபெர்ரி ஜூஸ்கள்

க்ரான்பெர்ரி மற்றும் ப்ளூபெர்ரி ஜூஸ்கள்

இந்த ஜூஸ்கள் சிறுநீரக மற்றும் சிறுநீர்ப்பை தொற்றுகளை குணப்படுத்தும் அருமருந்தாகப் பயன்படுகின்றது. இந்த ஜூஸ்களில் ப்ரொஅன்ந்தோச்யானிடீன்ஸ் அதிக அளவில் உள்ளன. அவை சிறுநீர்ப்பையின் புறத்தே ஒட்டிக் கொண்டிருக்கும் பாக்டீரியாக்களை தடுக்கின்றது.

ராஸ்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி மற்றும் கருந்திராட்சை ஜூஸ்கள்

ராஸ்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி மற்றும் கருந்திராட்சை ஜூஸ்கள்

இந்த ஜூஸ்கள் சிறுநீர்ப்பை அழற்சிக்கான சிகிச்சைக்கு பயன்படுகின்றன. இதைத் தவிர சவலைக்கீரை மற்றும் வெள்ளரிச்சாறு போன்றவையும் இந்த நோயை குணப்படுத்த உதவுகின்றது.

எலுமிச்சை ஜூஸ்

எலுமிச்சை ஜூஸ்

ஒரு புதிய தினத்தை ஒரு டம்ளார் வெந்நீருடன் சிறிது அளவு எலுமிச்சை சாறு சேர்த்து பருகுவதுடன் தொடங்குங்கள். எலுமிச்சை சாற்றில், இரத்தம் மற்றும் சிறுநீர் பாதையின் கார அளவை மாற்றக்கூடிய தன்மை உள்ளது. அதன் காரணமாக பாக்டீரியா தொற்றானது மட்டுப்படுவதுடன், அதன் பரவலும் கட்டுப்படுகின்றது.

வேறு சில உணவுகள்

வேறு சில உணவுகள்

சிறுநீர்ப்பை அழற்சி உள்ளவர்கள் ஒரு சில உணவுகளை உட்கொள்வது அவர்களுடைய நோயின் தீவிரத்தைக் குறைக்கும். மேலும் இத்தகைய உணவு வகைகள் உங்களுடைய சிறுநீரகம் மற்றும் சிறுநீரகப் பாதையானது, தன்னுடைய பழைய நிலைக்கு திரும்ப உதவி புரியும் .

வேறு சில உணவுகள்

வேறு சில உணவுகள்

ஒரு சில உணவுகள் நோயின் தீவிரத்தை குறைக்கும். வேறு சில உணவுகள் நோயின் தீவிரத்தை அதிகப்படுத்தும். நீங்கள் சிறுநீர்ப்பை அழற்சியால் பாதிக்கப்பட்டிருந்தால் ஒரு சில இயற்கை உணவுகளை உட்கொள்வது நோயின் தீவிரத்தை குறைத்து உங்களுக்கு அமைதி தரும். உங்களுடைய சிறுநீர்ப்பை அழற்சி, சிறுநீர் மற்றும் சிறுநீர்ப்பை தொற்று போன்றவற்றை குணப்படுத்த நம் வாழ்வில் பயன்படுத்தும் அன்றாட பொருட்கள் மற்றும் உணவுகள் உள்ளன. அதைப் பயன்படுத்தி உங்களின் நோயை குணப்படுத்தலாம்.

கீரை சாறு + தேங்காய் நீர்

கீரை சாறு + தேங்காய் நீர்

கீரைகளை சாலட்களில் சேர்த்து அதை அப்படியே சாப்பிடலாம். அல்லது அதை ஜூஸாக பருகலாம். உங்களுக்கு விருப்பம் இல்லையெனில் கீரைகளை மருந்து வடிவிலும் உட்கொள்ளலாம். சம அளவுள்ள கீரைச் சாறு மற்றும் இளநீரை கலந்து ஒரு நாளைகு மூன்று வேளை பருகி வருவது சிறுநீர்த் தொற்று சம்பந்தமான நோய்களைக் குறைக்கும்.

வெள்ளரிக்காய் சாறு + எலுமிச்சை + தேன்

வெள்ளரிக்காய் சாறு + எலுமிச்சை + தேன்

வெள்ளரிகளை, முழுதாக காய்கறியாகவும் அல்லது சாறு எடுத்தும் அருந்தலாம். நீங்கள் எந்த வடிவில் வெள்ளரிக்காயை எடுத்துக் கொண்டாலும் அது உங்களுடைய சிறுநீர்த் தொற்றை குணப்படுத்தும். இதை விட ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கப் புதிய வெள்ளரிச்சாறு மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் போன்றவற்றை கலந்து ஒரு நாளைக்கு 3 முறை அருந்தி வருவது அதிக பலன்களைத் தரும்.

பச்சை காய்கறிகள் + பழங்கள்

பச்சை காய்கறிகள் + பழங்கள்

நீங்கள் சிறுநீரக அழற்சியால் பாதிக்கப்பட்டிருந்தால், கேரட், கருந்திராட்சை, வெள்ளரி மற்றும் கீரை சாறுகள் போன்றவற்றை தினசரி எடுத்துக் கொள்வது உங்களுக்கு அதிக பயன் தரும். உங்களுக்கு சிறுநீர்ப்பை அழற்சி மற்றும் சிறுநீர்ப்பை தொற்று போன்ற நோய்கள் இருந்தால், உங்களுடைய தினசரி உணவு பழக்கத்தை மாற்றிக் கொள்ளுங்கள். உங்களுடைய உணவில் பழங்கள் மற்றும் பச்சை காய்கறிகள் அதிகம் இடம் பெறுவது மிகவும் அவசியமாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion