Latest Updates
-
வார ராசிபலன் (09 August 2026- 15 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
மழைக்காலத்தில் பார்லர் போக நேரமில்லையா? அப்ப இந்த 5 ஃபேஸ் ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
வாய் துர்நாற்றம் உங்களை அசௌகரியமா உணர வெக்குதா? அதிலிருந்து விடுபட இதோ சில வழிகள்!
வாய் துர்நாற்றம் என்பது நிறைய பேர் சந்திக்கும் ஓர் பொதுவான பிரச்சனையாகும். ஒருவரது வாயில் இருந்து துர்நாற்றம் வீசினால், அருகில் வந்து பேசுவோர் மிகுந்த அசௌகரியத்தை உணர்வதுடன், அடுத்த முறை அருகில் வரக்கூட யோசிப்பார்கள். இம்மாதிரியான சூழ்நிலை நிச்சயம் பலருக்கு அசிங்கமாக இருக்கும்.
வாய் துர்நாற்றம் வீசுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் மோசமான வாய் சுகாதாரம், ஆரோக்கிய பிரச்சனைகள், வெங்காயம், பூண்டு போன்ற உணவுகள், வாய் வறட்சி, புகைப்பிடித்தல், மருந்துகள் போன்றவை குறிப்பிடத்தக்கவை.
இங்கு வாய் துர்நாற்றத்தைப் போக்கும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து பின்பற்றி வாய் துர்நாற்றத்தைப் போக்குங்கள்.

கிராம்பு
கிராம்பில் ஆன்டி-பாக்டீரியல் பொருள் அதிகம் உள்ளது. இது வாயில் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுத்து, வாயை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும். அதற்கு தினமும் 2-3 கிராம்பை வாயில் போட்டு மென்று வாருங்கள்.

எலுமிச்சை
எலுமிச்சையில் உள்ள அசிட்டிக் உட்பொருட்கள் பாக்டீரியாக்களை அழித்து, ஈறு நோய்கள் வராமல் தடுக்கும். மேலும் எலுமிச்சையில் இருந்து வீசும் மணம், வாய் துர்நாற்றத்தைத் தடுக்கும். அதற்கு தினமும் எலுமிச்சை
நீரைக் கொண்டு தினமும் இரண்டு முறை வாயைக் கொப்பளியுங்கள்.

பார்ஸ்லி
பார்ஸ்லி கீரையும் வாய் துர்நாற்றத்தைப் போக்கும். இதில் உள்ள குளோரோபில் வாய் துர்நாற்றத்தைத் தடுக்கும். அதற்கு சிறிது பார்ஸ்லி கீரையை வாயில் போட்டு மெல்ல வேண்டும்.

புதினா
புதினாவும் வாய் துர்நாற்றத்திற்கான ஓர் அற்புத பொருள். இதனை தினமும் வாயில் போட்டு அடிக்கடி மென்று வந்தால், வாய் துர்நாற்றம் வீசுவது தடுக்கப்படும்.

துளசி
உங்கள் வீட்டில் துளசி செடி இருந்தால், தினமும் துளசியை வாயில் போட்டு, மென்று வந்தால், வாய் துர்நாற்றம் நீங்குவதோடு, வாய் புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.

ஏலக்காய்
ஏலக்காயினுள் உள்ள விதைகளை வாயில் போட்டு மென்றால், வாய் துர்நாற்றம் நீங்கி, வாய் புத்துணர்ச்சி அடைவதோடு, சோர்ந்துள்ள மனநிலையும் மேம்படும்.

சோம்பு
சோம்பில் உள்ள ஆன்டி-மைக்ரோபியல் தன்மை, வாயில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, வாய் துர்நாற்றம் வீசுவதைத் தடுக்கும். எனவே வாய் புத்துணர்ச்சியுடன் இருக்க சோம்பு டீ அல்லது சோம்பை வாயில் போட்டு மெல்லுங்கள்.

பட்டை
பட்டை வாயில் உள்ள பாக்டீரியாக்களின் பெருக்கத்தைக் குறைக்கும். அதற்கு கொதிக்கும் நீரில் பட்டையைப் போட்டு , அத்துடன் பிரியாணி இலை, ஏலக்காய் சேர்த்து கொதித்ததும் இறக்கி, வடிகட்டி குளிர வைத்து, அந்நீரால் தினமும் இரண்டு முறை வாயைக் கொப்பளித்தால், வாய் துர்நாற்றம் நீங்கும்.

பேரிக்காய்
பேரிக்காயில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது வாயில் எச்சிலின் உற்பத்தியை அதிகரிக்கும். மேலும் இது வாயில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, நீண்ட நேரம் வாய் புத்துணர்ச்சியுடன் இருக்க உதவும். ஆகவே தினமும் ஒரு பேரிக்காய் சாப்பிட்டு வாய் துர்நாற்றத்தைப் போக்குங்கள்.

பேக்கிங் சோடா
பேக்கிங் சோடா பாக்டீரியாக்களை எதிர்த்து, வாயில் அமிலங்களின் அளவை சீராக வைத்து, வாய் துர்நாற்றத்தைத் தடுக்கும். எனவே தினமும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து, வாயைக் கொப்பளியுங்கள்.



Click it and Unblock the Notifications