இந்த உணவுகள் நம்மை மெதுவாக அழித்துக் கொண்டிருக்கிறது என்று தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

தற்போது ஃபாஸ்ட் ஃபுட்டை தான் பெரும்பாலானோர் சாப்பிடுகின்றனர். தினமும் பழங்கள், காய்கறிகளைச் சாப்பிடுகிறோமோ இல்லையோ, ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளைத் தவறாமல் சாப்பிடுகிறோம். மேலும் நாம் சாப்பிடும் சில உணவுகள் மெதுவாக நம்மை அழித்துக் கொண்டிருக்கிறது என்று நமக்கு தெரிவதில்லை.

வாழ்நாளைக் குறைக்கும் ஆபத்தான உணவுகள்!!!

அப்படியே தெரிந்தாலும், ஒருமுறை தான் அல்லது சிறிது தான் என்று கூறிக் கொண்டு நம்மில் பலர் ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொண்டு வருகிறோம். இங்கு அப்படிப்பட்ட சில மோசமான உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அந்த உணவுகள் என்னவென்று தெரிந்து கொண்டு, அவற்றைத் தவிர்த்து, உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிட்சா

பிட்சா

பிட்சா ஆரோக்கியமற்றது என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்று தான். இருப்பினும் நிறைய மக்கள் அந்த பிட்சாவை மாதத்திற்கு ஒருமுறைவது சுவைத்துவிடுகிறார்கள். அதிலும் அலுவலகம் மற்றும் காலேஜ் செல்பவர்களை எடுத்துக் கொண்டால், வாரத்திற்கு ஒருமுறை பிட்சா சுவைத்துவிடுவார்கள்.

பிட்சாவில் கெட்ட கொழுப்புக்கள், ஸ்டார்ச் மற்றும் இதர சர்க்கரைகள் நிறைந்துள்ளது. இவை ஆரோக்கியத்தை மெதுவாக அழித்து, நாளடைவில் இறப்பை சந்திக்க வைத்துவிடும்.

பட்டர் பாப்கார்ன்

பட்டர் பாப்கார்ன்

பொழுதுபோக்கிற்காக வாரத்திற்கு ஒருமுறை விடுமுறை நாளில் திரைப்படம் காண தியேட்டர் செல்வோம். அப்படி திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது, பலருக்கும் ஸ்நாக்ஸாக பாப்கார்ன் வாங்கி சாப்பிடுவோம். ஆனால் அந்த பாப்கார்ன் உடல் ஆரோக்கியத்திற்கு உலை வைத்துக் கொண்டிருக்கிறது என்று தெரியுமா?

கொழுப்புமிக்க பால்

கொழுப்புமிக்க பால்

பால் உடலுக்கு ஆரோக்கியமானது தான். ஆனால் கொழுப்பு நிறைந்த பாலை குடித்தால், அதில் உள்ள சாச்சுரேட்டட் கொழுப்புக்கள், உடலில் கொலஸ்ட்ரால் அளவை அதிகரித்துவிடும். எனவே பால் குடிப்பதாக இருந்தால், கொழுப்பு நீக்கப்பட்ட பாலைக் குடியுங்கள்.

கடைகளில் விற்கப்படும் பிரட்

கடைகளில் விற்கப்படும் பிரட்

பேக்கரியில் விற்கப்படும் பிரட்களில் சர்க்கரை, கொழுப்பு மற்றும் பதப்படுத்தும் உட்பொருட்கள் நிறைந்துள்ளது. இவை இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்றவற்றுடன் நேரடியாக தொடர்பு கொண்டது. ஆகவே இம்மாதிரியான உணவுப் பொருட்களை அதிகம் சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள்.

ஐஸ் க்ரீம்

ஐஸ் க்ரீம்

தற்போது நிறைய பேர் ஐஸ் க்ரீம்மிற்கு அடிமையாக உள்ளனர். ஆனால் உணவுப் பொருட்களிலேயே ஐஸ் க்ரீம் மிகவும் மோசமானது. இதில் சர்க்கரை அதிகமாகவும், கொழுப்புக்கள் ஏராளமான அளவிலும் உள்ளது. எனவே இதனை உட்கொண்டால், உடல் பருமன் அதிகரிப்பதோடு, இதர பிரச்சனைகளை பரிசாகவும் பெறக்கூடும்.

சோடா

சோடா

சோடா பானங்களை அமெரிக்கர்கள் மட்டுமின்றி, இந்தியர்களும் விரும்பி பருகுகின்றனர். இந்த பானங்களில் கலோரிகள் சர்க்கரை வடிவில் உள்ளது. இதனால் சர்க்கரை நோயின் அபாயம் அதிகம் உள்ளது. அதே சமயம் இதில் அசிட்டிக் அதிகம் உள்ளதால், இதன் காரணமாக தொடர்ச்சியாக இதனைப் பருகினால் இன்னும் மோசமான உடல்நல பிரச்சனையால் அவஸ்தைப்படக்கூடும்.

உருளைக்கிழங்கு சிப்ஸ்

உருளைக்கிழங்கு சிப்ஸ்

எண்ணெயில் பொரிக்கப்படும் உருளைக்கிழங்கு சிப்ஸ், கலோரிகள், ஸ்டார்ச், கொழுப்புக்கள் மற்றும் புற்றுநோய்க்கு காரணமான உட்பொருட்களுடன் தொடர்பு கொண்டுள்ளது. எனவே உருளைக்கிழங்கு சிப்ஸை விரும்பி சாப்பிடுபவர்களானால், முதலில் அதைத் தவிர்த்திடுங்கள்.

டோனட்ஸ்

டோனட்ஸ்

டோனட்ஸ் நிறைய பேர் விரும்பி சாப்பிடும் சர்க்கரை அதிகம் நிறைந்த மோசமான உணவுப் பொருள். அதோடு அதில் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் அதிகமாக உள்ளது. மேலும் ஒரு டோனட்ஸில் சுமார் 400 கலோரிகள் உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Foods That are Killing You Slowly

Here are some foods that are killing you slowly. Read on to know more...
Subscribe Newsletter