For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கண்கள் துடித்தால், நன்மையா? தீமையா?

|

எல்லாருக்குமே கண்கள் சில சமயங்களில் துடிக்கும். வலது கண் துடித்தால் கெட்டது, இடது கண் துடித்தால் நல்லது என நாமாகவே கண்களையும் விட்டு வைக்காமல் ஜோசியம் பார்த்துவிடுகிறோம். இதில் நல்லது என்று சொல்ல முடியாது. வேண்டுமானால் கெட்டது எனக் கூறலாம்.

Eye twitching is good sign or bad sign?

ஏனெனில் கண்கள் துடிப்பதற்கு நிறைய காரணங்கள் உண்டு. சாதாரண தூக்கமின்மையில் தொடங்கி, மூளை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரை கண்கள் துடிப்பதற்கு பின் நிறைய காரணங்கள் உள்ளது.

கண்கள் துடிப்பது, வந்து ஒரு சில நிமிடங்களில் தானாகவே போய் விடும். இது சாதாரணமாய் எல்லோருக்கும் வரும். பயப்பட வேண்டியது இல்லை. ஆனால் அது மாதக்கணக்கில் நீடித்தால், நிச்சயம் மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

கண் துடிப்பது எதனால்?

கண்களின் மெல்லிய நரம்புகளையும், தசைகளையும் பாதிக்கும் வகையில் தொடர்ச்சியாக நடந்து கொண்டால், கண்கள் துடிக்கும். சில சமயங்களில் வெட்டி இழுப்பது போலவும் இருக்கும். கண்கள் துடிப்பதற்கு மயோகீமியா என்று மருத்துவ துறையில் அழைப்பார்கள்.

குடிப்பழக்கம்,சோர்வு, கண்கள் வறண்டு போவதால், மன அழுத்தம், அதிகமாய் காபி குடிப்பது, சரிவிகித சத்துக்களின் பற்றாக்குறை, அலர்ஜி, வெகு நேரம் கம்ப்யூட்டரை உற்று பார்ப்பது, படித்துக் கொண்டேயிருப்பது இது போன்று, கண்களுக்கு அதிகம் சிரமம் கொடுத்தால், சரியாக தூங்காமல் இருந்தால், மருந்துகளின் பக்க விளைவுகள் ஆகியவற்றினால் ஏற்படும். குடிப்பழக்கமும் முக்கிய காரணமாகும்.

தொடர்ச்சியாக கண்கள் துடித்துக் கொண்டேயிருந்தால், அவை நம் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும். ஆகவே என்ன பிரச்சனை என கண்டறிவது அவசியம். நீண்ட நாள் கண் துடிப்போ, வெட்டி இழுப்பது போலவோ இருந்தால், அது மூளை சம்பந்தப்பட்ட கோளாறாகவும் இருக்கலாம்.

வெறும் கண்கள் துடிப்பதோடு அல்லாமல், கண்கள் சிவந்து போனாலோ, கண்களில் எரிச்சல், அல்லது நீர் வடிதல், மற்றும் மேல் இமை தொங்கிக் கொண்டு வந்தாலோ, நிலைமை மோசமாக உள்ளது என அர்த்தம். உடனடியாக கவனிக்கப்பட வேண்டிய அவசியம்.

கண் துடித்தலுக்கு சிகிச்சை:

கண் துடிப்பிற்கு, நன்றாக தூங்கி, கண்களுக்கு போதிய ஓய்வு கொடுக்கும் போது அது தானாகவே போய்விடும் அல்லது கண்களுக்கு வெதுவெதுப்பான ஒத்தடம் தந்தாலும் நரம்புகளின் இறுக்கம் தளர்ந்து, துடிப்பது நிற்கும்.

ஆனால் இதுவே நீண்ட நாட்களுக்கு தொடர்ச்சியாக இருக்கும் போது பொடாக்ஸ் ஊசி செலுத்துவதன் மூலம் சரி செய்யலாம். அல்லது அறுவை சிகிச்சையில், பிரச்சனைக்குரிய சில நரம்புகளையும், தசைகளையும் வெடிவிடுவார்கள். இதனால் வெட்டி இழுக்கும் பிரச்சனைக்கும் மற்றும் கண் துடிப்பிற்கும் தீர்வு கிடைக்கும்.

ஊட்டச்சத்துகளின் ஊற்றாய் விளங்கும் ஸ்பெஷல் பால்கோவா!!

English summary

Eye twitching is good sign or bad sign?

Eye twitching is good sign or bad sign?
Desktop Bottom Promotion