இந்த பழக்கங்கள் தான் உங்களுக்கு மலச்சிக்கலை உண்டாக்குகிறது என்று தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாளில் மலச்சிக்கலால் பலமுறை கஷ்டப்பட்டிருப்போம். மலச்சிக்கல் ஏற்படுவதற்கு உணவுப் பழக்கவழக்கங்கள் தான் முக்கிய காரணம். பலரும் தங்களுக்கு எதற்கு மலச்சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று தெரியாமல் உள்ளனர்.

மலச்சிக்கலை ஆரம்பத்திலேயே கண்டு கொள்ளாமல் விட்டால், பின் அது முற்றி மூலம் எனும் பைல்ஸ் பிரச்சனையால் அவஸ்தைப்படக்கூடும். இங்கு ஒருவரது எந்த பழக்கவழக்கங்கள் மலச்சிக்கலை உண்டாக்குகிறது என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து, அவற்றைத் தவிர்த்து மலச்சிக்கலில் இருந்து விடுபடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
போதிய தண்ணீர் குடிக்காமை

போதிய தண்ணீர் குடிக்காமை

உடலில் போதிய அளவில் நீர்ச்சத்து இல்லாவிட்டால், அதனால் மலச்சிக்கலை சந்திக்க நேரிடும். எனவே ஒருவர் சரியான அளவு தண்ணீர் குடித்து வந்தால் மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கலாம். உடலில் நீர்ச்சத்தைப் பராமரிக்க தண்ணீர் மட்டுமின்றி, பழச்சாறுகள், இளநீர், சூப் போன்றவற்றையும் குடிக்கலாம்.

விரதம்

விரதம்

அடிக்கடி விரதம் இருந்து, அதன் காரணமாக உடலுக்கு சரியான அளவு தண்ணீர் மற்றும் உணவு கிடைக்காமல் இருந்தால், தீவிர மலச்சிக்கலால் அவஸ்தைப்படக்கூடும். எனவே எக்காரணம் கொண்டும் உணவைத் தவிர்ப்பதோ அல்லது அடிக்கடி விரதம் இருப்பதோ வேண்டாம்.

கார உணவுகள்

கார உணவுகள்

கார உணவுகள் வயிற்றைக் கலக்கி விடும் என்று பலர் நினைக்கலாம். ஆனால் அடிக்கடி மலச்சிக்கல் ஏற்படுபவர்கள் கார உணவுகளை உட்கொண்டால், நிலைமை மோசமாகும். மேலும் பிரசவம் முடிந்த பின், பெண்கள் குறைந்தது 40 நாட்களுக்கு கார உணவுகளை உட்கொள்ளக் கூடாது என்று கூறுவார்கள். ஏனெனில் அது மலச்சிக்கலை உண்டாக்கும் என்பதால் தான்.

சுத்திகரிக்கப்பட்ட உணவுகள்

சுத்திகரிக்கப்பட்ட உணவுகள்

சுத்திகரிக்கப்பட்ட மைதா உணவுகள் அல்லது வெள்ளை பிரட் போன்றவற்றில் நார்ச்சத்து மிகவும் குறைவான அளவில் தான் உள்ளது. ஆகவே எவர் ஒருவர் வெள்ளை பிரட்டை அதிகம் சாப்பிடுகிறாரோ, அவர் மலச்சிக்கலால் மிகுந்த அவஸ்தைப்படக்கூடும்.

காபி

காபி

உங்களுக்கு காபி அதிகம் பிடிக்குமானால், அதை அதிகம் குடிக்காதீர்கள். மாறாக க்ரீன் டீ குடியுங்கள். ஏனெனில் காபியில் உள்ள காப்ஃபைன், உடலை வறட்சி அடையச் செய்யும். ஆகவே காபியை அதிகம் பருக மலச்சிக்கல் ஏற்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

உங்களுக்கான சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எது, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

English summary

Everyday Diet Habits That Can Cause Constipation

Here are some common dietary mistakes which we should stop committing to prevent constipation.
Story first published: Friday, August 26, 2016, 17:27 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter