Latest Updates
-
Gandhi Jayanti 2026: மகாத்மா காந்தியை பற்றி நமக்கு தெரியுமா? ஆனால் அவர் படிப்பில் எப்படிப்பட்டவர் தெரியுமா? -
மீல் மேக்கர் பிரியாணியை இப்படி செய்யுங்க.. மட்டன் பிரியாணியே தோத்துடும்.. -
4 கத்திரிக்காய் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி மிளகு குழம்பு செய்யுங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
International Day of Older Persons: பெற்றோர், முதியோருக்கான சுகாதார பராமரிப்பில் புதிய அணுகுமுறை - ஏன் அவசியம் -
குரு-செவ்வாய் கூட்டணி.. அக்டோபர் 31 வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
Personality Test: அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும் நல்ல மற்றும் தீய குணங்கள் என்னென்ன தெரியுமா? -
நீரிழிவு நரம்பியல் பாதிப்பு என்றால் என்ன? அதன் ஆரம்ப கால அறிகுறிகள் என்ன? -
1 கைப்பிடி கொத்தமல்லியும், வேர்க்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
அக்டோபர் 01 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களின் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்காம் -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் துலாம் முதல் மீனம் வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு!
இவையெல்லாம் புற்றுநோயின் ஆரம்ப கால அறிகுறிகள் எனத் தெரியுமா?
இங்கு புற்றுநோயின் ஆரம்ப கால அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
என்ன தான் புற்றுநோயைக் குணப்படுத்த சிகிச்சைகள் இருந்தாலும், ஏராளமான மக்கள் இறக்கின்றனர். இதற்கு காரணம் இதன் அறிகுறிகளை ஆரம்பத்திலேயே சரியாக கவனிக்காமல் இருப்பது தான். புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளை கவனித்து ஆரம்பத்திலேயே சிகிச்சை மேற்கொண்டு வந்தால், அதனால் உயிரிழப்பதைத் தடுக்கலாம்.

ஆனால் பலருக்கும் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் தெரியாது. ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை புற்றுநோயின் ஆரம்ப கால அறிகுறிகளைக் கொடுத்துள்ளது. அதைப் படித்து தெரிந்து கொண்டு, உஷாராகிக் கொள்ளுங்கள்.

அறிகுறி #1
மூச்சு விடுவதில் சிரமத்தை உணர்கிறீர்களா? அப்படியெனில் அதை சாதாரணமாக விடாதீர்கள். ஏனெனில் நுரையீரல் புற்றுநோய் உள்ளவர்கள் மூச்சு விடுவதில் சிரமத்தை உணர்வார்களாம்.

அறிகுறி #2
பலவகையான புற்றுநோய்களான இரத்த புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் போன்றவற்றிற்கு நாள்பட்ட இருமல் மற்றும் நெஞ்சு வலி ஆரம்ப கால அறிகுறிகளாகும். அதிலும் நுரையீரல் புற்றுநோய் உள்ளவர்களுக்கு நெஞ்சு பகுதியில் வலி ஆரம்பித்து தோள்பட்டை வரை இருக்கும்.

அறிகுறி #3
இரத்த புற்றுநோய் இருந்தால், அடிக்கடி காய்ச்சல் வரக்கூடும். எனவே அடிக்கடி காரணமின்றி காய்ச்சல் வந்தால், உடனே மருத்துவரை அணுகி சோதித்துக் கொள்ளுங்கள்.

அறிகுறி #4
உணவு அல்லது நீர் விழுங்குவதில் சிரமத்தை உணர்ந்தால், தொண்டை அல்லது உணவுக்குழாயில் புற்றுநோய் இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

அறிகுறி #5
நிணநீர் மண்டலத்தில் அடிக்கடி வீக்கங்கள் ஏற்பட்டால், அது புற்றுநோய்க்கான அறிகுறியாகவும் இருக்கலாம்.

அறிகுறி #6
அளவுக்கு அதிகமான சோர்வு மற்றும் பலவீனம், பல வகையான புற்றுநோய்க்கு அறிகுறிகளாகும். அதுவும் எந்த ஒரு காரணமும் இல்லாமல், அளவுக்கு அதிகமாக தூக்க உணர்வைப் பெற்றாமல் உடனே மருத்துவரை சந்தியுங்கள்.

அறிகுறி #7
பெண்கள் வயிற்று உப்புசத்துடன், அடிவயிற்றில் தொப்பை வர ஆரம்பித்தால், உடனே மருத்துவரை அணுகி கருப்பை புற்றுநோய் உள்ளதா என்று சோதித்துக் கொள்ளுங்கள்.

அறிகுறி #8
எதுவும் சாப்பிடாமல் வயிறு நிறைந்திருப்பதை உணர்ந்தால், அதை சாதாரணமாக விடாதீர்கள். ஏனெனில் அது கருப்பை புற்றுநோய்க்கான அறிகுறியாகும்.

அறிகுறி #9
இடுப்பு அல்லது அடிவயிற்றுப் பகுதியில் வலி ஏற்பட்டு, வயிற்று உப்புசத்தை உணர்ந்தால், அதையும் சாதாணமாக நினைக்காதீர்கள். அதிலும் பல நாட்களால் இம்மாதிரியான உணர்வு இருந்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.

அறிகுறி #10
மலம் கழிக்கும் போது, அதில் இரத்தம் கலந்திருந்தால், அது மலக்குடல் புற்றுநோயாக இருக்க வாய்ப்புள்ளது. எனவே கவனமாக இருங்கள்.

அறிகுறி #11
காரணமின்றி உடல் எடை குறைகிறதா? அப்படியெனில் அது குடல் மற்றும் செரிமான மண்டல புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்க வாய்ப்புள்ளது.

அறிகுறி #12
வயிற்று பிடிப்புகள் அல்லது அடிக்கடி வயிறு அசௌகரியமாக இருந்தால், அது குடல் புற்றுநோய் இருப்பதற்கு வாய்ப்புள்ளதைக் குறிக்கிறது.



Click it and Unblock the Notifications
