For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நுரையீரல் நோய் தொற்று உண்டாவதன் காரணங்கள் மற்றும் அதன் வீரியம் என்ன?

|

நாம் சில சமயங்களில் சாதாரண நெஞ்சு வலி, சளி, கபம், இருமல் காய்ச்சல் என நினைப்பவை எல்லாம் நீண்ட நாளாக உங்கள் நுரையீரலில் உண்டாகியிருக்கும் நோய் தொற்று அல்லது அடைப்பின் அபாய காரணியாக கூட இருக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?

மூச்சு விடவதே சிரமமாக இருக்கும். இழுத்து மூச்சு விடும் போது நெஞ்சில் ஏதோ குத்துவது போன்ற வலி உணர்வு உண்டாகும். சளி, கபம் சாதாரணமாக இல்லாமல், மிக அடர்த்தியாக நிறம் மாறி வெளிப்படும். இவற்றை நீங்கள் சாதாரணமாக எண்ண வேண்டாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காய்ச்சல்!

காய்ச்சல்!

நுரையீரல் தொற்றின் முதன்மை அறிகுறியே காய்ச்சல் தான். இயல்பாக ஒவ்வொரு நபரின் உடல் தட்பவெப்ப நிலையம் சிறிதளவு மாறுபடும். இதன் சராசரி அளவு 98.6 டிகிரி ஆகும். இதை விட உடல் சூடு அதிகரிக்கும் போது நாம் காய்ச்சல் என அறிகிறோம்.

மூச்சு திணறல்!

மூச்சு திணறல்!

மூச்சு விட சிரமமாக இருப்பது அல்லது மூச்சு திணறல் ஏற்படுவது. நாள்பட்ட நுரையீரல் நோய் தொற்று / நுரையீரல் அடைப்பு உண்டாகியுள்ளது என்பதை ஊர்ஜிதம் செய்யும் அறிகுறி தான் இந்த மூச்சு திணறல். அடிக்கடி மூச்சு திணறல் உண்டாவது நுரையீரல் தொற்று மோசமாகி வருகிறது என்பதை வெளிப்படுத்தும் நிலையாகும். இந்நிலையில் மருத்துவரை அணுக வேண்டியது மிகவும் அவசியம்.

இருமல்!

இருமல்!

தொடர்ந்து இருமல் இருந்துக் கொண்டே இருப்பது மற்றுமொரு நுரையீரல் தொற்றின் அறிகுறியாக கருதப்படுகிறது. இந்த தொடர் இருமல் சளி மற்றும் காய்ச்சல் ஏற்படுத்தும் அபாயமும் இருக்கிறது.

சளியில் மாற்றம்!

சளியில் மாற்றம்!

நாள்பட்ட நுரையீரல் நோய் தொற்று அல்லது நுரையீரல் அடைப்பு ஏற்பட்டவர்கள் சளி அதிகமாவது மட்டுமின்றி, அந்த நேரத்தில் சளி மிக அடர்த்தியாக உருவாகிறது என்றும் கூறியுள்ளனர். மேலும், நுரையீரல் நோய் தொற்று / அடைப்பு உண்டான சமயத்தில் வெறும் சளி வேறு நிறத்திலும், மிகுந்த நாற்றத்துடன் வெளிப்படும்.

நெஞ்சு வலி!

நெஞ்சு வலி!

இந்த நெஞ்சு வலி உண்மையில் இதய பாதிப்பை சுட்டிக்காட்டுவது அல்ல. இது நுரையீரலின் தொற்று அபாயத்தை வெளிப்படுத்துவது ஆகும். இந்த வலி வேறுவிதமாக இருக்கும்.கூர்மையான வலி, ஏதோ குத்துவது போல இருக்கும். இழுத்து முழுவதுமாக மூச்சு விடும் போது இந்த வலியின் தாக்கம் மிக வீரியமாக இருக்கும். இருமல் வரும் போதும் இது அதே வலியை வெளிப்படுத்தும்.

இறுக்கம் / அழுத்தம்!

இறுக்கம் / அழுத்தம்!

இந்த நெஞ்சு வலி வரும் போது மார்பில் ஏதோ இருக்கும் அல்லது அதிக அழுத்தம் தருவது போன்ற உணர்வு வெளிப்படும். இது போன்ற வலி உண்டாவது அசாதாரணமானது. இதுபோன்று வலி உண்டானால் உடனே மருத்துவரை அணுக மறக்க வேண்டாம்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Causes and Effects of Lung Infection in COPD

What are the Causes and Effects of Lung Infection in COPD? read here in tamil,
Desktop Bottom Promotion