சுடுநீரில் இஞ்சு கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா?

Written By: Hemalatha
Subscribe to Boldsky

இஞ்சியின் மருத்துவ குணங்களை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அழகிலிருந்து ஆரோக்கியம் வரைக்கும் இஞ்சி அற்புத பல்களைத் தரும். இஞ்சி ஜூஸுடன் உங்கள் காலை நேரத்தை தொடங்கியிருக்கிறீர்களா? இல்லையென்றால் இதை படித்துப்பாருங்கள்.

இந்த இஞ்சி ஜூஸ் உங்கள் வயிற்றிலுள்ள நச்சுக்களை வெளியேற்றி அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கவைக்கும்.

Benefits of ginger drink

இஞ்சி ஜூஸ் செய்யும் முறை :

இஞ்சியின் தோலை உரித்துவிட்டு , துண்டாக வெட்டிக் கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் ஒன்றரைக் கப் அளவுள்ள நீரை கொதிக்க வையுங்கள்.

நீர் கொதித்ததும் இஞ்சித் துண்டுகளை அதில் போட்டு மேலும் 20 நிமிடங்கள் கொதிக்கவிடுங்கள்.பின் ஆற வைத்து வடிகட்டி அதனுடன் சிறிது தேன் மற்றும் சில துளி எலுமிச்சை சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் பருகுங்கள்.

Benefits of ginger drink

இப்போது இந்த இஞ்சி ஜூஸின் மகத்துவத்தை பார்க்கலாம்.

உங்களுக்கு உடல் நிலை சரியில்லாம இருந்தால், சோர்வாக இருப்பீர்கள். அந்த சமயங்களில் இது மிகவும் நல்லது.

உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும். நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கச் செய்யும். மிகவும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.

தொற்று நோய்கள் கிட்ட நெருங்காது.ரத்தத்தை சுத்தப்படுத்தும்.ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும். குளிர் ஜுரம் அல்லது குளிரானால் நடுங்கும்போது இந்த ஜூஸை குடித்தால் உடலுக்கு தேவையான சூட்டை அளித்து நடுக்கத்தை கட்டுபடுத்தும்.

Benefits of ginger drink

மன அழுத்தம், நடுக்கம்,நரம்புத் தளர்ச்சி ஆகியவைகளுக்கு இந்த இஞ்சி ஜூஸ் நல்ல தீர்வை அளிக்கிறது. நரம்பு மண்டலத்தை நலமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

ஜீரண மண்டலத்தை நன்றாக செயல்பட வைக்கிறது. வயிற்றில் தங்கும் நச்சுக்களை உடனடியாக வெளியேற்றும். வாய்வு, அஜீரணம் மற்றும் அசிடிட்டியாகியவைகளை குணப்படுத்தும்.

Benefits of ginger drink

இது வயிற்றில் உருவாகும் அமிலத்தை சமன் செய்து, வயிற்றை கூலாக வைத்திருக்க உதவுகிறது. தினமும் உடலில் உருவாகிக் கொண்டிருக்கும் ஃப்ரீ ரேடிகல்ஸை அழித்து, புற்று நோய் வராமல் காக்கும்.

உடலில் இருக்கும் அன்றாட கழிவுகளையும் நச்சுக்களையும் வெளியேற்றி நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க உதவும் இந்த அற்புத ஜூஸ். நோயற்ற வாழ்வே மிக முக்கியமான செல்வம். உடலுக்கு எந்த உணவு நன்மை தருகிறதோ அவற்றை உண்டு, ஆரோகியமாய் வாழலாம்.

English summary

Benefits of ginger drink

Benefits of ginger drink
Please Wait while comments are loading...
Subscribe Newsletter