மூக்கு மேல் விரல் வைக்க வைத்த அம்பானி மகன் ஆனந்த-ன் மாற்றம்? எப்படி?

Posted By:
Subscribe to Boldsky

உடல் எடை கட்டுக்கோப்பாக பேணிக்காப்பது என்பதும் ஓர் நுட்பமான கலையை போல தான். உடல் எடையை அதிகரிக்க ஒரு மாதம் போதுமானது. ஆனால், அதிகரித்த உடல் எடையை குறைக்க கண்டிப்பாக அதைவிட பல மடங்கு காலம் எடுத்துக் கொள்ளும்.

உடல் எடையை குறைப்பதற்கு எனவே பல சிறப்பு சிகிச்சைகள் (பக்க விளைவுகளுடன்), டயட்டுகள், ஜூஸ்கள், பயிற்சிகள் என பெரும் பட்டியலே இருக்கிறது. ஆனால், இதை எல்லாம் தாண்டி மனதில் ஒரு வெறியும், ஊக்கமும் இருக்க வேண்டும்.

அந்த வகையில் உடல் எடை குறைக்க விரும்புவோர்களுக்கு புதிய ஊக்கமாக உருமாறியிருக்கிறார் ஜூனியர் அம்பானி.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆனந்த் அம்பானி

ஆனந்த் அம்பானி

முகேஷ் அம்பானியின் மகன் தான் இந்த ஆனந்த் அம்பானி. கண்டிப்பாக பெரும்பாலானோர் இவரை மும்பை இந்தியன்ஸ் அணியின் ஐ.பி.எல் போட்டிகளில் பார்த்திருப்பார்கள். அம்பானியின் மகன் என்பதை காட்டிலும் இவரது உடல் எடை தான் காண்போரின் மனதில் முதலில் தோன்றும்.

மகா எடை

மகா எடை

சமூக ஊடகங்களில் இவரை கேலி கிண்டல்களுக்கு உள்ளாக்கியுள்ளனர். ஆனால், திடீரென ஒருசில நாட்களுக்கு முன்னர் வெளியான இவரது புகைப்படம் பார்த்தவர் அனைவரையும் மூக்கின் மேல் விரலை வைக்க செய்தது.

அமெரிக்க பயிற்சியாளர்

அமெரிக்க பயிற்சியாளர்

ஆனந்த் அம்பானியின் இந்த அசுரத்தனமான உடல் எடை குறிப்பிற்கு காரணம் ஒரு அமெரிக்க உடற்திறன் பயிற்சியாளர் என்று கூறப்படுகிறது. ஒன்றல்ல, இரண்டல்ல ஏறத்தாழ 70 கிலோ எடையை குறைத்துள்ளார் ஆனந்த் அம்பானி.

குஜராத் சோம்நாத் கோவில்

குஜராத் சோம்நாத் கோவில்

மார்ச் 19 தேதி குஜராத் சோம்நாத் கோவிலுக்கு சென்ற போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஊக்கம்

ஊக்கம்

உடல் பருமன் என்பது இந்தியா மட்டுமின்றி உலக மக்கள் இடையே அதிகரித்து வரும் உடல்நலக் கோளாறாக பரவி வருகிறது. பலவகையான டயட், பயிற்சிகள் என உடல் எடை குறைக்க நிறைய வழிகள் இருக்கின்றன. ஆனால், ஊக்கம் என்பது சிலரிடம் இருந்து தான் பெற முடியும்.

ஊக்கம்

ஊக்கம்

அந்த வகையில் தனது உடல் எடையை பாதியாக குறைத்து, மற்றவர்களுக்கு ஓர் உதாரணமாக திகழ்கிறார் ஆனந்த் என ட்விட்டரில் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

ட்விட்டர் கருத்துகள்

வினீஷ் என்பவர், இது ஊக்கமளிக்கும் வகையில் இருக்கிறது என, தனது வாழ்த்துக்களை ஆனந்த்-க்கு தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் கருத்துகள்

ஜி.பி என்பவர், பாதி உடல் எடை குறைத்துள்ளார் ஆனந்த். வாழ்த்துக்கள். என தெரிவித்துள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Amazing Transformation Of Junior Ambani Anant

This Junior Ambani Losing A Whopping 70 Kgs Will Give You Some Serious Weight Loss Goals.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter