Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
உங்கள் கனவுகளுக்கு வயது ஒரு தடையல்ல, ஆனால், எலும்பின் வலிமை அவசியம்!
ஓர் பெண்ணாக நான் எப்போதும் பெருமையாக கூறுவேன், என் இல்லறம் மற்றும் அலுவலக வேலைகளை சரிசமமாக பிரித்து என்னால் கையாள முடிகிறது என. நான் ஒரு ஆன்லைன் பத்திரிகையில் கடந்த 9 வருடமாக எடிட்டராக பணியாற்றி வருகிறேன். அதே சமயத்தில் ஓர் அன்பான மனைவியாகவும், அக்கறையான தாயாகவும் நான் செயலாற்றி வருகிறேன். என் இரு உலகங்களும் சிறந்தே விளங்குகின்றன.
சில காலமாக நான் ஒரு ஆய்வு நடத்தி வந்தேன், ஃபிட்டாக, ஆரோக்கியத்துடன் இருப்பது எப்படி என. நான் சமீபத்தில் தான் முப்பது வயதினுள் நுழைந்தேன். பல பணிகளை கருத்தில் கொண்டு, பிறகு நடன வகுப்பில் சேரலாம் என ஒரு முடிவெடுத்தேன். நடனம் ஆரோக்கியமாக இருக்க ஊக்கமளிக்கும் ஓர் சிறந்த உடற்பயிற்சி ஆகும்.

இந்த முடிவில் மிகவும் சுவாரஸ்யமானது என்னவெனில், இந்த நடன வகுப்புகளை நான் எனது பத்து வயது மகளுடன் சேர்ந்து பங்கெடுத்துக் கொள்கிறேன். நான் எடுக்கும் முடிவுகளுக்கு என் கணவர் அவரது முழு ஒத்துழைப்பை அளிக்கிறார். என் இல்லறத்தின் முதுகெலும்பான நான் வலிமையுடனும், ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.
என் அம்மா தான் அடிக்கடி கூறுவார், ஒரு பெண்ணுக்கு உடல்வலிமை மிகவும் அவசியம் என. என் உடல் வலிமையாக இருக்க கூடுதலாக நான் சிலவற்றை செய்ய வேண்டியிருக்கிறது. இது குறித்து என் மருத்துவரிடம் விவாதித்தேன். முப்பது வயதுக்கு மேல் ஒவ்வொரு பெண்ணும் அவரது எலும்பின் வலிமையின் மேல் அதிக கவனம் செலுத்த வேண்டும் என அவர் கூறினார்.
வயதாக, வயதாக எலும்பின் வலிமை குறைவது இயல்பு தான். ஆனால், என் எலும்புகளின் வலிமையை விட்டுக் கொடுக்க நான் தயாராக இல்லை. என் எலும்பின் வலிமை தான் என் எதிர்காலத்தை காக்கும் தூண்கள் என நான் மட்டுமில்லை, ஒவ்வொரு பெண்ணும் கருத்தில் கொள்ள வேண்டும். நமது வேலைகளை, குடும்பத்தை சார்ந்த கடமைகளை சிறப்பாக செய்ய எலும்பின் வலிமை மீது அதிக கவனம் செலுத்த வேண்டும்.
இதற்காக தான் நான் இப்போது நடனத்தில் நாட்டம் செலுத்தி ஆரோக்கியத்தை மேம்படுத்த முனைந்துள்ளேன். இதற்கு ஏற்ற உணவுமுறையையும் நான் பின்பற்றி வருகிறேன்.
இப்போது, என் குடும்பம் மற்றும் முக்கியமாக என் தாய் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். வாழ்வியல் முறை, உடற்பயிற்சி போன்றவை ஆரோக்கியத்தை அனைத்து வகையிலும் மேம்படுத்தி. நான் இப்போது என்னையே மிகவும் நெகிழ்வான, வளைந்துக் கொடுத்து வேலை செய்ய முடியும் நம்பிக்கையுடன் திகழ்கிறேன்.
எனவே, நீங்கள் முடிவு செய்துவிட்டீர்களா? இது தான் சரியான நேரம். நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் கனவிற்கு வயது ஒரு தடையல்ல. ஆனால், எலும்பின் வலிமை மிகவும் அவசியம்!
ஆதலால், இதுக் குறித்து எங்களுடன் பேச விருப்பமாக இருந்தால் #STRONGTOTHEBONE என்ற ஹெஸ்டேக்கில் முகநூல் மற்றும் ட்விட்டரில் இணைந்திருங்கள்! உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள்!
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
