புகைப்பிடிக்காமல் இருந்தாலும் நுரையீரல் புற்று நோய் வருமா? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!!

Written By:
Subscribe to Boldsky

நெஞ்சு வலிதான் நுரையீரல் புற்று நோயின் அறிகுறி என்பது எல்லாருக்கும் தெரிந்த அறிகுறிதான். ஆனால் அதைத் தவிர்த்து பல அறிகுறிகள் வெளிப்படும்.

அவற்றை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் முழுமையாக குணப்படுத்த முடியும். . ஆகவே எதையும் நேர்மறையாகவும், தைரியமாகவும் எதிர் நோக்கினால் நோய் நம்மை விட்டு விலகும்.

8 Symptoms of Lung cancer you should know

நுரையீரல் புற்று நோய்ப் பற்றி உங்களுக்கு தெரியா சில விஷயங்கள் இங்கே..தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புகைப்பிடிக்காதவர்களுக்கு வருமா?

புகைப்பிடிக்காதவர்களுக்கு வருமா?

ஆமாம். வீடுகளில் உருவாகும் வாசமில்லா ரேடான் என்ற வாயுவினால் நுரையீரல் புற்று நோய் வர வாய்ப்பு இருக்கிறது. சுற்றுபுறத்தில் இருக்கும் மாசுபட்ட காற்றை தொடர்ந்து வெகு வருடங்கள் சுவாசிப்பதாலும் புற்று நோய் உருவாகும் வாய்ப்புகள் இருக்கின்றன.

தொடர்ந்து இருமல் :

தொடர்ந்து இருமல் :

தொடர்ந்து இருமல் மாதக்கணக்கில் இருந்தால், அவ்வப்போது ரத்தம் கலந்து சளி வெளிப்பட்டால் அல்லது பழுப்பு நிறத்தில் சளி உண்டானாலும் அது நுரையீரல் புற்று நோயின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம்.

நாள்பட்ட நுரையீரல் தொற்று :

நாள்பட்ட நுரையீரல் தொற்று :

மாதக்கணக்கில் நுரையீரல் பாதிப்பு இருந்தால், எப்போதும் கபத்தினால் சிரமப்பட்டால் அதுவும் ஒரு அறிகுறிதான். அடிக்கடி நுரையீரல் தொற்று உண்டாகி தொடர்ந்து இருமல் மற்றும் கபம் இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் பரிசோதித்துக் கொள்வது நல்லது.

உடல் எடை குறைதல் :

உடல் எடை குறைதல் :

காரணமில்லாமல் உடல் எடை குறைந்தால் உடனடியாக பரிசோதித்துக் கொள்வது நல்லது. உடற்பயிற்சி, டயட் இல்லாமல் இருந்தும் உடல் எடை குறைவதும் இதன் அறிகுறிகளில் ஒன்றாகும்.

எலும்பு வீக்கம் மற்றும் வலி :

எலும்பு வீக்கம் மற்றும் வலி :

நுரையீரல் புற்று நோய் பரவி மற்ற உறுப்புகளுக்கும் அடையும்போது, எலும்புகள், மூட்டுகளில் தாங்க முடியாத வலி உண்டாகும்.

முகம் மற்றும் கழுத்தில் வீக்கம் :

முகம் மற்றும் கழுத்தில் வீக்கம் :

நுரையீரல் புற்று நோய் ஆரம்பித்த நிலையில் கழுத்து மற்றும் முகத்தில் வீக்கம் உண்டாகும். மேலும் தோள்பட்டைகளும், மார்பிலும் வலி உண்டாகும்.

மிக அதிகமான சோர்வு :

மிக அதிகமான சோர்வு :

படுக்கையிலிருந்தே எழ முடியாத அளவிற்கு சோர்வு தலைதூக்கும். பெரும்பாலான நுரையீரல் புற்று நோய்களுக்கு மிக அதிகமான சோர்வு காணப்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இடுப்பு தசைகள் பலவீனம் :

இடுப்பு தசைகள் பலவீனம் :

நுரையீரல் புற்று நோயின் அறிகுறிகளில் ஒன்று இடுப்பு தசைகள் பலவீனமாவதும். நாற்காலியிலிருந்து எழுந்திருக்க முடியாத அளவிற்கு தசைகள் பலவீனப்படும்.

 அதிக கால்சியம் :

அதிக கால்சியம் :

அதிக கால்சியம் ரத்தத்தில் கலக்கும். அதோடு, சிறுநீரகம் வழியாகவும் அதிக கால்சியம் வெளியேறும். இதனை மருத்துவ பரிசோதனையில் தெரிந்து கொள்ள முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

8 Symptoms of Lung cancer you should know

8 Symptoms of Lung cancer you should know
Story first published: Tuesday, December 20, 2016, 9:00 [IST]