இந்த 4 மாத்திரைகளும் உங்களை சோர்வடையச் செய்யும் என்பது தெரியுமா?

Written By:
Subscribe to Boldsky

தொட்டதெற்கெல்லாம் மாத்திரை சாப்பிடுபவர்களும் உண்டு. மாத்திரைகள் மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

மருத்துவர் பரிந்துரைத்தாலும் சில வகை மாத்திரைகள் சாப்பிட்டதும் உங்களால் வேலை செய்ய முடியாமல் சோர்வாக இருப்பது போல் தெரிகிறதா?

4 Medications induces tiredness to you

தூக்கம் வருவது போல பெரும்பாலான ஆன்டிபயாடிக் இருக்கும். அது போலவே சில மாத்திரைகள் உங்களை களைப்படையச் செய்யும். எவையென பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மன அழுத்த மாத்திரைகள் :

மன அழுத்த மாத்திரைகள் :

மன அழுத்தத்திற்காக மாத்திரைகள் எடுப்பவர்கள் உண்டு. அதிலும் ஆண்களைக் காட்டிலும் இரு மடங்கு பெண்கள் மன அழுத்தத்திற்காக் மாத்திரைகளை எடுத்துக் கொள்கிறார்கள் என கூறுகிறார்கள்.

செரடோனின் ஹார்மோன்தான் புத்துணர்விற்கும் நல்ல மன நிலைக்கும் காரணம். .இந்த மாத்திரைகள் செரடோனின் ஹார்மோனை ஒழுங்குபடுத்துகிறது.

அதே சமயம் மெலடோனின் சுரப்பையும் அதிகபபப்டுத்துகிறது. இதனால் மயக்க நிலை அளவுக்கு அதிகமாக ஏற்பட்டு உடலை சோர்வடையச் செய்கிறது.

அலர்ஜி மாத்திரைகள் :

அலர்ஜி மாத்திரைகள் :

நுரையீரல் தொற்று, மற்றும் ஆஸ்துமா போன்ற அலர்ஜிக்கு மாத்திரைகள் சாப்பிடும்போது, அவை மூளையில் நரம்பு மண்டல்த்தை கட்டுப்படுத்துகிறது. இதனால் மயக்க நிலை, தூக்கம் உண்டாகி உடலை சோர்வடையச் செய்கிறது.

ரத்த அழுத்த மாத்திரைகள் :

ரத்த அழுத்த மாத்திரைகள் :

உயர் ரத்த அழுத்தத்திற்காக எடுத்துக் கொள்ளும் மாத்திரைகள் அட்ரினலின் சுரப்பை குறைக்கிறது. அட்ரினலின் இதய துடிப்பை வேகப்படுத்தும். ரத்த ஓட்டத்தை துரிதப்படுத்துபவை. உயர் ரத்த அழுத்த மாத்திரைகள் இந்த ஹார்மோனை குறைப்பதால் சோர்வு உண்டாகிறது.

நரம்பு மற்றும் மனத் தளர்ச்சிக்கான மாத்திரைகள் :

நரம்பு மற்றும் மனத் தளர்ச்சிக்கான மாத்திரைகள் :

மனப்பதட்டம் மற்றும் தளர்ச்சிக்காக எடுத்துக் கொள்ளும் மாத்திரைகள் நரம்பு மண்டலத்தை கட்டொப்படுத்துகிறது, இதனால் பொதுவாக உடல் நிலை பலவீனமாகி உடல் சோர்வை உண்டாக்குகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

4 Medications induces tiredness to you

4 Common medications that are making you tired
Story first published: Wednesday, November 2, 2016, 12:40 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter