உங்கள் முகம், உடல்நலனை பற்றி என்ன கூறுகிறது என உங்களுக்கு தெரியுமா???

Posted By:
Subscribe to Boldsky

முகத்தை பார்த்தே ஜோசியம் சொல்வது பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள், இது நம்ம ஊரில் மட்டும் தான் இருக்கிறது என நினைக்க வேண்டாம். வெளில்நாடுகளில் இது குறித்தே படிப்பே இருக்கிறதாம். உங்கள் முகத்தை வைத்து ஜோசியம் கூறும் போது, உடல்நலனை கூற முடியாது என நினைக்கிறீர்களா??

உங்க ஆரோக்கியத்தைப் பத்தி உங்க நாக்கு என்ன வாக்கு சொல்லுதுன்னு தெரியுமா!!!

நமது உடல் ஓர் பிரம்மிப்பூட்டும் வடிவமாகும். நமது உடல் பாகங்களில் ஏற்படும் பாதிப்பின் அறிகுறிகளை, முகம், கண், கைகள், கால்கள் என பல வெளி பாகங்களில் தோன்றும் அறிகுறிகளை வைத்து நாம் ஓரளவு கண்டறியலாம். மஞ்சள் காமாலை என்றால் கண் மஞ்சளாக இருக்கும் என்பார்களே, ஏறத்தாழ அதைப்போல தான்....

உங்கள் உடல்நலத்தைப் பற்றி உங்க "கை" என்ன சொல்கிறது என்று தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெளிறிய சருமம்

வெளிறிய சருமம்

உங்கள் முகத்தின் சருமம் வெளிறிய நிறத்தில் தோற்றமளித்தால், உங்கள் உடலில் இரும்புச்சத்து குறைபாடு இருக்கிறது என அர்த்தம்.

நரம்புகள் புடைத்து இருந்தால்

நரம்புகள் புடைத்து இருந்தால்

உங்கள் முகத்தில் அளவிற்கு அதிகமாக நரம்புகள் புடைத்தது போல தோற்றமளித்தால், நீங்கள் அளவுக்கு அதிகமாக மது அருந்தி வருகிறீர்கள் என்று பொருள்.

தாடை பகுதியில் பருக்கள்

தாடை பகுதியில் பருக்கள்

பெண்களுக்கு தாடை பகுதியில் முகப்பரு வருவது பல்பையுரு கருப்பை நோய்க்குறியின் அறிகுறி என கூறுகிறார்கள்.

கழுத்து பகுதியில் கருவளையம்

கழுத்து பகுதியில் கருவளையம்

கழுத்தை சுற்றி கருப்படித்தது போல இருத்தல், டைப் 2 நீரிழிவு நோயின் அறிகுறி என கூறுகிறார்கள். சரியாக கழுத்து பகுதியில் தேய்த்து குளிக்காமல் இருந்தாலும் கூட,அழுக்கு அதிகம் சேருவதால் இவ்வாறு ஆகாலாம் என மறந்துவிட வேண்டாம்.

வாயின் மூலையில் வெடிப்பு

வாயின் மூலையில் வெடிப்பு

உங்கள் வாயின் மூலையில் வெடிப்புகள் ஏற்படுவது, உங்கள் உடலில் வைட்டமின் பி சத்தின் குறைபாடு உள்ளது என்பதன் அறிகுறி ஆகும்.

கண்களுக்கு கீழே அதிகமான சுருக்கங்கள்

கண்களுக்கு கீழே அதிகமான சுருக்கங்கள்

வயதிற்கு பொருந்தாமல், அளவிற்கு அதகிமாக கண்களுக்கு கீழ் சுருக்கங்கள் ஏற்படுவது, நீங்கள் அதிகமாக புகைப்பிடிக்கிறீர்கள் என்பதற்கான அறிகுறி.

மஞ்சள் திட்டுகள்

மஞ்சள் திட்டுகள்

முகத்தில் மஞ்சள் திட்டுகள் போன்று தோன்றுவது, உடலில் அதிக கொழுப்பு சேர்ந்துள்ளது என்பதற்கான பொருள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

What Your Face Says About Your Health

Do you know what your face says about your health? read here.
Story first published: Thursday, August 6, 2015, 11:43 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter