பொய் சொன்னா மூக்கு புடைக்குமாம்... எதனால தெரியுமா???

Posted By:
Subscribe to Boldsky

ஒருவர் பொய் பேசுகிறாரா என்பதை அவரது முக பாவனை, உடல்மொழி, மற்றும் கண் அசைவுகளை வைத்து நாம் கண்டறிந்துவிடலாம். ஆனால், ஒருவரது மூக்கை வைத்தும் கூட ஒருவர் பொய் பேசுகிறாரா? அல்லது உண்மை தான் கூறுகிறாரா என்று கண்டுபிடிக்கலாம் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஓர் பல்கலைகழகத்தின் உளவியல் துறையினர் தான் இந்த ஆய்வை மேற்கொண்டனர். பொய் பேசும் போது நமது உடலில் ஏற்படும் வெப்பநிலை மாற்றங்கள் மற்றும் மூளையின் அடிப்படைக் கூறாக கூறப்படும் இன்சுலாவின் செயல்பாட்டில் ஏற்படும் மாற்றங்களின் வெளிப்பாடாக தான் மூக்கு புடைக்கிறது என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஸ்பெயின் பல்கலைகழகம்

ஸ்பெயின் பல்கலைகழகம்

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த கிரானாடா பல்கலைகழக உளவியல் ஆய்வாளர்கள் நடத்திய ஓர் ஆய்வில் தான் மனிதன் பொய் சொல்லும் போது உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன என கண்டறிந்தனர்.

மூக்கு புடைக்கும்

மூக்கு புடைக்கும்

இந்த ஆய்வின் போது தான் ஒரு நபர் பொய் பேசும் போது மூக்கு வழக்கத்திற்கு மாறாக அதிகமாக புடைக்கிறது மற்றும் கண்ணில் இருக்கும் தசைகள் எழுச்சி அடைகின்றன என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மாற்றத்திற்கு பின்னாக்கி எஃபெக்ட் என்ற பெயர் என்று ஆய்வாளர்கள் கூறி இருக்கிறார்கள்.

உடல் வெப்பநிலை மாற்றம்

உடல் வெப்பநிலை மாற்றம்

உணர்வுகளால் உடலின் வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்களை கண்டறியும் முறைக்கு தெர்மோகிராபி என்று கூறப்படுகிறது. பொதுவாக தெர்மோகிராபி ஆய்வின் போது சிறப்பு கேமராக்கள் பயன்படுத்தப்பட்டு அகச்சிவப்பு கதிர்கள் எனப்படும் இன்ஃபிராரெட் செலுத்தி சோதிக்கப்படும்.

உடலியல் நோய் கண்டறிய

உடலியல் நோய் கண்டறிய

இந்த முறையை பயன்படுத்தி உடலில் நோய் சார்ந்த ஆய்வுகள் தான் நடத்தப்படும். முதன் முறையாக உளவியல் சார்ந்த ஓர் ஆய்வுக்கு இந்த முறை பயன்படுத்தப்பட்டது. அப்போது தான் பொய் சொல்லும் போது ஏற்படும் உடலியல் மாற்றங்கள் படங்களாக பதிவு செய்யப்பட்டு ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

ஆய்வாளர் கூறுகையில்

ஆய்வாளர் கூறுகையில்

இந்த ஆய்வை நடத்திய ஆய்வாளார் எபினியா, " ஒரு நபர் உண்மையை மறைத்து பொய் சொல்லும் போது அவரது மூக்கு பகுதியை சுற்றி வெப்பம் அதிகரிக்கிறது. இது அதிகரிக்கும் போது மூளையின் அடிப்படைக்கூறான 'இன்சுலா' அதிக துடிப்புடன் செயல்படுகிறது" என்று கூறியிருக்கிறார்.

இன்சுலா

இன்சுலா

இன்சுலா என்பது உண்மை உணர்வுகளின் போது செயல்படக் கூடிய மொளக் கூறுகள் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இன்சுலா உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தி, சீராகும் செயலில் ஈடுபடுகிறது.

பொய் கூறும் போது

பொய் கூறும் போது

இதற்கு மாறாக உண்மையை மறைத்து ஒருவர் பொய் கூறும் போதும், எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும் போது இயல்பு நிலை மாறி இன்சுலா தாறுமாறாக செயல்பட ஆரம்பிக்கிறது. இதனால் அந்நேரத்தில் மூக்கு சற்று புடைப்பாக காணப்படுகிறது என்றும் இந்த ஆய்வின் மூலம் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Weird Changes Happens In Nose When You Lie

Do you know about the Weird Changes Happens In Nose When You Lie? read here in tamil.
Story first published: Friday, November 13, 2015, 7:49 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter