Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
தினமும் தேங்காய் எண்ணெய் கொண்டு வாயைக் கொப்பளிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!
வாயில் உள்ள நுண்ணுயிரிகள் மற்றும் டாக்ஸின்களை வெளியேற்ற மேற்கொள்ளும் ஒர் முறை தான் ஆயில் புல்லிங். இது பழங்காலம் முதலாக வாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பின்பற்றி வரும் ஓர் செயல்முறை.
ஆனால் இக்காலத்தில் இதை பலர் மறந்து, பல் மருத்துவமனைக்கு அடிக்கடி சென்று நம் பணத்தை அவர்களுக்கு வாரி வழங்குகிறோம். ஒன்று தெரியுமா ஆயில் புல்லிங் செய்வதால், வாயின் ஆரோக்கியம் மட்டுமின்றி, உடல் ஆரோக்கியம் மேம்படும்.
அதிலும் அந்த ஆயில் புல்லிங் செயல்முறையை தேங்காய் எண்ணெய் கொண்டு செய்து வந்தால், இன்னும் சிறப்பான பலன்களைப் பெறலாம். சரி, இப்போது தேங்காய் எண்ணெயைக் கொண்டு ஆயில் புல்லிங் செய்தால் பெறும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

வாய் துர்நாற்றம்
தேங்காய் எண்ணெய் கொண்டு ஆயில் புல்லிங் செய்வதால், வாயில் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு, வாய் துர்நாற்றம் வீசுவது நீங்கும்.

ஈறு பிரச்சனைகள்
உங்களுக்கு ஈறுகளில் இரத்தக்கசிவு அல்லது வேறு ஏதேனும் ஈறு பிரச்சனைகள் இருந்தால், தேங்காய் எண்ணெய் கொண்டு வாயைக் கொப்பளியுங்கள். இதனால் அதில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி தன்மை, இப்பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.

தாடைகளில் உள்ள காயங்கள்
தாடைகளின் உட்பகுதியில் காயங்கள் ஏதேனும் இருந்தாலோ அல்லது தாடைகளின் இணைப்புக்களில் ஏதேனும் பிரச்சனை இருந்தாலோ, அவற்றை தேங்காய் எண்ணெய் கொண்டு ஆயில் புல்லிங் செய்வதன் மூலம் சரிசெய்யலாம்.

பற்களை வெண்மையாக்கும்
உங்களுக்கு பற்கள் வெண்மையாக இல்லாவிட்டால், தினமும் தேங்காய் எண்ணெய் கொண்டு ஆயில் புல்லிங் செய்து வருவதன் மூலம் வெண்மையாக்கலாம். எனவே கண்ட கெமிக்கல் கலந்த பொருட்களைக் கொண்டு பற்களைப் பராமரிப்பதைத் தவிர்த்து, ஆயில் புல்லிங் செய்யுங்கள்.

ஆரோக்கியமான சருமம்
ஆயில் புல்லிங் செய்வதால், உடலில் உள்ள டாக்ஸின்கள் வெளியேற்றப்பட்டு, சருமம் ஆரோக்கியத்துடனும், பிரகாசமாகவும் இருக்கும்.

தலைவலி
சிலர் தலைவலியால் அதிகம் கஷ்டப்படுவார்கள். அவர்கள் தேங்காய் எண்ணெய் கொண்டு ஆயில் புல்லிங் செய்வதன் மூலம், தலைவலியில் இருந்து விடுபடலாம்.

சிறுநீரகம் மற்றும் கல்லீரல்
தினமும் ஆயில் புல்லிங் செய்வதால், கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தில் உள்ள டாக்ஸின்கள் வெளியேற்றப்பட்டு, அவற்றின் செயல்பாடுகள் ஆரோக்கியமாக இருக்கும்.

சுவாசப் பிரச்சனைகள்
தேங்காய் எண்ணெயைக் கொண்டு ஆயில் புல்லிங் செய்வதால், இதுவரை நீங்கள் சந்தித்து வந்த சுவாசப் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.



Click it and Unblock the Notifications
