Latest Updates
-
ஆயில்யம் நட்சத்திரம் செல்லும் குரு பகவான்: அக்டோபர் 08 முதல் இந்த 3 ராசிக்கு கஷ்டங்கள் குறையும்! -
டீக்கடை கடலைப்பருப்பு பக்கோடா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணிப் பாருங்க.. -
ஆரஞ்சு பழத் தோலை இனி தூக்கிப் போடாம.. இப்படி யூஸ் பண்ணுங்க.. முகம் வெள்ளையா பளிச்சுன்னு மின்னும்.. -
புரட்டாசி ஸ்பெஷல் சோயா காளான் சுக்கா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
வெறும் வயிற்றில் இந்த 3 உணவுகளை சாப்பிடாதீங்க.. எச்சரிக்கும் டாக்டர்! -
அக்டோபர் 17-ல் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
பூரிக்கு இப்படி உருளைக்கிழங்கு மசாலா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் கணக்கில்லாம சாப்பிடுவாங்க... -
அக்டோபர் 04 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் ஆரோக்கியம் மோசமாகப் போகுதாம் -
சனி-சூரியன் எதிரெதிர் நிலையில் அமர்வதால் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா இந்த கேரளா ஸ்டைல் சிக்கன் மப்பாஸ் செஞ்சு பாருங்க - சுருக்குனு செமையா இருக்கும்
ஐ.டி'ல வேலை பண்றீங்களா? அப்ப ஆரோக்கியமா இருக்க நீங்க இதெல்லா கண்டிப்பா தெரிஞ்சுக்கணும்!!!
இன்று பெரும்பாலும் அலுவலகத்தில் பணிபுரியும் ஆண்களும், பெண்களும் தான் உடல் நலன் சார்ந்த பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர். அதிலும் பன்னாட்டு நிறுவனங்களில் பணிப்புரியும் நபர்கள் ஏராளமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.
உங்களுக்கு முப்பது வயசு ஆகபோகுதா? அப்ப இதெல்லா நீங்க கண்டிப்பா மாத்திக்கணும்!!!
இதற்கு காரணம் அவர்களது வேலை பளுவும், அதன் காரணமாக ஏற்படும் மன அழுத்தமும் தான். ஒரே இடத்தில அமர்ந்தவாறு பல மணி நேரம் வேலை செய்வது. வாரத்தில் ஐந்து முதல் ஆறு நாட்கள் இடைவிடாது உழைத்துவிட்டு, இரு நாட்கள் முழுதும் ஓய்வெடுப்பது போன்ற செயல்கள் அவர்களது உடல்நலத்தை வலுவாக பாதிப்படைய செய்கிறது.
நீண்ட நேரமா உட்கார்ந்து முதுகு வலி அதிகமா இருக்கா? இதோ சில நிவாரணிகள்!!!
இதில் இருந்து விடுபட்டு, உங்கள் உடல் ஆரோக்கியத்தை நல்ல முறையில் பாதுகாக்க, நீங்கள் அலுவலகத்தில் இருந்தே, இந்த பழக்கவழக்கங்களை பின்பற்றினால் போதுமானது....

சீரான முறையில் தண்ணீர் குடித்தல்
அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் செய்யும் முதல் தவறு இது, சரியாக தண்ணீரில் குடிக்காமல் இருப்பது. உணவருந்தும் வேளைகளில் மட்டும் தான் பெரும்பாலானோர் தண்ணீர் குடிக்கின்றனர். ஆனால், சீரான முறையில் நாள் முழுதும் தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம் ஆகும். குறைந்தது 30-45 நிமிடங்களுக்கு ஒரு முறை தண்ணீர் குடிக்க வேண்டும்.

நேராக அமர்ந்து வேலை செய்யிங்கள்
பெரும்பாலும் அனைவரும் கணினியின் முன் அமர்ந்து தான் பணிபுரிகிறோம். ஆனால், எவ்வாறு பணிபுரிகிறோம் என்பது தான் கேள்வி. நேராகஅமர்ந்து நீங்கள் வேலை செய்தலே போதும். அவ்வப்போது இடைவேளை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இது, உங்களுக்கு முதுகு மற்றும் தண்டுவட வலி ஏற்படாமல் இருக்க உதவும்.

நொறுக்கு தீனியை தவிரிக்கவும்
இதைப் படிக்கும் போது உங்கள் டேபிளில் கூட நொறுக்கு தீனிகள் இருக்கலாம். ஆம், பெரும்பாலும் ஆண்கள், பெண்கள் இருபாலருமே நொறுக்கு தீனிகளை தங்களது டேபிளின் வைத்து நொறுக்கிக் கொண்டே தான் வேலை செய்கின்றனர். இது நீங்கள் இன்றே விட்டொழிக்க வேண்டிய பழக்கமாகும்.

இடைவேளை
குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையாவது உங்கள் இருக்கையில் இருந்து எழுந்து நடந்து வாருங்கள். சிலர், காலை அலுவலகம் சென்றால் மீண்டும் மாலை கிளம்பும் வரை அவர்களது இடத்திலேயே தான் இருப்பார்கள். உணவு, போன் பேசுதல் என அனைத்துமே அவ்விடத்திலேயே நடக்கும். இதை நீங்கள் முக்கியமாக தவிர்க்க வேண்டும்.

புகையை தவிருங்கள்
ஆண்களை பொறுத்த வரை இருக்கையை விட்டு எழுவதே புகைக்க தான். கேட்டால் டென்ஷன் குறையும் என்று கூறுவார்கள். அப்படி ஏதும் நடக்காது என்று அவர்களுக்கும் தெரியும். எனவே, புகையை நிறுத்தினாலே பல உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படாது.

உங்கள் இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்
உங்கள் இடத்தை நீங்கள் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். நீங்கள் தினமும் பயன்படுத்தும் கம்ப்யூட்டர் கி-போர்டில் இருந்து உங்கள் டேபிள் வரை எவ்வளவு கிருமிகள் இருக்கிறது என்று உங்களுக்கே தெரியாது. இதில் அங்கேயே உட்கார்ந்து சாப்பிடுவது, பிறகு டிசு பேப்பரரில் கையைத் துடைத்து அங்கேயேக் குப்பை தொட்டியில் போட்டுவிடுவது. இதனால் உங்கள் உடலினுள் எண்ணற்ற கிருமிகள் சென்று நோய் தொற்றுகள் ஏற்படுகின்றன.

ஆரோக்கிய உணவு
நொறுக்கு தீனிகளை சாப்பிடுவதற்கு பதிலாக, வீட்டில் இருந்தே பழங்கள் அல்லது வேக வைத்த காய்கறிகள் போன்றவற்றை எடுத்து சென்று சாப்பிடலாம். இது உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.



Click it and Unblock the Notifications
