பெண்களை போலவே, ஆண்களையும் பாதிக்கும் மார்பக புற்றுநோய் - கூறப்படாத உண்மைகள்!!

Posted By: John
Subscribe to Boldsky

நமது வாழ்வியல் மாற்றத்தினாலும், உணவியல் மாற்றத்தினாலும் பெண்களை வலுவாக பாதித்து வரும் நோயாக கருதப்படுவது மார்பக புற்றுநோய். மார்பக புற்றுநோய் என்றாலே அது பெண்களை தான் தாக்கும். இது, பெண் சார்ந்த புற்றுநோய் என்ற கருத்து தான் பரவலாக நிலவி வருகிறது.

மார்பகப் புற்றுநோயுடன் போராடிய பிரபலங்கள்!!

ஆனால், மார்பக புற்றுநோய் ஆனது, ஆண்களையும் தாக்கும் என்ற உண்மை நம்மில் பெரும்பாலானோர் அறிந்ததில்லை. யாரும் இதைப் பற்றி கூறியதும் இல்லை. சமீபத்தில் ஓர் பிரபல மார்பக புற்றுநோய் மருத்துவர், "பெண்களைப் பாதிப்பது போலவே, ஆண்களையும் மார்பக புற்றுநோய் வலுவாக பாதிக்கும் வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. ஆனால், இதைப் பற்றிய விழிப்புணர்வு யாரிடமும் இல்லை" என்று கூறியுள்ளார்.

மார்பக புற்றுநோய்க்கு மேலாடை இன்றி "கோக்" பாட்டிலுடன் போஸ் கொடுத்த பெண்கள்!!

மேலும், ஆண்களை பாதிக்கும் மார்பக புற்றுநோயை பற்றி ஆண்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய உண்மைகள்.....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆண்களுக்கான அபாயம்

ஆண்களுக்கான அபாயம்

தங்களுக்கும் மார்பக புற்றுநோய் ஏற்படும் என்ற அபாயம் ஆண்களுக்கு தெரிவதில்லை. நூறில் ஓர் ஆணுக்கு இந்த புற்றுநோய் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. ஆண்களது மார்களில் அல்லது முலை பகுதிகளில் ஏதேனும் மாற்றம் ஏற்படுவதை உணர்ந்தால் உடனடியாக மருத்துவரிடம் பரிசோதனை செய்துக்கொள்வது அவசியம்.

அபாயக் காரணிகள்

அபாயக் காரணிகள்

ஆண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட, க்லைன்ஃபெல்டர் சிண்ட்ரோம் (Klinefelter syndrome), விதை கோளாறுகள் (testicular disorders), அதிக எஸ்ட்ரோஜன் அளவு, அதிகமான ஆல்கஹால், புகைப் போன்றவை அபாயக் காரணிகளாக இருக்கின்றன.

குறைவான உடல் உழைப்பு

குறைவான உடல் உழைப்பு

குறைவான உடல் உழைப்பு மற்றும் உடல் பருமன் கூட ஆண்களுக்கு மார்பக புற்றுநோய் உறவாக காரணியாக இருக்கின்றது என மார்பக புற்றுநோய் சிறப்பு நிபுணர் கூறியுள்ளார்.

ஆண் மார்பக புற்றுநோய் அறிகுறிகள்

ஆண் மார்பக புற்றுநோய் அறிகுறிகள்

ஆரம்பக் காலத்தில் சிறிய கட்டியாக உருவாகும் போது எந்த அறிகுறியும் அவ்வளவாக தெரியாது. அந்த கட்டி புற்றுநோயாக உருவாகும் போது தான்

சில அறிகுறிகள் தெரிய வரும். அவை, முலைப் பகுதியில் சொரணை இன்றி இருப்பது, சருமத்தின் நிறத்தில் மாற்றம் தெரிவது, அல்சர் போல எரிச்சல் ஏற்படுவது, அந்த பகுதி சிவந்து காணப்படுவது, இரத்தம் அல்லது நீர் போன்ற திரவம் வெளியேறுதல் போன்றவை ஆண் மார்பக புற்றுநோய்க்கான அறிகுறிகளாக கூறப்படுகிறது.

ஆய்வுகள்

ஆய்வுகள்

எல்லா வயது ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் இருக்கின்றன. இதை சில ஆய்வுகளின் மூலம் கண்டறிய முடியும். அந்த ஆய்வு முறைகள், மார்பக சுய தேர்வு, நிப்பிள் வெளியேற்ற தேர்வு, மேமோகிராம், அல்ட்ராசவுண்ட் போன்றவை ஆகும்.

ஆண் மார்பக புற்றுநோய்க்கான சிகிச்சை

ஆண் மார்பக புற்றுநோய்க்கான சிகிச்சை

அவரவருக்கு ஏற்பட்டிற்கும் மார்பக புற்றுநோய் தாக்கத்தின் அளவை வைத்து தான் சிகிச்சை எவ்வாறு செய்வதென்று முடிவு செய்யப்படும். பெரும்பாலும், அறுவை சிகிச்சையின் மூலமாக தான் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கதிர்வீச்சு சிகிச்சை:

கதிர்வீச்சு சிகிச்சை:

மார்பக புற்றுநோய் கட்டிகளை அகற்ற கதிர்வீச்சு சிகிச்சை முறைகள் பின்பற்றப்படுகின்றன.

சிஸ்டமிக் சிகிச்சை (Systemic):

சிஸ்டமிக் சிகிச்சை (Systemic):

இந்த முறையில், புற்றுநோய் கட்டிகளை எதிர்த்து போராடும் மருந்து ஊசி மூலம் உட்செலுத்தப்படும். இதில், கீமோதெரபி, பயோலாஜிக் தெரப்பி, ஹார்மோன் தெரப்பி போன்ற முறைகளும் இருக்கின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

The Untold Truth About Male Breast Cancer

Breast cancer is the erratic growth and proliferation of cells that form in the breast tissue. Although it is more common in women, it is a little known fact that breast cancer can affect men as well.