For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மிகவும் அருவருக்கத்தக்க வகையில் உருவத்தை மாற்றிவிடும் சில வினோதமான நோய்கள்!!!

By John
|

நம் உலகில் வினோதங்களுக்கும், ஆச்சரியங்களுக்கும் பஞ்சமே இல்லை. பிறப்பில் இருந்து இறப்பு வரைக்கும் எல்லாவற்றிலும் சில வினோதங்கள் ஏற்பட்டுக்கொண்டே தான் இருக்கும். மனிதர்கள் பெரும்பாலும் கடவுளிடம் வேண்டுவது, "நோயற்ற வாழ்வு, குறைவற்ற செல்வம்" ஆனால், எவ்வளவு செல்வம் இருந்தாலும் கூட தீர்க்க முடியாத நோய்கள் என்று பல இருக்கின்றன.

உலகப் போரின் போது வழங்கப்பட்ட சில கோரமான தண்டனைகள் - திடுக் நடுக் தகவல்கள்!!!

ஆனால், எச்.ஐ.வி. மற்றும் ஏனைய பால்வினை நோய்களை விட, கண்டாலே அருவருக்கத்தக்க வகையில் உருவத்தை மாற்றிவிடும் சில பயங்கரமான நோய்களும் இந்த உலகில் இருக்கின்றன. ஐய்யோ, இதற்கு இறந்தே விடலாம் என்று எண்ண வைக்கும். எதிரிக்கும் கூட இந்த நோய் வந்துவிட கூடாது என கும்பிட வைக்கும்.

உலகின் சில நாடுகளில் வழங்கப்படும் விசித்திரமான இராணுவ பயிற்சிகள் !!!

அப்பேர்ப்பட்ட சில பயங்கரமான, வினோதமான நோய்கள் குறித்து தான் இனி காணவிருக்கிறோம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மர மனிதன் - Tree Man / Epidermodysplasia Verruciformis

மர மனிதன் - Tree Man / Epidermodysplasia Verruciformis

மிகவும் அரிய நோய் வகை சார்ந்தது தான் இந்த மர மனிதன் நோய். "Human Papillomavirus" - HPV எனும் தொற்றின் மூலம் பரவக் கூடியது இந்த நோய். முகம், கழுத்து, தோள், கால், கைகள் போன்ற உடல் பாகங்கள் எல்லாம் மரம் போல உருமாற ஆரம்பித்துவிடும்.

Image Courtesy

ஓநாய் நோய் - Werewolf Syndrome

ஓநாய் நோய் - Werewolf Syndrome

இந்த நோயின் தாக்கத்தினால் உடலெங்கும் அதிகமான முடி வளரும். இதில் இரண்டு வகைகள் உள்ளன, அவை, General Hypertrichisis மற்றும் Localised Hypertrichisis.

Image Courtesy

நியூரோபைப்ரோமடோசிஸ் - Neurofibromatosis

நியூரோபைப்ரோமடோசிஸ் - Neurofibromatosis

இந்த நோய்க்கு பல அறிகுறிகள் இருப்பினும் கூட, சருமத்தில் ஏற்படும் மாற்றத்தை வைத்து கண்டறிந்துவிடலாம். இந்த நோய் தாக்கத்தினால் உடலெங்கும் நிறைய கட்டிகள் வளரும் என்று கூறப்படுகிறது.

Image Courtesy

காட்டேரி நோய் - Prophyria / Vampire Disease

காட்டேரி நோய் - Prophyria / Vampire Disease

ஹெமி எனப்படும் ஓர் சிவப்பு நிறமியின் அதிக உற்பத்தியால் அசாதாரணமாக ஏற்படம் நோய் தான் இந்த Prophyria. இது ஹீமோகுளோபினில் ஏற்படும் மாற்றதினால் ஏற்படுகிறது. சூரிய வெளிச்சத்தில் வெளியே செல்ல முடியாத அளவு சரும பாதிப்புகள் தரவல்லது இந்த நோய்.

Image Courtesy

முதிராமுதுமை - Progeria (HGPS)

முதிராமுதுமை - Progeria (HGPS)

பா (Paa) படத்தில் அமிதாப்பச்சனின் கதாப்பாத்திரத்திற்கு ஏற்படும் நோய் தான் இது. மிக வேகமாக முதிர்ச்சி அதிகரிக்கும் நோய்.

Image Courtesy

சிங்க முக நோய் - Lion Face Syndrome

சிங்க முக நோய் - Lion Face Syndrome

மிகவும் அரிதான இந்த நோயின் தாக்கம் ஏற்பட்டால் முகத்தின் எலும்புகள் பெரிதாகிவிடும். கிட்டத்தட்ட சிங்கதின் முகம் அளவு பெரிதாக ஆகும் என்றதால் இந்த நோய்க்கு இந்த பெயர். மூக்கு மற்றும் கண் பகுதிகள் கூட மூடியது போன்று தான் காட்சியளிக்கும்.

Image Courtesy

ஆர்க்யுரியா - Argyria

ஆர்க்யுரியா - Argyria

தோலின் நிறத்தை மாற்றக் கூடிய கொடிய தன்மையுடைய நோய் தான் இந்த ஆர்க்யுரியா - Argyria. இந்த நோயின் தாக்கத்தினால், சருமத்தின் நிறம் வெள்ளி அல்லது சாம்பல் நிறத்திற்கு மாறிவிடும்.

Image Courtesy

நேக்ரோடிசிங் ஃபேச்சிடிஸ் - Necrotisting Fasciitis

நேக்ரோடிசிங் ஃபேச்சிடிஸ் - Necrotisting Fasciitis

பாக்டீரியா தொற்றினால் ஏற்படும் இந்த நோய், முகம், மேல்தோல் மற்றும் தோலின் அடி பகுதியில் இருக்கும் பகுதி போன்றவற்றை பாதிக்கும். இந்த நோயின் பாதிப்பு ஏற்படுவதில் நாளில் ஒருவர் இறந்துவிடுகின்றனர்.

Image Courtesy

எப்.ஓ.பி (Fibrodysplasia Ossificans Progressiva - FOP)

எப்.ஓ.பி (Fibrodysplasia Ossificans Progressiva - FOP)

இது ஆண்களுக்கு ஏற்படும் ஓர் அரிதான நோய் ஆகும். இது எலும்புகளை தசைகளோடு வினோதமாக பின்னிப்பிணையும் படி செய்துவிடுகிறதாம்.

Image Courtesy

ப்ரோட்டஸ் சிண்ட்ரோம்

ப்ரோட்டஸ் சிண்ட்ரோம்

ப்ரோட்டஸ் என்றால் அதிகமான வளர்ச்சி என்ற பொருளாம். இந்த நோய் தாக்கம் ஏற்பட்டால் உடலில் பல பாகங்கள் அளவுக்கு அதிகமாக பெரிய அளவில் வளரும். இது அந்த நபரின் தோற்றத்தையே மாற்றிவிடும். இந்த நோயின் பெயர் பண்டைய கிரேக்க நாட்டின் கடவுள் பெயரில் இருந்து எடுத்துள்ளனர்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ten Rare Diseases That You Wish Were Not Real

Do you know about the ten rare disease that you wish were not real? read here.
Desktop Bottom Promotion