Latest Updates
-
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்..
சென்னை மழை வெள்ளத்தால் உணவு, தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படுவோரைக் காப்பாற்ற சில வழிகள்!!!
தமிழ்நாட்டில் பெய்து வரும் கனமழையால் சென்னை மட்டுமின்றி, அதனைச் சுற்றியுள்ள பல இடங்களில் உள்ள ஆறுகள், ஏரிகள் நிரம்பி, தண்ணீரை திறந்துவிட வேண்டிய சூழ்நிலையினால் வெள்ளம் வந்து, வீடுகளில் எல்லாம் தண்ணீர் புகுந்து, ஏராளமான மக்கள் தங்களின் வீட்டை இழந்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, தங்குவதற்கு இடம், உண்ண உணவு, குடிக்க நீர் ஏதுமின்றி, பலர் பசியால் வாடுகின்றனர். அப்படி மிகுந்த இன்னல்களுக்கு உள்ளாகித் தவித்து வரும் மக்களுக்கு ஏராளமானோர் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க வேண்டியது அவசியமல்லவா? எனவே இம்மாதிரியான சூழ்நிலையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள சிலவற்றை மனதில் கொண்டு அதன்படி நடக்க முயலுங்கள்.

சுடுநீரில் சர்க்கரை மற்றும் உப்பு
உணவு எதுவும் கிடைக்காத பட்சத்தில் 1 லிட்டர் நீரை நன்கு கொதிக்க வைத்து, அதில் 5-6 டீஸ்பூன் சர்க்கரை மற்றும் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து, அடிக்கடி குடித்து வர, 3 நாட்கள் உணவின்றி இருக்க முடியும். மேலும் இது அனைத்து வயதினருக்கும் இது மிகவும் உபயோகமாக இருக்கும்.

மழை நீர் குடிநீர்
வெள்ளம் வந்ததால், குடிக்கும் நீரின் விலையை கூட மனசாட்சியின்றி அதிகரித்துவிட்டனர். இருப்பினும் மழை நீரை சேகரித்து, அதனை நன்கு 10 நிமிடம் கொதிக்க வைத்து, அந்த நீரைக் குடிக்கலாம். இதனால் உடலுக்கு எந்த பாதிப்பும் நேராது.

ப்ளீச்சிங் பவுடர் அல்லது உப்பு
உங்கள் வீட்டில் முழங்கால் அளவில் தண்ணீர் புகுந்துவிட்டால், அந்த நீரில் ப்ளீச்சிங் பவுடர் அல்லது உப்பைத் தூவி விடுங்கள். இதனால் நீரில் உள்ள பாக்டீரியாக்கள் அல்லது கிருமிகள் அழிந்துவிடும். இம்முறை நீரிழிவு நோயாளிகளின் கால்களில் பாக்டீரியா தொற்றுக்கள் ஏற்படாமல் பாதுகாக்கும்.

சாதம் வடித்த தண்ணீர்
சாதத்தை குக்கரில் வைக்காமல், பாத்திரத்தில் சமைக்கும் போது, அதில் உள்ள எஞ்சிய தண்ணீரை வடிகட்டுவோம். அப்படி வடிகட்டிய தண்ணீரைக் குடித்தால், நாள் முழுவதும் உடலுக்கு வேண்டிய ஆற்றல் கிடைக்கும்.

ராகி உருண்டை
வெள்ளத்தால் உணவு கிடைக்காமல் வாடுபவர்களுக்கு சாதத்தை தான் வழங்க வேண்டுமென்ற அவசியமில்லை. உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் வகையிலும், அவர்களின் ஆற்றல் தக்க வைக்கும் படியும், அடிக்கடி பசி ஏற்படாதவாறான உணவுப் பொருளைக் கூட வழங்கலாம். அதற்கு சிறந்தது ராகி உருண்டை. ராகி உருண்டையை உட்கொண்டால், அடிக்கடி பசி ஏற்படுவது குறையும், கொல்ஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது.

பெட்ரோலியம் ஜெல்லி அல்லது வேஸ்லின்
எங்கும் முழங்கால் அளவு நீர் இருப்பதால், கடுமையான கிருமிகளின் தாக்கத்தால் சரும பிரச்சனைகள் வராமல் இருக்க, பெட்ரோலியம் ஜெல்லி அல்லது வேஸ்லின் தடவிக் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications
