நிம்மதியைக் குலைக்கும் நீரிழிவைக் கட்டுப்படுத்த சில வழிகள்!!!

Posted By:
Subscribe to Boldsky

வாழ்நாள் முழுவதும் நிம்மதியைக் குலைக்கும் வகையில் தற்போது பலரையும் தாக்கும் ஆரோக்கிய பிரச்சனைகளில் ஒன்று தான் நீரிழிவு. ஒருவருக்கு நீரிழிவு வந்தால், வாழ்நாள் முழுவதும் அதற்கு சிகிச்சை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.

பொதுவாக நீரிழிவு ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் தான் வரும். ஆனால் இப்போதோ சிறு வயதிலேயே, ஏன் பிறந்த குழந்தைகளுக்கு கூட நீரிழிவு வரும் வாய்ப்பு உள்ளது.

இத்தகைய கொடிய பிரச்சனையை தவிர்க்க ஒருசில விஷயங்களை மற்றும் உண்ணும் உணவுகளில் மிகுந்த கவனத்துடன் இருந்தால், நிச்சயம் நீரிழிவில் இருந்து விடுபடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நார்ச்சத்துள்ள காய்கறிகள்

நார்ச்சத்துள்ள காய்கறிகள்

நார்ச்சத்து அதிகம் நிறைந்த காய்கறிகளான பட்டாணி, பீன்ஸ், ப்ராக்கோலி மற்றும் கீரையை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். ஏனெனில் இவை இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுன் வைக்கும்.

வெந்தயம்

வெந்தயம்

இரவில் படுக்கும் போது ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை ஒரு டம்ளர் நீரில் போட்டு ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.

 பாதாம்

பாதாம்

தினமும் இரவில் 6 பாதாம் பருப்பை நீரில் ஊற வைத்து, சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல் இருக்கும்.

நார்ச்சத்துள்ள பழங்கள்

நார்ச்சத்துள்ள பழங்கள்

காய்கறிகளைப் போலவே பழங்களில் பப்பாளி, ஆரஞ்சு, பேரிக்காய் மற்றும் கொய்யா போன்றவற்றில் நார்ச்சத்து உள்ளது. ஆனால் வாழைப்பழம், மாம்பழம், திராட்சை போன்றவற்றை சாப்பிடக்கூடாது. ஏனெனில் இவற்றில் சர்க்கரை அதிக அளவில் உள்ளது.

பால்

பால்

சர்க்கரை நோய் உள்ளவர்கள், தினமும் இரண்டு வேளை பால் குடிக்கவும். ஏனென்றால், இவற்றில் கார்போஹைட்ரேட் மற்றும் புரோட்டீன் சரியான அளவில் உள்ளது. ஆகவே இது இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கும்.

தேன்

தேன்

நீரிழிவு நோயாளிகள் சர்க்கரையை சாப்பிடக்கூடாது. இருந்தாலும் அவர்களுக்கும் இனிப்பு சாப்பிட ஆசை இருக்கும். அவர்களுக்காக இயற்கை தந்த வரப்பிரசாதம் தான் தேன். இந்த தேனை வேண்டுமெனில் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

முட்டை மஞ்சள் கரு கூடாது

முட்டை மஞ்சள் கரு கூடாது

நீரிழிவு நோயாளிகள் முட்டையின் மஞ்சள் கருவை சாப்பிடக்கூடாது. ஏனெனில் அவற்றில் கொழுப்புச்சத்து அதிகம் உள்ளது.

மீன், சிக்கன் சாப்பிடலாம்

மீன், சிக்கன் சாப்பிடலாம்

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மீன், சிக்கன் போன்றவற்றை சாப்பிடலாம். ஆனால் மட்டனை சாப்பிடக்கூடாது. ஏனெனில் மட்டனில் கொழுப்புச்சத்து அதிகம் உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Simple health Tips To Prevent Diabetes

Here are some simple tips to prevent diabetes. Take a look...
Subscribe Newsletter