Latest Updates
-
அக்டோபர் 04 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் ஆரோக்கியம் மோசமாகப் போகுதாம் -
சனி-சூரியன் எதிரெதிர் நிலையில் அமர்வதால் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா இந்த கேரளா ஸ்டைல் சிக்கன் மப்பாஸ் செஞ்சு பாருங்க - சுருக்குனு செமையா இருக்கும் -
வார ராசிபலன்கள் - உங்க ராசி என்னனு சொல்லுங்க? வரப்போற வாரம் எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம் -
4 முட்டை இருந்தா ஹைதராபாத் ஸ்டைலில் இந்த மாதிரி குருமா செஞ்சு பாருங்க - தாறுமாறா இருக்கும் -
மகாத்மா காந்தியின் பெயர் 5 முறை பரிந்துரைக்கப்பட்டும் அவருக்கு ஏன் நோபல் பரிசு கிடைக்கவில்லை தெரியுமா? -
கொங்கு ஸ்பெஷல் பருப்பு செலவு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மணமணக்கும்.. வரகரிசி பொங்கல் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
அக்டோபர் 03 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கஷ்டங்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
சைவ உணவை விரும்பி சாப்பிடும் உலகின் டாப் 10 நாடுகள் - இந்தியா எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா?
பலரை அச்சுறுத்தும் உயிர்கொல்லி நோயான காசநோயின் அறிகுறிகள்: உலக காசநோய் தின ஸ்பெஷல்
பலரையும் அச்சுறுத்தும் உயிர்கொல்லி நோயாக விளங்கிய காசநோய், இன்று வரை பலரது உயிரையும் எடுத்துக் கொண்டு தான் இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம், காசநோய் இருமலில் தான் ஆரம்பிப்பதாகும். இதனால் பலர் இருமல், தும்மல் போன்றவை தொடர்ந்து வந்தால், சாதாரணமாக எண்ணி அப்படியே விட்டுவிடுகின்றனர். அதுமட்டுமல்லாமல் காசநோய் பற்றி பலருக்கும் சரியாக தெரியாமல் இருப்பதும் ஒரு காரணம்.
பொதுவாக காசநோய் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு காற்றின் மூலம் பரவக்கூடியது. அதனால் தான் நம் பெற்றோர்கள் இருமலின் போதும், தும்பும் போதும், கைக்குட்டை கொண்டு மூடி தும்மவோ, இருமவோ சொல்வார்கள். மேலும் அக்காலத்தில் மருத்துவ வசதி இல்லாததால், பலர் காசநோயால் இறந்தனர். ஆனால் காசநோயின் அறிகுறியை தெரிந்து கொண்டு, ஆரம்பத்திலேயே போதிய சிகிச்சை எடுத்து வந்தால், நிச்சயம் காசநோயினால் இறப்பதைத் தடுக்கலாம்.
காசநோயானது சுகாதாரமின்மை, காற்றோட்ட வசதி இல்லாதது, மது அருந்துவது, புகைப்பிடிப்பது போன்றவற்றால் அதிகம் வரும். குறிப்பாக உலகிலேயே இந்தியாவில் தான் இந்நோயால் அதிக மக்கள் இறக்கின்றனர் என்று உலகச் சுகாதார அமைப்பின் காசநோய் பற்றிய புள்ளிவிவரம் கூறுகின்றது. ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை காசநோயின் அறிகுறிகளை இங்கு கொடுத்துள்ளது. அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனிமேல் ஜாக்கிரதையாக இருங்கள்.

தொடர்ச்சியான மற்றும் வலியுடன் கூடிய இருமல்
உங்கள் அவ்வப்போது தொடர்ச்சியாக இருமல் வருகிறதா? அதிலும் இரண்டு வாரங்களுக்கு மேலாக இந்த இருமல் நீடித்துள்ளதா? அப்படியெனில் உடனே மருத்துவரை அணுகி போதிய சோதனையை மேற்கொள்ளுங்கள். ஏனெனில் இது காசநோய்கான அறிகுறிகளுள் ஒன்று.

எடை குறைவு
தொடர்ச்சியான இருமல் இருந்து, உங்கள் எடை திடீரென்று அதிக அளவில் குறைந்தால், உங்கள் உடலில் காசநோயை உண்டாக்கும் பாக்டீரியா நுழைந்துள்ளது என்று அர்த்தம்.

சளியுடன் இரத்தம்
இருமலின் போது வெளிவரும் சளியில் இரத்தம் கலந்து வந்தால், நேரத்தை வீணாக்காமல் உடனே மருத்துவரை சந்திக்க வேண்டும். ஏனெனில் இது காசநோய் முற்றிய நிலையில் இருப்பதற்கான அறிகுறிகளுள் ஒன்று.

காய்ச்சல்
காசநோய் இருந்தால், காய்ச்சலும் வரும். தொடச்சியான இருமலுடன் காய்ச்சலும் இரண்டு வாரங்களுக்கு மேலாக நீடித்திருந்தால், உறுதியாக காசநோய் உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம்.

சோர்வு
காசநோயால் பாதிக்கப்பட்டிருந்தால், நீங்கள் மிகவும் சோர்வுடன் தெம்பே இல்லாதவாறு உணர்வீர்கள். இப்படி அளவுக்கு அதிகமாக சோர்வை நீங்கள் உணர்ந்தால், அதுவும் காசநோயின் அறிகுறியாகும்.

நுரையீரலில் கடுமையான வலி
நெஞ்சில் கடுமையான வலியை சுவாசிக்கும் போது உணர்ந்தால், நுரையீரல் காசநோய் பாக்டீரியாவால் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம்.

மூன்று வாரங்களுக்கு மேல் நீடித்தால்...
காசநோய் நுரையீரலை மட்டும் பாதிக்காது. உடலின் அனைத்து பாகங்களையும் கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக் கொண்டே வரும். அதில் முக்கியமாக வயிறு, மூளை அல்லது கல்லீரல் போன்றவை தான் அதிகம் பாதிக்கப்படும். எனவே எந்த ஒரு பிரச்சனையும் மூன்று வாரங்களுக்கு மேல் நீடித்தால், அப்போது எடுக்கப்படும் பரிசோதனை காசநோய்க்கான பரிசோதனையாகத் தான் இருக்கும்.

தெளிவின்றி நுரையீரல்
காசநோய் என்பது நுரையீரலைத் தாக்கும் தொற்றுகள் ஆகும். எனவே நுரையீரலை எக்ஸ்-ரே எடுத்து பார்க்கம் போது, உங்கள் நுரையீரல் தெளிவின்றி காணப்பட்டால், அது காசநோய் இருப்பதற்கான அறிகுறிகளுள் ஒன்று.

எச்.ஐ.வி பாசிடிவ்?
எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் காசநோயால் அதிகம் அவஸ்தைப்படுவார்கள். ஏனெனில் எச்.ஐ.வி வந்தால் நோயெதிர்ப்பு சக்தி முற்றிலும் குறைந்திருப்பதால், அப்போது காசநோயின் தாக்கம் அதிகம் இருக்கும்.

இரவில் குளிர் நடுக்கம் மற்றும் அதிகம் வியர்ப்பது
இரவில் குளிர் நடுக்கம் மற்றும் அதிகம் வியர்த்தால், அதுவும் ஏதேனும் பாக்டீரியல் அல்லது வைரஸ் தொற்றுகளால் தான் ஏற்படும். முக்கியமாக இந்த அறிகுறி காசநோயின் அறிகுறிகளுள் அடங்கும்.

மாண்டோ சோதனை
மாண்டோ சோதனை என்பது சருமத்தில் ஒருவித நீர்மம் உட்செலுத்தப்படும். அப்படி உள்ளே நீர்மத்தை செலுத்திய பின், அவ்விடத்தில் அரிப்பு, எரிச்சல் போன்றவை ஏற்பட்டால், உங்களுக்கு காசநோய் இருப்பது உறுதிபடுத்தப்படும்.



Click it and Unblock the Notifications
