பொறந்த மேனியா தூங்குறதுனால என்னென்ன நன்மையெல்லாம் இருக்குன்னு உங்களுக்கு தெரியுமா!!!

Posted By:
Subscribe to Boldsky

பிறந்த மேனியாக தூங்குவதனால் உங்கள் மகிழ்ச்சி அதிகரிக்கிறதாம். இதை அறிவியல் பூர்வமாக வேறு நிரூபித்துள்ளனர் அதிமேதாவி ஆராய்ச்சியாளர்கள். (பொதுவாவே நம்ம பசங்க ரொம்ப.... நல்ல பசங்க!!! இதுல இது வேற!!) மகிழ்ச்சி மட்டுமல்லாது சில பல உடல்நல நன்மைகளும் விளைவிக்கிறதாம் பிறந்த மேனியாய் தூங்கும் செயல். (ஹ்ம்ம் ரைட்டு!! ஏதோ முடிவு பண்ணிட்டானுங்க!!!)

கூச்சப்படாம வீட்டுக்குள்ள 'சும்மா' சுத்துங்க.. உடம்புக்கு ரொம்ப நல்லதாம்!

இந்த கல்வெட்டில் பொரிக்க வேண்டிய விஷயத்தை படித்து, தெரிந்து, அறிந்து உங்கள் ஆருயிர் நண்பர்களுடனும் முடிந்தால் பகிர்ந்துக் கொள்ளுங்கள். இனி, அறிவியல் பூர்வமாய் நிரூபிக்கப்பட்ட "கிங்கினி மங்கினி" உறக்கத்தின் நன்மைகள் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நல்ல உறக்கம்

நல்ல உறக்கம்

அமெரிக்க உறக்க மருத்துவ கழகத்தைச் சேர்ந்தவர்கள் என்ன கூறுகின்றனர் எனில், " உடையணிந்து உறங்குவதன் மூலம் உடலின் வெப்பம் வெளியேறுவதில் தடை ஏற்படுகிறதாம். அதனால் இயற்கையாக நீங்கள் உறங்கும் நேரத்தின் அடிப்படைகளில் மாற்றம் ஏற்படுகிறதாம். அதனால தான் இவங்க என்ன சொல்றாங்க அப்படின்னு கேட்டா... பிறந்த மேனியாக தூங்கினால் உடலின் வெப்பம் எளிதாக வெளியேறிவிடும் அதனால் நல்ல தூக்கம் கிடைக்கும் என்கின்றனர்.

 பெண்களுக்கு நல்லது

பெண்களுக்கு நல்லது

பெண்களுக்கு அவர்களது பிறப்புறுப்பில் இருந்து வாயு வெளியேற இது உதவுகிறதாம். இதனால் அவர்களுக்கு பாக்டீரியா தொற்று சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் குறைகிறது. (உடம்புக்கு நல்லதுன்னா அப்பறம் என்ன.. சந்தோஷம் தான...!!)

உங்களை செக்ஸியாக உணர வைக்கிறது

உங்களை செக்ஸியாக உணர வைக்கிறது

பிறந்த மேனியாக தூங்குவது உங்களை செக்ஸியாக உணர வைக்கிறது. மற்றும் காலை நேரத்தில் உடலுறவுக் கொள்வதற்கு தூண்டுதலாய் இருக்கிறதாம். (கொசுறு செய்தி: காலை நேரத்தில் உடலுறவுக் கொள்வது உங்களது மனநிலையை சீராக்கும் என்பதை நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டும்)

தொப்பையை குறைக்க

தொப்பையை குறைக்க

முன்பு கூறியது போல இது உங்களது உடல் சூட்டை வெளியேற்ற உதவுகிறது. இதனால் உங்கள் உடல் குளிர்ச்சியான நிலையை அடைகிறது. உடல் குளிர்ச்சியாகும் போது ஹார்மோன்கள் நன்கு செயல்படுகிறது. இதனால் உங்கள் உடலில் இருக்கும் கார்டிசோலின் அளவு குறைகிறது. இது உங்களது தொப்பையை குறைக்க உதவுகிறதாம்.

குளிக்க தேவை இல்லையாம்

குளிக்க தேவை இல்லையாம்

உடலின் வெப்பம் வெளியேறுவதனால் வியர்வை நாற்றம் அண்டுவது இல்லையாம். மற்றும் இரவு முழுதும் உங்கள் உடல் குளுமையாக இருந்ததனால் குளிக்க தேவை இல்லை என்று கூறியிருக்கின்றனர். (இந்த பாயிண்ட் எனக்கு புடிச்சுருக்கு...! நிறைய பேருக்கு காலங்காத்தால குளிக்கிறதுன்னாலே கொஞ்சம் சங்கட்டமா இருக்கும், அவங்க இத ஃபாலோ பண்ணலாம்)

உடலுறவை அதிகரிக்க உதவுகிறது

உடலுறவை அதிகரிக்க உதவுகிறது

(அட இத தானய்யா மொதல்ல சொல்லியிருக்கணும்..!!!) பிறந்த மேனியாக தூங்குவது உங்களை அதிகம் உடலுறவுக் கொள்ள தூண்டுகிறதாம். (வேற என்ன வேணும் சொல்லுங்க..!! இது ஒன்னு போதாதா...)

இலகுவாக உணர உதவுகிறது

இலகுவாக உணர உதவுகிறது

நிர்வாணமாக தூங்குவது உங்கள் உடலும் மனதும் இலகுவாக உதவுகிறது. இதனால் உங்களது மன அழுத்தமும், சோர்வும் குறைகிறது. (ஆக மொத்தம் எப்படியோ மொழுகி பூசி.. இத அறிவியல் பூர்வமா நிரூபிச்சுட்டாங்க... இத நீங்களும் நம்பனும்!! ஓகே!!!)

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Seven Scientific Reasons Why Sleeping Naked Is Really Good

Do you know there are seven reasons scientifically proven that sleeping naked is really good!
Subscribe Newsletter