Latest Updates
-
செப்டம்பர் 18-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க வேலை மற்றும் பண விஷயத்தில் கவனமா இருக்கணும்! -
செவ்வாய் கடக ராசிக்கு செல்வதால் நவம்பர் மாதம் வரை டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஆந்திரா ஸ்டைல் உருளைக்கிழங்கு தொக்கு ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அம்ரித்சரி பன்னீர் புர்ஜி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க... -
இந்த 5 ராசிக்காரங்க மற்றவர்களை விட வாழ்க்கையில் ஈஸியாக ஜெயிக்கும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்க ராசி என்ன? -
iPhone 18 Pro and 18 Pro Max: அமெரிக்காவை விட இந்தியாவில் ஐபோனின் விலை ஏன் மிக அதிகமாக உள்ளது தெரியுமா? -
விநாயகர் சதுர்த்திக்கு இப்படி பால் கொழுக்கட்டை செய்யுங்க.. க்ரீமியாவும், ருசியாவும் இருக்கும்.. -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் செட்டிநாடு உப்பு அப்பம் ரெசிபி - இதை ட்ரை பண்ணி பாருங்க - காரமா சூப்பரா இருக்கும் -
மழைக் காலத்தில் கண்களில் அரிப்பு ஏற்படுகிறதா? அதற்கான காரணங்களும், எச்சரிக்கை அறிகுறிகளும்- விளக்கும் டாக்டர்!
ஆண்மைக் குறைபாட்டை ஏற்படுத்தும் மருந்து, மாத்திரைகள் - ஷாக் ரிப்போர்ட்!!!!
உடல்நலனை அதிகரிக்க உட்கொள்ளும் சில மருந்து, மாத்திரைகளே ஆண்களுக்கு ஆண்மை குறைபாடு ஏற்பட காரணமாக இருக்கிறது என்பது கொஞ்சம் அதிர்ச்சிகரமான விஷயமாக தான் இருக்கிறது. இது ஒருப்பக்கம் இருக்க, மருந்து உட்கொள்வதில் நீங்கள் செய்யும் சில சிறிய தவறுகளும் கூட, ஆண்மை குறைபாடு ஏற்பட பெரிய காரணமாக இருக்கிறது.
பாலுணர்ச்சியை அதிகரிக்க மேற்கொள்ளும் டயட்டினால் ஏற்படும் தாக்கங்கள்!!!
இனி, ஆண்மை குறைபாட்டை ஏற்படுத்தும் மருந்துகள் என்னென்ன மற்றும் அதற்கான கரணங்கள் பற்றி காணலாம்...
ஆண்கள் பீட்ரூட் சாப்பிட்டால் பாலியல் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்: ஆய்வில் தகவல்!!!

மன அழுத்தத்தை குறைக்கும் மருந்துகள்
மன அழுத்தத்தை குறைக்க உட்கொள்ளும் மருந்துகளான ப்ரோசக் (Prozac), சோலோஃட் (Zoloft) போன்றவை மெல்ல உங்கள் ஆண்மையைக் கொல்லும் மருந்துகள் என கூறப்படுகிறது.

நரம்பு மருந்துகள்
நரம்பு சார்ந்த பிரச்சனைகளுக்கு உட்கொள்ளும் சில மருந்துகள் இருக்கின்றன. இவை மெதுவாக, நாள்பட ஆண்களின் ஆண்மையை குறைக்க செய்கிறது என கூறப்படுகிறது.

கருத்தடை மாத்திரைகள்
அதிகப்படியாக கருத்தடை மாத்திரைகள் உட்கொள்வது செக்ஸ் ஹார்மோன்களின் செயல்திறனை குறைத்துவிடுகிறதாம். முக்கியமாக ஆண்களின் டெஸ்டோஸ்டிரோனில் இதன் தாக்கம் குறைபாட்டை ஏற்படுத்துகிறது என கூறப்படுகிறது.

விறைப்படைய உட்கொள்ளும் மருந்துகள்
ஆண்கள், உடலுறவில் சிறந்து ஈடுபடவும், தங்களது ஆண்குறி விறைப்படையும் உட்கொள்ளும் மருந்துகள், மெல்ல, மெல்ல ஆண்மை குறைப்பாட்டை ஏற்படுத்துகிறதாம்.

அலர்ஜிக்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகள்
அலர்ஜிக்காக எடுத்துக்கொள்ளும் மருந்துகளில், "Anti- Histamines" கலப்பு இருக்கும் மருந்துகளை அதிகம் பயன்படுத்த வேண்டாம் அல்லது நீண்ட நாட்கள் பயன்படுத்த வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறது. ஏனெனில், இது உங்கள் இல்லற வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

கஞ்சா
கஞ்சா எனும் போதை மருந்தை அதிகம் உட்கொள்ளுதல் வலுவாக ஆண்மை குறைப்பாட்டை ஏற்படுத்துகிறது.

வலி நிவாரண மாத்திரைகள்
சிலர் தங்களது கைப்பைகளில் எப்போதுமே வலி நிவாரண மாத்திரைகள் வைத்திருப்பார்கள். வலி ஏற்படுவது போல இருந்தாலே, ஒன்றை எடுத்து வாயில் போட்டுக் கொள்வார்கள். தினந்தோறும் நீங்கள் வலி நிவாரண மருந்துகளை எடுத்துக்கொள்வது ஆண்மை குறைப்பாட்டை ஏற்படுத்துகிறது.

இதய நோய் சார்ந்த மருந்துகள்
புரப்ரனொலொல் மற்றும் மெட்ரோப்ரோலால் (propranolol and metoprolol) மூலப்பொருள் உள்ள இதய பிரச்சனைகளுக்கு உட்கொள்ளும் மாத்திரைகள், இதயத்திற்கு நன்மை விளைவிக்கிறது உண்மைதான். ஆனால், இதன் பக்கவிளைவுகள், ஆண்மை குறைப்பாட்டை ஏற்படுத்துகிறது.



Click it and Unblock the Notifications
