Latest Updates
-
பெங்காலி தக்காளி சட்னி ரெசிபி... ஒரு தடவை அரைச்சு பாருங்க... இனிப்பா, காரமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் மீல் மேக்கர் இருந்தா.. இந்த பக்குவத்துல கிரேவி செய்யுங்க.. 2 சப்பாத்தி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க... -
குருபகவானின் நேரடி இயக்கத்தால் இந்த 4 ராசிகாரர்களுக்கு கோடீஸ்வர யோகம் கூடிவரப்போகுதாம்...! -
இளநீர் Vs நெல்லிக்காய் ஜூஸ் - இவற்றில் கோடையில் குடிக்க சிறந்தது எது? -
Tamil Nadu Election 2026: தமிழ்நாடு அரசிலுடன் தொடர்புடைய புகழ்பெற்ற தமிழ்நாட்டு கோவில்கள் என்னென்ன தெரியுமா? -
12 ஆண்டுகள் கழித்து உச்ச வீட்டில் நுழையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு ராஜயோகம் அடிக்கப்போகுது.. -
சுரைக்காய் வாங்குனா வேர்க்கடலையுடன் சேர்த்து இந்த மாதிரி பொரியல் பண்ணுங்க... செம சைடிஷா இருக்கும்...! -
1 கப் தயிரும், 2 கத்திரிக்காயும் இருந்தா.. இப்படி கிரேவி செய்யுங்க.. செம டேஸ்ட்டா இருக்கும்.. -
புதிய பாபா வாங்கா கணிப்பின் படி அமெரிக்கா-ஈரான் போருக்கு பின் அமெரிக்காவின் நிலை என்னவாகும் தெரியுமா? -
IPL 2026: இந்த ஆண்டின் சிஎஸ்கே அணியில் உள்ள மிகச்சிறந்த 5 வீரர்கள்! இவர்களால் ஆட்டமே அதிரடியா இருக்கப்போகுது!
நீங்கள் தினசரி சாப்பிடும் உணவில் கலக்கப்படும் இரசாயனங்களும், அதனால் ஏற்படும் பக்கவிளைவுகளும்!!!
கடந்த இரு வாரங்களாக எங்கு பார்த்தாலும் மேகி, மேகி, மேகி.... தான். டெல்லி, உத்திரப்பிரதேசம், கேரளா மற்றும் நேற்று முதல் தமிழகத்திலும் மேகி தடை செய்யப்பட்டது. மேகியில் மட்டும் தான் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் உட்பொருட்கள் உள்ளதாக நினைக்கிறீர்களா? அப்படி நினைத்தால் அது முற்றிலும் தவறு.
ஆரோக்கியத்தை சீரழிக்கும் அழகு சாதனப் பொருட்கள்!
நாம் தினமும் ருசித்து சாப்பிடும் பலவகை சிப்ஸ்களில் இருந்து, மாட்டினை போல நாம் அசைப் போட்டுக் கொண்டிருக்கும் சூயிங் கம் வரை அனைத்திலும் நமது உடலிற்கு கேடு விளைவிக்கும் மூலப் பொருட்களும், தீய இரசாயனங்களும் இடம்பெற்று இருக்கின்றன.
ஷாப்பிங் மால்களில் விற்கப்படும் பதப்படுத்தப்பட்ட பொருட்களை உட்கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள்!!!
இவ்வாறு கலக்கப்படும் இரசாயனங்களினால் நமது உடலுக்கு சிறுநீரக செயல்திறன் குறைபாடு, பசியின்மை, ஆண்மையில் குறைபாடு, புற்றுநோய் கட்டிகள் உருவாகும் வாய்ப்புகள் என பல அபாயங்கள் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால், இதை எல்லாம் ஏன் இதுவரை யாரும் பரிசோதிக்கவில்லை, அல்ல பரிசோதித்து தான் விற்கப்படுகின்றனவா? என்பதெல்லாம் கேள்விக்குறியாகவே இருக்கின்றன...
காண்டம் பயன்படுத்துவதனால் ஏற்படும் பக்க விளைவுகள் - ஷாக் ரிப்போர்ட்!!!
இனி, நீங்கள் தினசரி சாப்பிடும் உணவில் கலக்கப்படும் இரசாயனங்களும், அதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் பற்றியும் காணலாம்....

பகுதி ஹைட்ரஜன் ஏற்றிய எண்ணெய்
பகுதி ஹைட்ரஜன் ஏற்றிய எண்ணெய் (PARTIALLY HYDROGENATED OIL), இது இதயத்தை பாதிக்கக் கூடியது ஆகும். ட்ரான்ஸ் கொழுப்பு எனப்படும் ஓர் வகையின் முதன்மை பிரிவாக இது கருதப்படுகிறது. உணவுப் பொருள் தயாரிப்பாளர்கள் இது மிகவும் மலிவாகக் கிடைப்பதால் இதையே பயன்படுத்துகின்றனர். இந்த எண்ணெய், இதயத்திற்கு கேடு விளைவிக்கும் எல்.டி.எல் (LDL) கொழுப்பை அதிகரிக்க செய்கிறது. இதனால், இதய நோய்கள், நீரிழிவு, ஊட்டச்சத்து குறைப்பாடு போன்றவை ஏற்படும். ட்ரான்ஸ் கொழுப்பு உள்ள உணவுகள், வெண்ணெய், குக்கீஸ் (பிஸ்கட்), சாலட், பிரெட் மற்றும் சிப்ஸ் உணவுகளில் இதன் கலப்பு இருக்கின்றது.

செயற்கை இனிப்பூட்டிகள்
ARTIFICIAL SWEETENERS எனப்படும் செயற்கை இனிப்பூட்டிகள் பெரும்பாலான உணவுகளிலும், குளிர் பானங்களிலும் கலக்கப்படுகிறது. சுக்ரலோஸ் (Sucralose) என்பது சர்க்கரையில் இருந்து எடுக்கபப்டும் இயற்க்கை இனிப்பு ஆகும். ஆனால் ஆராச்சியாளர்கள் மூன்று ஹைட்ரஜன்-ஆக்சிஜன் மூலக்கூறுகளை கிளோரின் அணுக்களுடன் சேர்த்து சாச்சரின் (Saccharin -sweet'N low) எனும் இரசாயன பொருளைத் தயாரிக்கின்றனர்.
இது பெட்ரோலியம் பொருளில் இருந்து தயாரிக்கபடுவது ஆகும். உலக உணவுக் கட்டுப்பாடு அமைப்பினர் இதைக் குறித்து இன்னும் பல விவாதங்கள் செய்துக் கொண்டிருக்கையில். இது, நாம் பருகும் பல குளிர்பானங்களில் சேர்க்கப்பட்டு வருகிறது. இதனால் மூளைக்கட்டிகள் ஏற்படலாம் என்று செய்திகள் கசிந்து வருகின்றன.

உயர் பிரக்டோஸ் கார்ன் சிரப்
உயர் பிரக்டோஸ் கார்ன் சிரப் (HIGH FRUCTOSE CORN SYRUP), சர்கரைக்கு பதிலாக மிக மலிவாக கிடைக்கும் பொருள் இதுவாகும். இது மூளையின் தசைகளை வலுவிழக்க செய்யும் என்று கூறப்படுகிறது. இதில் மெர்குரியில் இருக்கும் நச்சுகள் கொண்டிருப்பதாகவும், இதை அதிகப்படியாக எடுத்துக் கொண்டால் நீரிழிவு நோய், உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் எழும் என்றும் கூறப்படுகிறது.

மோனோசோடியம் குளுட்டோமேட் - MSG
மோனோசோடியம் குளுட்டோமேட் என்று கூறப்படும் MSG, நாம் தினசரி பயன்படுத்தும் 40க்கும் மேற்பட்ட சராசரி உணவுப் பொருட்களில் சேர்க்கப்படுகிறது. அதிகப்படியான மோனோசோடியம் குளுட்டோமேட் நரம்பு மண்டலத்தையும், அதன் செல்களையும் வெகுவாக சேதமடைய செய்யும். இது, நீங்கள் பருகும் டயட் பானங்கள், ஃபாஸ்ட் ஃபுட், இன்ஸ்டன்ட் சூப், மற்றும் பேக்கேஜ் செய்யப்பட்ட காய்கறி உணவுகளிலும் சேர்க்கப்படுகிறது. மேகி தடை செய்யப்பட்டதற்கு இது தான் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

பி.எச்.எ மற்றும் பி.எச்.டி
பி.எச்.எ மற்றும் பி.எச்.டி (BUTYLATED HYDROXYANISOLE & BUTYLATED HYDROXYTOLUENE), ஆன்டி-ஆக்சிடன்ட்ஸ் பொதுவாக உடலுக்கு நன்மை விளைவிப்பது. ஆனால், பி.எச்.எ மற்றும் பி.எச்.டி போன்றவை பதப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படுகிறதாம். சூயிங் கம், உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்ற உணவுப் பொருட்களில் இது சேர்க்கப்படுகிறது. இது பசியின்மை, சிறுநீரக செய்திறன் குறைபாடு, முடி கொட்டுதல், புற்றுநோய், கருவின் வலுக் குறைதல் போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கும்.

சோடியம் நைட்ரேட் மற்றும் சோடியம் நைட்ரைட்
உணவுன் நிறத்திற்காக பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் தான் இந்த சோடியம் நைட்ரேட் மற்றும் சோடியம் நைட்ரைட். இவை, இறைச்சி, ஹாட் டாக்ஸ், மற்றும் பன்றி இறைச்சி போன்றவற்றில் சேர்க்கப்படுகிறது. இது, வயிற்றில் உருவாகும் அமிலங்களோடு கலக்கும் போது, நைற்றசமைன்களை (nitrosamines) உருவாக்குகிறது. இதனால், வயிறு, மூளை, உணவுக்குழாய் பாதிப்பு மற்றும் சிறுநீர்ப்பை புற்றுநோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.

புரோப்பில் கேலட் - PROPYL GALLATE
இதுவும், உணவைகளை பதப்படுத்தி வைக்க சேர்க்கப்படும் ஆன்டி- ஆக்சிடன்ட் ஆகும். முக்கியமாக கொழுப்பு மற்றும் எண்ணெய் உணவுகளை பதப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. இது புற்றுநோய் கட்டிகள் உருவாக காரணமாக இருக்கிறது. காய்கறி எண்ணெய், இன்ஸ்டன்ட் சூப் வகை உணவுகள், இறைச்சி பொருட்கள், சூயிங் கம் மற்றும் அழகு சாதனப் பொருட்களில் இது சேர்க்கபடுகிறது.

சோடியம் பென்சோயேட் மற்றும் பென்சோயிக் அமிலம்
நீங்கள் தினசரி சாப்பிடும் அடைக்கப்பட்ட பழரசங்கள், ஊறுகாய் போன்ற உணவுகளில் இது சேர்க்கப்படுகிறது. இந்த உணவுகளில் நுண்ணுயிர்கள் உருவாகி வளர்கிறதாம். இது, மக்களுக்கு அலர்ஜிகள் உருவாக காரணமாக இருக்கின்றது. சோடியம் பென்சோயேட் பானங்களில் சேர்க்கப்படுவதால் லூக்கிமியா, மற்றும் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருக்கிறது.

பொட்டாசியம் ப்ரோமேட் - POTASSIUM BROMATE
பிரெட் உணவுகளில் சேர்க்கப்படும் இரசாயனம் தான் இந்த பொட்டாசியம் ப்ரோமேட், பிரெட் அளவை அதிகரிக்கஇது பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாடுகளில் இது தடைசெய்யப்பட்டிருக்கிறது. ஆய்வுக்கூடத்தில் விலங்குகளில் பரிசோதனை செய்து போது, இது புற்றுநோய் உண்டாகக் காரணமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

உணவு செயற்கை நிறங்கள்
நாம் சாப்பிடும் பல்வேறு உணவுகளில் கவர்ச்சிக்காகவும், ஈர்ப்புக்காகவும் செயற்கை வண்ணங்கள் சேர்க்கப்படுகின்றன. சாக்லேட், கேக், ஐஸ் கிரீம் போன்ற அனைத்து உணவுகளிலும் இந்த செயற்கை வண்ணங்கள் சேர்க்கப்படுகின்றன. இதனால் குரோமோசோம் பிரச்சனைகளும், தைராய்டு கட்டிகளும் ஏற்படும் அபாயம் இருக்கின்றது.



Click it and Unblock the Notifications











