Latest Updates
-
இன்றைய ராசிபலன் 10 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்கள ஆபத்துகள் துரத்தப்போகுதாம் -
சூரியன் சுக்கிரனின் ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
மாங்காய் வாங்குனா இந்த மாதிரி ஒருதடவை ரசம் வைச்சு பாருங்க - வேற லெவல் சுவையில் இருக்கும் -
விஜய் - திரிஷா வீடியோ: இது வெறும் நட்பா? இணையத்தை அதிரவைக்கும் அந்த வைரல் தருணம்! -
வார ராசிபலன் (10 May 2026-16 May 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கதவை தட்டுமாம் -
பட்டப்பகலில் நடந்த கொடூரம்! பெங்களூரு சம்பவத்திற்குப் பின் பெண்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய பாதுகாப்பு ரகசியங்கள்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் பெப்பர் வறுவல் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு டக்கரா இருக்கும் -
Happy Mother's Day 2026: அன்னையர் தினத்தன்று உங்க அம்மாவிடம் இந்த வாழ்த்து செய்திகளில் ஒன்றை சொல்லுங்க -
அம்மாவுக்கு இந்த செடிகளை பரிசளித்தால் அதிர்ஷ்டம் கொட்டும்! அன்னையர் தினத்தில் இதை மட்டும் செய்யாதீங்க! -
கேரளா ஸ்டைல் நாடன் மாம்பழ குழம்பு ரெசிபி - ஒருதடவை ட்ரை பண்ணுங்க, செமையா இருக்கும்
நவரச நாயகன் போல துள்ளலா, இளமையா இருக்கணுமா, அப்போ நவதானியங்கள் சாப்பிடுங்க!
நமது உணவுப் பழக்கங்களில் மருத்துவ குணங்கள் இருக்கின்றன, என சொல்வதை விட. நாம் மருத்துவ குணமுடைய பொருட்களைக் கொண்டு தான் நமது உணவுப் பழக்கத்தை மேம்படுத்தினோம் என்று சொல்வது தான் சரியானதாக இருக்கும். நாம் முந்தைய காலத்தில் விளைவித்த உணவுகள், யாருக்கும் பாதிப்பின்றி, உடலுக்கும் ஆரோக்கியமாக இருந்தது. ஆனால், இன்றைய காலத்தில் இயற்கை உரங்களை மறந்து செயற்கை உரங்களை பயன்படுத்தி விளைவிக்கப்படும் பயிர்களில் இருக்கும் உண்மையான சத்துகள் கூட நமது உடலுக்கு கிடைப்பதில்லை.
வாழ்நாளின் அளவை அதிகரிக்கும் அற்புதமான சில ஆரோக்கிய உணவுகள்!!!
இன்றைய இளைஞர்கள் பலர் சத்தான உணவுகளை புறந்தள்ளிவிட்டு, உடலுக்கு தீமையை ஏற்படுத்தும் மேற்க்கத்திய பிட்சா, பர்கர், ஃப்ரைடு ரோல் வகை உணவுகளை பெரிதும் நாடி செல்கின்றனர். இருந்தாலும், சில இடங்களில் தற்போது பழைய உணவு பழக்கம் மாறி வருகிறது. அந்த வகையில், நாம் மிகவும் நன்மை வாய்ந்த உணவு வகையான நவதானியங்களை பற்றியும், அதன் மருத்துவ நலன்கள் பற்றியும் தெரிந்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். உடல்திறனை அதிகரிக்க, உடலுக்கு தேவையான அனைத்து சத்துகளையும் தருவதிலும் நவதானியங்கள் பெரிய பங்குவகிக்கிறது...
விந்தணு உற்பத்தி அதிகரிக்க வேண்டுமா? அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க!

நெல்
அரிசியில் பச்சரிசி, புழுங்கல் அரிசி என்பவை குறிப்பிடத்தக்கவை. பச்சரிசி என்பது நெல்லைக் குத்தி அரிசி எடுத்து அப்படியே பயன்படுத்துவதாகும். நெல்லை முறையாக அவித்து குத்தி பெறுவது புழுங்கலரிசி. பச்சரிசி எளிதில் ஜீரணிக்காது. கொழுப்பு சத்தை அதிகமாக்கும். இதனால், உடல் பருமனாகும். உடல் இளைத்தவர்கள் பச்சரிசியை சாப்பிடலாம். வயிறு தொடர்பான நோய் உள்ளவர்கள் பச்சரிசியை தவிர்க்க வேண்டும். புழுங்கல் அரிசி உடல் நலனுக்கு ஏற்றது. மலச்சிக்கல் ஏற்படாது. சம்பா அரிசி வகையில் சீரகச்சம்பா ஆரம்பநிலை வாத நோய்களை போக்க வல்லது. பசியை ஊக்குவிக்கும். ஈர்க்குச்சம்பா அரிசி சாப்பிட ருசியானது. ஆனால், பித்தம்கூடும். குண்டுசம்பா, மிளகு சம்பா, மல்லிகை சம்பா, மணிச்சம்பா, கோரைச்சம்பா, கடைச்சம்பா, குறுஞ்சம்பா போன்றவை மருத்துவகுணம் நிறைந்தவை.

கோதுமை
அரிசியை விட கோதுமையில் அதிகமான சத்துக்கள் உள்ளன. வட இந்திய மக்கள் கோதுமையை முழுநேர உணவாக பயன்படுத்துகின்றனர். எண்ணெய் நெய் விடாமல் சப்பாத்தியாக செய்து சாப்பிடுவது நல்லது. உடல் நலனுக்கு உகந்தது. கோதுமையில் புரதம், சர்க்கரை, சுண்ணாம்பு, பாஸ்பரஸ், இரும்பு, கரோட்டின், நியாசிக் போன்ற பல சத்துக்கள் உள்ளன. இது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த உணவாகும். மலச்சிக்கல் உண்டாகாது.

பாசிப்பயிறு
வைட்டமின் மற்றும் இரும்புச்சத்துகள் நிறைந்து காணப்படுகிறது. இது, உடல் எடை குறைக்க, இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த மற்றும் சருமம் சார்ந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட வெகுவாக உதவுகிறது.

துவரை
துவரையில், வைட்டமின், பாஸ்பரஸ், கால்சியம், மாங்கனீஸ், சோடியம் மற்றும் இரும்புச்சத்துகள் இருக்கின்றன. இது, மண்ணீரல், வயிறு மற்றும் கணையம் சார்ந்த பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு தரும்.

மொச்சை
மொச்சையில் வைட்டமின் ஏ, பி, சி மற்றும் ஈ என நிறைய வைட்டமின் சத்துகள் இருக்கின்றன. இது, இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. மற்றும் நீரிழிவு மற்றும் இதயம் சார்ந்த கோளாறுகளுக்கு மொச்சை பயன் தரும். உடல் எடையை குறைக்க விரும்புவோர் மொச்சையை சாப்பிடுவது நல்லது. ஏனெனில், இது உடல் எடையை சீரிய முறையில் கட்டுப்படுத்தும்.

எள்ளு
எள்ளில் நிறைந்த புரதச்சத்தும், மக்னீசியம் சத்துகளும் இருக்கின்றன. இது, நீரிழிவு நோயை கட்டுப்படுத்தவும், இரத்த அழுத்தத்தை குறைக்கவும், தீய கொழுப்புச்சத்தை கரைக்கவும் உதவுகிறது. மற்றும் இதய பாதுகாப்பிற்கு எள்ளு நல்ல பயன் தருகிறது.

கொள்ளு
கொள்ளில், கால்சியம், பாஸ்பரஸ், அமினோ அமிலம் மற்றும் இரும்புச்சத்துகள் இருக்கின்றன. இது ஆண்களுக்கு விந்தணு உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. மற்றும் சளி, காய்ச்சல், ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளுக்கும் கொள்ளு நல்ல தீர்வளிக்கிறது.

உளுந்து
உளுந்தில், நிறைய புரதச்சத்து இருக்கிறது. இது நமது உடல்திறன் அதிகரிக்க உதவுகிறது. இதில் இருக்கும் நார்ச்சத்து அஜீரண கோளாறுகளை சரி செய்ய உதவுகிறது.

கொண்டைக்கடலை
உடல்திறனை அதிகரிக்க உதவும் கடலை, உடல் எடை குறைக்கவும், இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் தொல்லைகளில் இருந்து விடுபடவும் நல்ல தீர்வளிக்கிறது.



Click it and Unblock the Notifications